முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

ராமநாதபுரம் குண்டு மிளகாய் (மிளகாய் எஸ்பிபி)
ராமநாதபுரம் பகுதிகளில், அங்கு நிலவும் தட்பவெப்பத்திற்கு மிளகாய் நன்கு வளரும். பாரம்பரிய ரகமான ராமநாதபுரம் குண்டு மிளகாய் மற்ற  சம்பா இரகங்களை காட்டிலும் கூடுதல் விளைச்சல் கொடுப்பதால் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. மழையின் அளவு அதிகரிக்கும் போது, மிளகாய் விளைச்சல் கடுமையாக பாதிக்கும். மழையளவு குறைவாக இருக்கும் போது மட்டுமே சாகுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்க “ராமநாதபுரம் குண்டு” மிளகாய் அதிக வருமானத்தை கொடுக்கும். ஒரு ஏக்கருக்கு மிளகாய் சாகுபடிக்கான செலவு ரூ.10,000 ஒரு ஏக்கருக்கான மிளகாயினால் வருமானம் ரூ.30,000. ஆவணி /கார்த்திகையில் விதைத்து சித்திரை/வைகாசியில் அறுவடை செய்யலாம். மிளகாயுடன் பருத்தியை ஊடுபயிராக விதைக்கலாம். சில விவசாயிகள் மிளகாயுடன் கொத்தமல்லியை ஊடுபயிராக விதைக்கின்றனர். ஒரு ஏக்கருக்கு 1000கிலோ மிளகாய் மகசூல் கிடைக்கிறது (50 பைகள் : 1 பை = 20 கிலோ).

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014