முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

நாட்டு மிளகு – மிளகு
சாதாரண மிளகு ஒப்பிடும் போது நாட்டு மிளகு அளவில் சிறியது ஆனால் காரத்தன்மை அதிகமாக இருக்கும். இதன் விளைச்சல் குறைவாக இருந்தாலும், தரம் நிறைவாக இருக்கும். இது நாமக்கல் மாவட்டம் கொல்லி மலையில்  இறுக்கமான நூல்களின் மூலம் சாகுபடி செய்யப்படுகிறது. நூல்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிளகு செடியின் அருகில் செடியின் துணைக்காக கட்ட வேண்டும். பொதுவாக, மே – ஜீன் (வைகாசி – ஆடி) மாதங்களில் பூக்க ஆரம்பித்து மார்ச் மாதத்தில் காய்க்கும். பெர்ரி குலைகள் பறிப்பதன் மூலம் அறுவடை செய்யப்படுகிறது. ஒவ்வொரு செடியிலிருந்து கிட்டத்தட்ட 10 கிலோ மிளகு கிடைக்கும்.

அறுவடை பின்சார் செயல்பாடுகள்
இது மிளகிற்கான முக்கிய செயல்பாடுகள். இரண்டு முறைகளில் அறுவடைக்குப் பின் மிளகு பதப்படுத்தப்படுகிறது.

  1. வெள்ளை மிளகு
  2. கருப்பு மிளகு

1.வெள்ளை மிளகு
அனைத்து மிளகையும் ஒரு நாள் முழுவதும் நீரில் ஊற வைக்க வேண்டும் பின் அதன் வெளித்தோலை கவனமாக உரித்து எடுக்க வெண்டும். அதன் பிறகு, வெயிலில் உலர வைத்தால் அது தான் வெள்ளை மிளகு. இதற்கு அதிக சந்தை விலை கிடைக்கிறது. எனினும், இச்செயல்பாட்டிற்கு அதிக வேலையாட்கள் மற்றும் நேரம் தேவைப்படுகிறது.

2.கருப்பு மிளகு
அறுவடை செய்யப்பட்ட மிளகை கால்களால் அழுத்த வேண்டும். அதன் பிறகு அவற்றை வெந்நீரில் கொதிக்க வைக்கப்பதால் கருப்பு நிறம் பெறப்படுகிறது. கருப்பு மிளகு நிறம் செறிவு, அளவு இவற்றை பொறுத்து சந்தை விலையிருப்பதால் மிளகை தேர்ந்தெடுத்தல், கொதிக்க வைத்தல், வண்ண செயல்பாடுகள் போன்றவற்றை மிக கவனமாக செய்ய வேண்டும். 1 கிலோ கருப்பு மிளகின் விலை ரூ.80-100/-

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014