வேளாண் அறிவியல் நிலையம் ::சிறப்புத் திட்டங்கள் அமலாக்கம்விருத்தாசலம்

கடலூர் மாவட்டத்தின் வெள்ளச் சேத அறிக்கை

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெள்ளம் சூழ்ந்தது. அந்தத் தருணத்தில் இந்த வேளாண் அறிவியல் நிலையம் முன்னோடியாக செயல்பட்டு வெள்ளச் சேதத்தைப் பற்றி அறிவியல் பூர்வமாக ஆய்வு மேற்கொண்டு, ஆய்வு அறிக்கையை மத்திய வெள்ள நிவாரண மையத்திற்கு அனுப்பி வைத்தது.

தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம்

தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் (2010-11) விரிவாக்கக் கல்வி இயக்கத்தின் மூலம் இந்நிலையத்தில் கடலூர் மாவட்டத்தில் துல்லிய பண்ணைய திட்டம் 100 எக்டர் பரப்பளவில் துவக்கப்பட்டது. அதில் கரும்பு பயிரிடப்பட்டது.

ஆத்மா

ஆத்மா திட்டம் கடந்த 2007-08 ஆம் ஆண்டில் இருந்து கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டத்தில் பல்வேறு செயல்பாட்டு அறிக்கை, வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தில் தயாரிக்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வட்டாரங்களில் நடைபெறும் BLT கூட்டத்தில் நமது நிலையத்தைத் தொழில் நுட்ப வல்லுநர் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

நீர்வள நில வளத் திட்டம்

மூன்றாம் கட்ட தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. கோமுகி நதி உப வடிநிலப் பகுதிகளான விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கியது. மொத்த வடிநில பரப்பு 570.83 மற்றும் 7197.95 எக்டர் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பரவியுள்ளது. நடை பயண மதிப்பீடு மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு திட்ட இயக்குநர் அலுவலகம் மூலம் உலக வங்கி நடைமுறையில் இடுபொருட்கள் கொள்முதல் நடைபெற்று வருகிறது.

 

 

 

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013