முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

சிவப்பு எள்
இந்த இரகம் இராமநாபுரம் மாவட்டம் ரகுநாதபுர கிராமத்தில் சாகுபடி செய்யப்படுகிறது.  இந்த எள் டிசம்பர் மாதத்தில் விதைத்து மார்ச் மாதத்தில் அறுவடை செய்யலாம்.  இந்த எள் சிவப்பு நிறமாகவும் அதிக எண்ணெய் தன்மை கொண்டதாகவும் இருக்கும். இது மானாவாரி பயிராக சாகுபடி செய்யும் போது 320கிலோ/ஏக்கர் மகசூல் கிடைக்கும். இது நல்ல சந்தை விலையை கொண்டிருக்கும் (ரூ.18/கிலோ). விதையளவு 1.5 கிலோ/ஏக்கர், கடந்த வருட விதைகளை சேகரித்து விதைக்க பயன்படுத்த வேண்டும். மற்ற இரகங்களை காட்டிலும் அதிக எண்ணெய் தன்மை கொண்டிருக்கும். மற்ற இரகங்களின் கால அளவு (70 நாட்கள்) அதிக கால அளவு (90 நாட்கள்) கொண்டிருக்கும்.  அறுவடை செய்யப்பட்ட விதைகளை எந்த வித ரசாயனமும் இன்றி ஒரு வருட காலம் வரை சேமிக்கலாம்.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014