கருப்பு எள்
இந்த பாரம்பரிய கருப்பு எள் ராமநாதபுரம் மற்றும் பரமகுடி தாலுகாவில் பயிர் செய்யப்படுகிறது. இது சாதாரண வெள்ளை இரகத்தை விட இந்த கருப்பு இரகத்தில் பல்வேறு இரகங்கள் உள்ளன. இவற்றில் மற்ற இரகங்களைவிட அதிக எண்ணெய் தன்மை கொண்டவைகளாகவும், காலஅளவு (75 நாட்கள்) மற்ற இரகங்களை விட (90நாட்கள்) அதிகமாகும். இது மானாவாரி பயிராக சாகுபடி செய்யும் போது மொத்த மகசூல் ஒரு ஏக்கருக்கு 400 கிலோ கிடைக்கும், மானாவாரி பயிராக சாகுபடி செய்யும் போது மொத்த செலவு ரூ.500/- ஆகும். மற்ற இரகங்களை காட்டிலும் இந்த இரகத்தில் அதிக கிளைகளுடன் தீவிர வளர்ச்சி பெற்று வளரும் இரகம். விவசாயிகள் அடுத்த விதைப்பிற்காக இவ்விதைகளை சேமிப்பர். இதற்கென்று தனிப்பட்ட நிரந்தர பருவம் என்று எதுவும் இல்லை. இவற்றை விவசாயிகள் தேவையை அடிப்படையாகக் கொண்டு சித்திரை, வைகாசி அல்லது ஆடி (ஏப்ரல்-ஜீலை) விதைப்பர். இது மழைக்காலத்தில் விதைப்பதற்கு ஏற்றதல்ல, விதைப்பதால் சில பிரச்சனைகளை ஏற்படும். |