முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

பொய்யூர் கத்திரி- உள்ளூர் கத்திரி ரகம்
கடற்கரை கிராமமான நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்த இரகம் பயிரிடப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டம், வேலப்பள்ளம் திரு.செங்குட்டுவன் ‘பொய்யூர் கத்திரி’ யை 10-15 ஆண்டுகளுக்கும் மேல் தற்போதும் இந்த இரகத்தை சாகுபடி செய்கிறார். இந்த பாரம்பரிய ரகத்தை ஜீன் –ஜீலை மாதங்களில் நடவு செய்யலாம். இந்த ரகத்தை நாற்றங்கால் படுக்கை தயாரித்து நாற்றுகள் வளர்த்து நடவு செய்ய வேண்டும். நாற்றங்கால் படுக்கையில் விதை தூவி 15 நாட்கள் பிறகு நாற்றங்கால் தயாரித்து பின் நடவு வயலில் நடவு செய்ய வேண்டும். ஒரு குத்துக்கு இரண்டு நாற்றுகள் வீதம் நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 45 நாட்களுக்கு செடி வளர்ந்து கத்திரிகாய்களை பறிக்கலாம். 

சிறப்பு அம்சங்கள்

  • இது சுவைக்காக நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இரகம்.

  • மற்ற இரகங்களை ஒப்பிடும் போது அதிக எடை கொண்டது.

  • 6 மாதங்கள் வரை செடியை நன்றாக பராமரித்து மகசூல் பெறலாம்.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014