முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு |
|
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு | |
பாரம்பரிய பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பு முறைகள் பூச்சி விரட்டிகள் இலை கதம்ப சாறு குறிப்பிட்ட தாவரத்திலிருந்து இலைகளை சேகரித்து எடுத்து, நன்கு நீரில் கழுவி சுத்தம் செய்து அவற்றை நன்கு அரைத்து, அதன் சம பகுதி ஏற்ப நீரில் அல்லது மாட்டு சிறுநீரில் கரைத்து ஒரு நாள் இரவு முழுவதும் எந்தவித இடையூறுமின்றி ஊற விட வேண்டும். இந்த கலவை காலையில் ஓரு மூடப்பட்ட கொள்கலனில் 70º - 80º செ வெப்பநிலையில், ½ - 1 மணி நேரம் கொதிக்க வைப்பதால் நல்ல விளைவை ஏற்படுத்தும். கொதிக்க வைக்கப்பட்ட கலவையை 12 மணி நேரம் குளிர வைத்து, குளிர வைக்கப்பட்ட கலவையை ஒரு நல்ல காடா துணி மூலம் வடிகட்டி நல்ல பாட்டிலில் 15 நாட்களை வரை சேமிக்கலாம். இந்த கலவை பரிந்துரைக்கப்பட்ட அளவு நீரில் கலந்து பயிருக்கு பயன்படுத்தலாம். வேப்ப இலை சாறு 5 கிலோ வேப்ப இலையை நன்றாக அரைத்து 6 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். இக்கலவையை காலையில் நன்கு கொதிக்க வைத்து, அக்கலவையுடன் 150 கிராம் சோப்பு தூள் சோத்து, மற்றும் 60 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும். புங்கை இலை சாறு கர்நாடக விவசாயிகள் நதி பக்கங்களிலும், சாலை பக்கங்களிலும் மற்றும் காடுகயிலும் மற்றும் நடவுக்கு முன் தண்ணீர் தேங்கி நிற்கும் வயல்களிலும் இருக்கும் புங்கை இலையை சேகரித்து, இந்த இலைகளை நன்றாக மண்ணில் 2 அல்லது 3 நாட்கள் முற்றிலும் மட்கிய பிறகு சேற்றுழவு செய்கின்றனர். ஐப்போமியா இலை சாறு 5 கிலோ ஐப்போமியா இலைகளை குளத்திலிருந்து வெட்டி எடுத்து, அவற்றிலிருந்து கழிவுகள் மற்றும் உலர்ந்த தண்டு போன்றவற்றை நீக்கி விட வேண்டும். அவற்றை நன்கு அரைக்க வேண்டும். அவற்றை அதனுடன் சம அளவில் நீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அதன் பிறகு இக்கொதிக்கும் கலவையுடன் சிறிது மாட்டு சிறுநீர் கலக்க வேண்டும். நொச்சி இலை சாறு இது பொதுவாக சாலை ஓரங்களில் கிடைக்கக்கூடியது. இவற்றில் நல்ல இலைகளை பறித்து, சுத்தம் செய்து நன்கு அரைக்க வேண்டும். இவற்றை நல்ல சுத்தமான, வடிகட்டிய 3 லி மாட்டு சிறுநீருடன் ஒரு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறு நாள் காலையில் இந்த ஊறிய கலவையை நன்றாக கலக்கி 70-80º செ வெப்பநிலையில் 3-4 மணி நேரம்கொதிக்க வைக்க வேண்டும். இக்கலவையை மிகவும் அடர்திரவமாக இருந்தால் அவற்றுடன் காய்ச்சி வடிகட்டிய சுத்தமான தண்ணீரை சேர்த்து ஒரு காடா துணியால் வடிகட்டி அவற்றை ஒரு நாள் இரவு முழுவதும் குளிர்விக்க வேண்டும். 150 கிராம் அளவு சோப்புத்தூளை 250 மிலி தண்ணீருடன் கலந்து இக்கலவையுடன் சேர்க்க வேண்டும். இந்த இறுதி கலவையில் 50 மிலி கலவையுடன் 1 லி தண்ணீர் கலந்து தெளிக்கலாம். எருக்கு இலை சாறு 1 கிலோ எருக்கு இலையை அவற்றின் பாலுடன் சேகரித்து, அவற்றை நன்கு சுத்தம் செய்து, அவற்றை நறுக்கி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இக்கலவையை 50 லிட்டர் நீருடன் கலந்து வடிகட்டி தெளிக்கலாம். இலை சாறு , டினோஸ்போரா இலையை நறுக்கி அவற்றை நன்கு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். இக்கலவையைில் நெல் நாற்றுகளை ஒரு நாள் இரவு முழுக்க ஊற வைத்து பின் நடவு செய்ய வேண்டும். 10-15 கிலோ நறுக்கிய இலைகள், ஒரு ஹெக்டேருக்கு தேவையான நாற்றுகளை நேர்த்தி செய்ய தேவைப்படும். இந்த முறை நெல்லில் பச்சைத்தத்துப் பூச்சி எதிராக பயனுள்ளதாக அமையும். காட்டாமணக்கு தாவர இலை சாறு சுத்தமான காட்டாமணக்கு தாவர இலை மற்றும் தண்டை சுத்தமான நீருடன் நன்கு அரைக்க வேண்டும், இந்த எண்ணெய் பசையுடன் கூடிய 5 கிலோ காட்டாமணக்கு சாறு கலவையை 5 லி மாட்டு சிறுநீருடன் ஒரு நாள் இரவு முழுவதும் வைக்க வேண்டும் மற்றும் 3-4 மணி நேரம் 2லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த கலவையை 5 லிட்டர் அடர் கலவையாகும் போது அவற்றை ஒரு காடா துணியின் மூலம் வடிகட்டி தெளிக்க வேண்டும். புகையிலை கழிவு சாறு புகையிலை கழிவுகளை புகையிலை அறுவடைக்கு பின் வயல் அல்லது பண்ணையிலிருந்து (5 கிலோ) சேகரித்து, அவற்றை துண்டுகளாக நறுக்கி 5 லி மாட்டு சிறுநீரில் 7 நாட்கள் வரை ஊறவைக்க வேண்டும். இக்கலவையுடன் 150 கிராம் சோப்புத்தூளுடன் தண்ணீர் சேர்த்து இக்கலவையில் சோக்க வேண்டும். இக்கலவையில் 50 மிலி எடுத்து அவற்றுடன் 1 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். கற்றாழை சாறு சாலை ஓரங்களில் வளர்ந்திருக்கும் கற்றாழை வெட்டி, சுத்தம் செய்து, துண்டுகளாக நறுக்கி அவற்றை நன்றாக அரைக்க வேண்டும்.இவற்றை நல்ல சுத்தமான தண்ணீருடன் கலந்து 24 மணி நேரம் ஊற வைத்து நன்கு கலக்கி மஸ்லின் துணி கொண்டு வடிகட்ட வேண்டும். இந்த கலவை 100 மி.லிட்டருடன் 500 மி.லி மாட்டு சிறுநீர் மற்றும் 10 கிராம் சோப்பு தண்ணீரை கலந்து தெளிக்க வேண்டும். பூண்டு கிராம்பு சாறு சுத்தமான பூண்டை துண்டுகளாக வெட்டி அவற்றை நன்கு அரைத்து அவற்றை அதன் சம அளவு மண்ணெய்யில் ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். இச்சாற்றை நன்றாக கலக்கி காடா துணியில் வடிகட்ட வேண்டும்.இச்சாற்றுடன் 150 கிராம் சோப் தூளை கலந்து ஒரு சுத்தமான பாட்டிலில் சேமித்து வைக்கலாம். பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சாறு பச்சை மிளகாயை காய்ச்சி வடிகட்டிய நீரில் சுத்தம் செய்து, அவற்றை நன்றாக அரைத்து, அதனுடன் 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து அவற்றை 70-80º செ வெப்பநிலையில் அக்கலவை பாதியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். சுத்தமான பூண்டு கிராம்பை நன்றாக துண்டுகளாக நறுக்கி, அவற்றை நன்றாக அரைத்து அதன் சம அளவுக்கு மண்ணெய் கலந்து 12-14 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் இவற்றை காடா துணி மூலம் வடிகட்ட வேண்டும். 150 கிராம் சோப்பு தூளுடன் 250 மிலி தண்ணீர் கலந்து இந்த கலவையுடன் கலக்க வேண்டும். இக்கலவையில் 20 மிலி எடுத்து அதனுடன் 1 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். வேப்பங் கொட்டைச் சாறு வேப்பங் கொட்டைகளை சேகரித்து, சுத்தமான நீரில் சுத்தம் செய்து நிழலில் சில நாட்களை உலர வைக்க வேண்டும். இக்கொட்டையின் வெளி தோல் உடைந்து மற்றும் கொட்டையின் உள் பகுதியை சேகரித்து நன்கு அரைத்து பசை போல் தயாரித்து அவற்றுடன் 200 லிட்டர் நீருடன் 150 மிலி சோப்பு கலவையுடன் கலந்து ஒரு நாள் இரவு முழுவதும் இடையூறுயின்றி வைக்க வேண்டும், மறுநாள் காலையில் இதை வடிகட்டி தெளிக்க வேண்டும். மலைவேம்பு கொட்டை நீர்மக் கரைசல் மலைவேம்பு கொட்டையை நீரில் ஊறவைத்து பின்னர் அரைமணி நேரம் கொதிக்க வைத்து 24 மணி நேரம் இடையூறுயின்றி வைக்க வேண்டும். 1 லிட்டர் மாட்டுச் சிறுநீருடன் 150 கி சோப்பு தூள் சேர்த்து கலக்கி அவற்றை வடிகட்ட வேண்டும். பின் இந்த கலவையை மலைவேம்பு கொட்டை நீர்மக் கரைசலுடன் கலந்து எதிர்கால பயன்பாட்டிற்காக சேமித்து வைக்க வேண்டும். அரளி விதை சாறு அரளி விதைகளை சேகரித்து, சில நாட்கள் நிழலில் உலர வைத்து, அதை தூள் செய்து, இத்தூளை சலித்து நீருடன் கலந்து ஒரு நாள் இரவு முழுவதும் இடையூறுயின்றி ஊற வைத்து, பின் காடா துணியில் வடிகட்டி தெளிக்க வேண்டும். வேம்பு எண்ணெய் தெளிப்பு வேப்ப எண்ணெய் (3 லி) 200 மிலி சோப்பு கரைசலுடன் கலந்து ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும். இலுப்ப எண்ணெய் தெளிப்பு 30மிலி இலுப்ப எண்ணெய்யுடன் 5 கிராம் சோப்பு கலந்து இதனுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிக்க வேண்டும். மீன் எண்ணெய் சோப்பு கரைசல் 1 லிட்டர் மீன் எண்ணெய் சோப்பு கரைசலுடன் நீர் மற்றும் புகையிலை சாறு மற்றும் சோப்பு கலக்க வேண்டும். இவற்றை காலை வேளையில் தெளிக்க வேண்டும். சிகரெட் தூள் வடிகட்டாத அல்லது பாதி வடிகட்டிய சிகரெட் முனை தூளை 9 லி நீருடன் சேர்த்து கொதிக்க வைத்தல். மஸ்லின் துணி மூலம் வடிகட்டி மற்றும் வெப்பப்படுத்தும் போது மெல்லிய பழுப்பு நிற சோப்பு கலவை ஒன்று கிடைக்கும். 1 பங்கு இக்கலவையுடன் 4 பங்கு நீர் சேர்த்து தெளிக்க வேண்டும். மாட்டு சாணம் சாறு பசுமையான மாட்டு சாணம் 100 கிராம் சேகரித்து 100 மிலி நீரில் கரைத்து ஒரு காடா துணியில் வடிகட்டி தெளிக்க வேண்டும். வேப்ப இலை தூள் பசுமையான வேப்ப இலைகளை சேகரித்து, நன்றாக தூசி மற்றும் அழுக்கை சுத்தம் செய்து, நிழலில் 15 நாட்கள் உலர வைக்க வேண்டும். பிறகு உலர்த்தப்பட்ட இலைகளை பொடி செய்து விதை நேர்த்திக்கு பயன்படுத்தலாம். ஆடாதொடா இலை கழிவு ஆடாதொடா இலைகளை சேகரித்து அதிலிருந்து தூசி மற்றும் அழுக்கை சுத்தம் செய்து நிழலில் உலரவைத்து தூள் செய்து சேமித்து வைத்து எதிர்கால தேவைக்கு பயன்படுத்தலாம். கஞ்சா இலை கழிவு கஞ்சா இலைகளை சேகரித்து, நிழலில் உலரவைத்து, அவற்றை தூள் செய்து பயன்படுத்தலாம். நொச்சி இலை கழிவு நொச்சி இலைகளை சேகரித்து, நிழலில் 15 நாட்கள் உலரவைத்து, நன்றாக தூள் செய்து பயன்படுத்தலாம். புகையிலை இலை கழிவு புகையிலைகளை சேகரித்து, நிழலில் உலரவைத்து, நன்றாக தூள் செய்து பயன்படுத்தலாம். ஐப்போமியா இலை கழிவு ஐப்போமியா இலைகளை பயன்படுத்தாத நிலம், பாசன கால்வாயிலிருந்து சேகரித்து, 15 நாட்கள் உலரவைத்து, பிறகு நன்றாக தூள் செய்து பிறகு பயன்படுத்தலாம். புகையிலை கழிவு புகையிலை செடியிலிருந்து கழிவுகளை சேகரித்து, 15 நாட்கள் நிழலில் உலரவைத்து பிறகு நன்றாக தூள் செய்ய வேண்டும். வேம்பு மற்றும் ஊமத்தை இலை தூள் சுத்தமான, வேம்பு மற்றும் ஊமத்தை இலைகள் சேகரித்து நிழலில் உலரவைக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு பிறகு உலரவைக்கப்பட்ட இலைகளை தூள் செய்து சேமித்து எதிர்கால தேவைக்கு பயன்படுத்தலாம்.வேம்பு மற்றும் ஊமத்தை இலைகளை சரி சம அளவு சேர்க்க வேண்டும். வேப்பங் கொட்டை தூள் வேப்பம் பழங்களை சேகரித்து, அவற்றின் தசை மற்றும் தோல் நீக்கி, ஒரு வாரம் நிழலில் உலர வைக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு பிறகு, கொட்டையின் விதையுறை நீக்கி பின் அவற்றை நன்றாக பொடி செய்ய வேண்டும். கண்ணாடி ஜாடியில் இவற்றை சேமித்து எதிர்கால பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம். வசம்பு கிழங்கு தூள் வசம்பு கிழங்கை உள்ளூர் சந்தையிலிருந்து சேகரித்து, அவற்றின் தோல்களை நீக்கி நன்றாக தூள் செய்து பயன்படுத்தலாம். நெல் தவிடு மற்றும் மண்ணெண்ணெய் கலவை அரிசி ஆலைகளிலிருந்து நெல் தவிடுகளை சேகரித்து அவற்றை 2 லிட்டர் மண்ணெணெய்யில் கலந்து வைக்க வேண்டும். நெல் மற்றும் ரம்ப தூள் நெல் தவிடு மற்றும் ரம்பத் தூள் சேகரித்து பயன்படுத்த வேண்டும். ரம்பத் தூள் 15 கிலோ ரம்பத் தூளுடன் 2 லிட்டர் மண்ணெணெய் கலந்து பயன்படுத்த வேண்டும். சைகஸ் கோன் துண்டுகள் சைகஸ் கோன் துண்டுகள் தமிழ்நாட்டின் மேற்கத்திய தொடரான திருநெல்வேலி மாவட்ட புலியாரு பகுதியிலும், கேரள மாவட்டத்தின் ஆரியங்காவு பகுதியிலும் கிடைக்கும். இதில் ஆண் சைகஸ் கோன் துண்டுகள் முதிர்ச்சியடைந்து, நறுமணம் அளிக்கும், இவை பூச்சிக்கொல்லியாக பயன்படுத்தப்படுகிறது. இந்த கோன்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஈரப்பதம் இருக்கும் நெல் வைக்கோலுடன் வைக்க வேண்டும். இந்த துண்டுகளை செடிகள் முழுக்க படரும்படி வைக்க வேண்டும். இந்த நெல் வைக்கோலை தொடர்ந்து ஈரப்பதமாக வைத்திருப்பதால் இதிலிருந்து தொடர்ந்து நறுமணம் வீசி கொண்டிருக்கும். மர பட்டை துண்டுகள் லவங்கப்பட்டை, சிலானிக்கம் மற்றும் யூக்கலிப்டஸ் போன்ற பல்வேறு மரப்பட்டை துண்டுகளை 1:4 என்ற விகிதத்தில் கலந்து நெல் விதை பைகளில் வைக்க வேண்டும். இந்த மரப்பட்டைகளை தேவையான அளவிற்கு உடைத்து பயன்படுத்த வேண்டும். சாம்பல் மரங்கள் மற்றும் இலைகள் இவை எரிந்த பிறகு கிடைக்கும் சாம்பலை நன்றாக தூள் செய்து பயன்படுத்த வேண்டும். மரப்பட்டை சாம்பல் மரப்பட்டை சாம்பலை சேகரித்து அதை பயன்படுத்த வேண்டும். மர சாம்பல் மரத் துண்டு எரிந்து மீதமாகும் இந்த சாம்பலை சலித்து சுத்தம் செய்து சேகரித்து வைக்க வேண்டும். இந்த சுத்தம் செய்த சாம்பலை சுத்தமான பாட்டிலில் எதிர்கால தேவைக்காக சேகரித்து வைக்க வேண்டும். பழுப்பு நிலக்கரி சாம்பல் பழுப்பு நிலக்கரி சாம்பலை நெய்வேலி பழுப்புநிலக்கரி கார்ப்பரேஷனிலிருந்து சேகரித்து நன்றாக தூள் செய்து கொள்ள வேண்டும். இதை கண்ணாடி பாட்டிலில் சேமித்து எதிர்கால பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம். மணல் ஆற்று மணலை சலித்து சேகரித்து விதை நேர்த்திக்காக பயன்படுத்தலாம். துமாஸ் இலைகள் (Combretum ovali folium Spreng) துமாஸ் இலைகளை, பண்ணை புதர்கள், தரிசு நிலங்களிலிருந்து சேகரித்து கொள்ள வேண்டும். 5-7 நபர்கள் ஒரு வரிசையாக நின்று கொண்டு தங்கள் முதுகில் ஒரு பையில் இந்த இலைகளை வைத்துக் கொள்ள வேண்டும். இவர்கள் ஒரு புறத்திலிருந்து மற்ற பக்கத்திற்கு காற்று வீசும் திசையில் இடம் பெயர வேண்டும். அதே வழியில் காற்றில் பறக்கும் 1-2 பூச்சிகளை பிடித்து 2-3 இலைகளுடன் கையில் வைத்து நசுக்க வேண்டும். விசித்திர மணம் இந்த இலை மற்றும் பூச்சி கலவையிலிருந்து வரும். இவ்வாறு செய்யும் போது, பூச்சிகள் மணம் வீசும் திசையை விட்டு காற்று வீசும் திசைக்கு செல்லும். அனைத்து பூச்சிகளும் விரைவில் ஒரு திசைக்கு செல்லும் வரை புதியதாக பூச்சிகளும் இலைகளையும் நசுக்கி கொண்டேயிருக்க வேண்டும். எருக்கு தண்டு விவசாயிகள் எருக்கு தண்டை எடுத்து அதன் இலைகளை நீக்கிவிட்டு பின்னர் அவற்றை செங்குத்தாக இரண்டு பகுதிகளாக வெட்டி (10 -15 செ.மீ நீளம்) துண்டுகளாக்க வேண்டும். இந்த துண்டுகளை நிலம் முழுவதும் வரப்பு ஓரம் 2-3 மீ இடைவெளியில் பரப்ப வேண்டும். இத்தண்டின் மேற்புரம் பாம்பின் தோல் போன்று தோற்றமளிப்பதால் எலிகள் பயந்து ஓடிவிடும். Glyricidia எலி கொல்லி க்ளைரிசிடியா செப்பியம், ஒரு வேகமாக வளரும் எலி கொல்லி மரம். விவசாயிகள் இதன் பட்டை மற்றும் இலைகளை, ஈரமான கோதுமை அல்லது வாழை துண்டுகளை கொண்டு இதை அரைக்கப் பயன்படுத்துவர். தானிய கலவைகள் மற்றும் க்ளைரிசிடியா இலைகளை ஒன்றாக தரையில் வைத்து அவை நொதிக்க விட வேண்டும். இந்த நொதித்த திரவம் எலிகளை ஈர்க்கும். நெருஞ்சில் முள்ளை வளைத்து கட்டி அதன் நடுவில் எலிக்கான உணவை வைக்கும் பொழுது எலி அதை எடுக்க வரும் அவ்வாறு வந்த எலியால் முள்ளைவிட்டு வெளியே போக முடியாது. மஞ்சள் தூள் கலந்து சமைத்த அரிசி மஞ்சள் தூள் கலந்து வேகவைத்த அரிசி மஞ்சள் நிறத்திலிருக்கும், இந்த மஞ்சள் நிற சாதத்தை வயல் முழுக்க வைக்கும் போது இந்த நிறம் புழுக்கள், கொக்கி புழுக்கள் மற்றும் பறவைகளை ஈர்க்கும். இவ்வாறு ஒரே இடத்தில் இருக்கும் புழுக்களை இப்பறவைகள் சாப்பிடும். ஒரு ஏக்கருக்கு தோராயமாக ஒரு கிலோ அரிசி தேவைப்படும். இந்த மஞ்சள் நிற சாப்பாட்டை 5 மீட்டர் இடைவெளியில் அதிகாலை அல்லது மாலையில் வைப்பதால் அதிக எண்ணிக்கையிலான புழுக்கள் வெளிவரும். இதை 2-3 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். முதல் நாள் புழுக்கள் ஈர்க்கப்படும், ஆனால் இரண்டாவது நாள் அதிக எண்ணிக்கையிலான பறவைகளால் ஈா்க்கப்பட்டு புழுக்கள் கொல்லப்படும். இந்த உணவை ஒரு மெல்லிய வாழை இலையில் வைக்க வேண்டும், பறவைகள் இந்த உணவை எடுக்க முயற்சிக்கும் போது, எதிர்பாராதவிதமாக உணவு கீழே சிந்தப்படும். இவ்வாறு கீழே சிந்திய உணவை பறவைகள் எடுக்க முயற்சிக்கும் போது புழுக்களை பார்க்கும், அவற்றை உண்ணும். சில விவசாயிகள் பறவைகளை ஈர்ப்பதற்காக பாலில் வெந்த அரிசியை பயன்படுத்துகின்றனர். இதுவும் புழுக்களுக்கு எதிரான நடவடிக்கையாகும். இந்த முறையை ஆந்திரபிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் பின்பற்றுகின்றனர். சேமித்தல்:
|
|
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு |