முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

காந்தாரி மிளகாய்
கோல்கொண்டா மிளகாய்
மிளகாய் காய்கறிகளில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது, இவ்வகை மிளகாயை சிவப்பு மிளகு அல்லது கார மிளகு என்றழைக்கிறோம். கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் தாலுகா,  வெட்டுவன்னி கிராமத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் காயின் மத்திய நஞ்சுக் கொடியில் ‘கேப்சின்’ என்ற காரமான பொருள் உள்ளது, இதனுடன் விதைகள் கருப்பை சுவருடன் இணைந்துள்ளது. இதில் பொதுவாக கேப்சைசின் வீதம் 0.2-0.4%.  வைட்டமின் சி போதுமான அளவில் உள்ளது. நம் உணவில் மணம் மற்றும் சுவைக்கு மிளகாய் போன்ற காரமான காய்கறி மிகவும் அவசியமாக உள்ளது. இந்த காரமானது இயற்கையாகவே நம்மை நோயிலிருந்து  பாதுகாக்கிறது. மே – ஜீன் மாதங்களில் நாற்றங்கால் அமைக்க வேண்டும், இந்த பயிரின் காலம் 100-120 நாட்கள். நன்றாக உழுத வளமான வண்டல் இப்பயிருக்கு ஏற்றது. காந்தாரி மிளகாயில் காப்சைசின் 0.5% அதிகமாக இருப்பதால் மற்ற வகைகளை விட இது மேலும் காரமானதாக உள்ளது.

இதன் பழுத்த பழங்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் சாறு உட்கொள்ளும்  போது இரத்த உறைதலை தடுக்கும், மேலும் கொழுப்பு கட்டுப்பாடு, இரத்த சுத்திகரிப்பிற்கு உதவுகிறது. இந்த சாறை அதிக உட்கொள்வதால்,  வயிற்றில் புண் அல்சர் ஏற்படும். பழங்கள் சிறியதாக மேல் நோக்கி வளரும்.முதல் நிலையில் மஞ்சள் அல்லது பச்சை நிறத்திலிருக்கும், பின் முதிர்ச்சி காலத்தில் சிவப்பு நிறத்திற்கு மாறிவிடும். பூண்டு மற்றும் வேப்பெண்ணெய் கலந்த பசை போல் தயாரித்து பயன்படுத்தினால் கதிர்நாவாய்ப் பூச்சியை கட்டுப்படுத்தலாம். இந்த பசையை 10 லிட்டர் நீரில் கரைத்து கொள்ள வேண்டும். 50 மி.லி/தொட்டி கலந்து தெளிக்க வேண்டும்.  மகசூல் வீதம் 2.3 – 2.5 டன்கள்/ஹெக்டர். இந்த ரகம் அதிக காரத்தன்மை கொண்டிருப்பதால் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இந்த ரகம் பிரபலமாக இல்லை. அதனால் விவசாயிகள் இந்த இரகத்தை பயிரிடுவதில்லை.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014