முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

கண்ணாடி கத்திரி – காட்டு கத்திரி
இந்த இரகம் சேலம் மாவட்டம் தேவூர் கிராமத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கான நாற்றங்கால் 1.5 சென்ட் நிலத்தில்  தயாரிக்கப்படுகிறது. இதற்கு தேவையான விதை வீதம் 200-300 கிராம். நாற்றங்காலின் காலம் 2 மாதங்களாகும்.  பூச்சி மற்றும் நோய் தாக்குதலின்றியிருக்கும் கனியிலிருந்து சேகரிக்கப்பட்ட விதைகளாக இருக்க வேண்டும். இவ்விதைகளை சேமித்து வைக்கும் போது பூச்சிகளிலிருந்து பாதுகாக்க சாம்பலை இவ்விதைகளின் மேல் பூச்சாக கலந்து சேமித்து வைக்க வேண்டும்.  இவ்விதைகளை 2-3 வருடம் வரை சேமிக்கலாம்.  இதை ஆகஸ்ட் மற்றும் ஜனவரியில் சாகுபடி ஆரம்பிகலாம், இதன் பயிர் காலம் 6 – 7 மாதங்களாகும்.  மற்ற இரகங்களுடன் ஒப்பிடுகையில்

இந்த இரகம் ஈரோடு சந்தையில் நல்ல மதிப்பை பெற்றிருக்கும். மாட்டு சாணம், ஆட்டு சாணம் மற்றும் கோழி பண்ணையின் கழிவுகளை எருவாக பயன்படுகிறது. சில சமயங்களில் செடியின் இலைகளையும் எருவாக பயன்படுத்தப்படுகிறது.  இந்த இரகம் அதிக பூச்சி மற்றும் நோய் தாக்குதலின்றி இருப்பதால், விவசாயிகள் இந்த இரகத்தை சாகுபடி செய்ய ஆர்வம் கொள்கின்றனர். செடியின் உயரம் 4-5 அடி; அதிக மழை இந்த பயிருக்கு ஏற்றதல்ல, 30-40 பைகள் மூன்று மாதங்களுக்கு. விவசாயிக்கான நிகர வருமானம் ரூ.30000-50000. அறுவடைக்காலத்தின் போது,  ஊடுபயிராக ‘குட்டை புடலை’ (புடலங்காய்) விதைகளை கத்திரிக்காய் வயலில் விதைக்கலாம்.  புடலைங்காய் செடி இந்த காட்டு கத்திரிக்காய் செடியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். குட்டை புடலங்காய் ஊடுபயிராக  செய்யும் போது இதன் மூலமாக விவசாயிக்கு கூடுதல் வருமானம் ரூ.20000/- கிடைக்கிறது.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014