முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

கடலைக்காய் – பாரம்பரிய நிலக்கடலை
இந்த இரகம் வேலூர் மாவட்டம் வேலங்காடு கிராமத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. விதைப்பதற்கு முன் நிலத்தை 3-4 முறைகள் நாட்டுக் கலப்பை அல்லது விவசாயி கொண்டுள்ள கலப்பையால் உழவு செய்ய வேண்டும்.  5 டன்கள் தொழுவுரம் கொட்டி அவற்றை அடியுரமாக பயன்படுத்த வேண்டும்.  இந்த நிலக்கடலையை விதைப்பதற்கு ஏற்ற பருவம் ஜீன் – ஆகஸ்ட் (இது ஒரு மானாவாரி பயிர் ஆகும்.) இப்பயிரின் காலம் 90 நாட்கள். ஒரு ஏக்கர் நிலத்திற்கு 50 கிலோ விதைகள் தேவைப்படும். விதைகள் நாட்டுக் கலப்பையால் விதைக்கப்படும். 30 நாள் நடவிற்கு பிறகு, முதல் களையெடுப்பு இரண்டாவது களையெடுப்பு 60வது நாளில் ஒவ்வொரு களையெடுப்பிற்கும் 20 பெண் வேலையாட்கள் தேவைப்படுவார்கள். இந்த இரகம் விதைக்கப்பட்ட 90 நாட்களுக்கு பிறகு அறுவடைக்கு வரும். ஒரு ஏக்கர் நிலத்திற்கு 20-25 பெண் வேலையாட்கள் ஒரு நாளைக்கு தேவைப்படுவார்கள். ஒரு ஏக்கருக்கான மகசூல் 5000 கிலோவாகும். ஒரு கிலோ நிலக்கடலை ரூ.10/- ஒரு ஏக்கருக்கான சாகுபடி செலவு ரூ.5000/-

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014