முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

நீள மிளகாய் (நீள மிளகாய்)
இந்த ரகம் கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு தாலூகா, பனவிளை கிராமத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. இது காந்தாரி மிளகாய் போன்றே இருக்கும் ஆனால் அளவு மற்றும் நிறத்தில் மாறுபடும்.  இதன் பூ நீலம் நிறத்தில் இருக்கும் இலையும் நீலம் நிறமாகும். இது அலங்காரச் செடி போல் தோற்றம் கொண்டு பார்வையாளர்களை ஈர்க்கும். இதன் காய்கள் உருண்டையாகவும் முதிர்ச்சி நிலையில் சிவப்பு நிறத்திற்கு மாறும். இவை கொத்து கொத்தாக காய்க்கும், இவை சமையலுக்கும், மரவள்ளிக் கிழங்குடன் சாப்பிடுவதற்கும் பயன்படுகிறது.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014