தெர் கொத்தவரை - உள்ளூர் கொத்தவரை இரகம்
இந்த பாரம்பரிய கொத்தவரை இரகம் கடலோர மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படுகிறது, குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படுகிறது.இந்த இரகம் 75 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. இந்த இரகம் சாகுபடி செய்ய ஏற்ற பருவம் ஜீன் –ஜீலை மாதம். வயல் வரப்புகளில் 3 விதைகள் ஒரு குத்துக்கு என்ற அளவில் விதைக்க வேண்டும். விதைத்த 30 நாட்கள் பிறகு அறுவடை செய்யலாம். இதை கையால் பறித்து அறுவடை செய்யலாம். நாட்களுக்கு ஒரு முறை என்ற இடைவெளியில் அறுவடை செய்யலாம். சராசரியாக ஒரு வாரத்திற்கு 50 கிலோ வீதம் அறுவடை செய்யலாம் ஒரு கிலோ ரூ.5 என்ற விலை நிலவுகிறது. பொதுவாக ‘தெர் கொத்தவரை’ தொழுஉரம், மண்புழு உரம் மற்றும் பண்ணையில் கிடைக்கும் உரங்கள் போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்கின்றனர். இதற்கான சந்தை வாய்ப்பு இது கொண்டிருக்கிறது. தவிர, இந்த இரகம் இதன் சுவைக்காக பெரிதும் விரும்பப்படுகிறது. இவற்றிற்கு வயிற்றுப் புண் மற்றும் வாய் புண் இவற்றை குணப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இதன் மகசூல் 1800 கிலோ/ஏக்கர். |