முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

வழுதளங்காய் -முட்டை தாவர / கத்தரி
இது வெப்ப மண்டல தாவரம், இது இந்தியாவை தாயகமாக கொண்டதாக நம்பப்படுகிறது.  இந்த இரகம் கன்னியாகுமரி மாவட்டம், மாரத்தாண்டம் தாலுகா வெட்டுவென்னி கிராமத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பயிர் சாகுபடி செய்ய ஏற்ற பருவம் ஜீன் – அக்டோபர். இப்பயிரின் காலம் 90-110 நாட்கள்.  இது பல்வேறு நன்கு  உலர்ந்த மண் இரகத்திற்கு ஏற்ற இரகம். இது கன்னியாகுமரி மாவட்ட மக்களின் அன்றாட  பாரம்பரிய உணவில் இந்த இரகத்தையும் வைத்திருக்கின்றனர். இதில் சிறு இலை நோய், மைக்கோபிளாஸ்மா போன்ற முக்கிய நோய் பிரச்னைகளையும் கொண்டுள்ளது, இந்த ரகம் நோய் எதிர்ப்புக்கு ஏறற இரகமாகவும் உள்ளது. நடவிற்கு பிறகு 55-60 நாட்களில் முதல் அறுவடை செய்யப்படும். இதன் காய் உருளை வடிவம் கொண்டது. அறுவடை 5 நாட்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும். மகசூல் வீதம் 20-25 டன்கள்/ஹெக்டர்.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014