அடுக்கு முட்டான் (மரவள்ளி கிழங்கு)
இந்த இரகம் பெரும்பாலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பயிரின் காலம் ஆறு மாதங்களாகும். கிழங்குகள் சிறியதாகவும் அதிக மாவுச்சத்து மற்றும் நல்ல சமைப்பதற்கு உண்டான தரம் கொண்டதாகவும் இருக்கும். உலர்த்தி பதப்படுத்தப்பட்ட கிழங்குகள் 3 மாத காலங்கள் வரை சேமித்து வைக்கலாம். இனிப்பு அல்லது மசாலா கொண்டு இக்கிழங்கில் வேகவைத்த “கிழங்கு புட்டு” போன்ற உணவு தயாரிக்கலாம். இக்கிழங்கை பதப்படுத்தப்பட்ட பிறகு மாவாக்கி குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மேலே கூறப்பட்ட இரண்டு இரகங்களும் களிமண் நிலம் ஏற்றது. மே – ஜீன் மாதங்களில் நடவு செய்யலாம். தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் மண் வகை. தேவையான விதை போன்றவை பொருத்தமாக இல்லாததால் இந்த இரகம் நன்கு வளர்வது இல்லை. எனவே பராமரிப்பு அந்த பருவத்திற்கேற்ப இரகத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். மரவள்ளி கிழங்கு ஒரு முக்கியமான துணை உணவாகும் இவற்றை பல்வேறு வடிவங்களில் உணவாக பயன்படுத்தலாம். பயிர் மகசூல் 30-35 டன்கள் /ஹெக்டர். |