முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

வெண்டை / வெண்டிக்காய் - -சிவப்பு வெண்டை
இது பொதுவாக வெண்டை என்றழைக்கப்படுகிறது.இந்த இரகம் கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு தாலுகா பனவிளை கிராமத்தில் சாகுபடி செய்யப்படுகிறது.  இது ஒரு வெப்பமண்டல நேரடி விதைப்பு பயிர், இது 100-120 நாட்கள் கால பயிராகும்.இது பயிர் செய்ய உகந்த காலம் ஜீன் –ஆகஸ்ட்.  இதை ஜீலை வரையிலும் பயிர் செய்யலாம் ஆனால் அறுவடையை அக்டோபர்க்குள் முடித்துவிட வேண்டும். வடகிழக்கு பருவமழையிலிருந்து இப்பயிரை அப்போதுதான் காப்பாற்ற முடியும். நன்றாக வறண்ட வண்டல் மண் மிகவும் உகந்தது மற்றும் சற்று பெரிய பகுதியாகவும் இருக்க வேண்டும்.இந்த இரகம் பல்வேறு வகையான சமையலுக்கு ஏற்றதாக இருக்கும்.  இச்செடி 4 அடி உயரம் வரை வளரும். காய்கள் சிவப்பு நிறத்திலிருக்கும் அதனால் சிவப்பு வெண்டை என்றழைக்கபடுகிறது. இதில் அதிக அளவில் கரோட்டின் சத்து உள்ளது.  20 நாளிலிருந்து செடியிலிருந்து மகசூல் ஆரம்பிக்கும். ஐந்தாவது இலை தோன்றிய பிறகு, பூ பூக்கும்.  முதன்மைத் தண்டிலிருந்து பல்வேறு கிளைகள் பிரியும், ஒவ்வொரு கிளையும் காய் பிடிக்கும். இந்த இரகம் வெள்ளை ஈ –பெமீசியா திரிப்ஸ் டபேசி என்ற பூச்சியினம் ஏற்படுத்தும் மஞ்சள் மொசைக் நோய் எதிர்ப்புதிறன் கொண்டது.காய்கள் முதிர்ச்சியடைந்தவுடன் அறுவடை செய்யலாம். 15-20 எண்ணிக்கை அளவு அறுவடை செய்யலாம். மகசூல் வீதம் 12-15 டன்கள்/ஹெக்டர்.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014