முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

சென் சோளம் (காட்டு சோளம்)
இந்த ரகம் சேலம் மாவட்டத்தில் இருக்கும் பாரம்பரிய ரகங்களில் ஒன்றாகும். பயிரின் கால அளவு 120 நாட்கள் மற்றும் அனைத்து பருவத்திற்கும் ஏற்றது. தானிய நிறம் அடர் சிவப்பு, தானிய கதிர் நடுத்தரமானது மற்றும் நீள்வட்ட வடிவமுடையது. இது முக்கியமாக கால்நடை தீவனமாக சாகுபடி செய்யப்படுகிறது. பழங்காலங்களில், சோளம் தானியங்கள் உணவு பொருளில் பயன்படுத்தப்பட்டது, ஆனால் தற்போது இதற்கு உணவுகளில் முக்கியத்துவம் அளிப்பதில்லை,  விவசாயிகள் மற்ற சோள ரகங்களை காட்டிலும் இந்த ரகத்தை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். பசுந்தீவன முக்கியமாக பால் தரும் கறவை இனங்களின் பால் உற்பத்தியை தூண்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. 20 கிலோ பசுந்தீவன ஒரு கால்நடைக்கு ஒரு நாளுக்கு (குறிப்பாக பால் தரும் மாட்டினங்களுக்கு). உலர் தீவனம் அனைத்து கால்நடைகளுக்கும் ஏற்றது.  கதிர் முற்றியபிறகு, தானிய கதிர்களை கத்தி கொண்டு அறுவடை செய்து 2-3 நாட்கள் வரை வெயிலில் உலர வைக்க வேண்டும்.  தானியங்களை குச்சி கொண்டு தானியக் கதிரிலிருந்து பிரிக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு பிறகு இந்த தானிய விதைகளை அடுத்த விதைப்பிற்கு பயன்படுத்தலாம்.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014