வேளாண் அறிவியல் நிலையம் :: தர்மபுரி

சேவைகள்

வெற்றிக் கதை 1 :
திரு.கா.நமணிகுமார்
/பெ.திரு.காளியண்ணன்
அகரம்
பாலக்கோடு வட்டம்
09842587591
பயிர் : கத்தரி
பின்பற்றிய தொழில்நுட்பங்கள் : துல்லிய பண்ணையம்

  • இரகம் – கிரீன் லாங் – உற்பத்தி திறன் கொண்ட வீரிய ஒட்டு இரகம்
  • குழித்தட்டு நாற்றுகள் பயன்படுத்துவதால் எண்ணிக்கை பராமரிக்கப்பட்டது
  • மேட்டுப் பாத்தி நடவால் மழைக்காலங்களில் நீர்த் தேங்காமல் ஏற்படும் நோய் தாக்குதல் தவிர்க்கப்பட்டது.
  • சொட்டு நீர் பாசனம் முறை மேற்கொள்ளப்பட்டது.
  • நுண்ணூட்டச் சத்த குறைபாட்டினை தவிர்க்க தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் நுண்ணூட்டக கலவை அர்கா வெஜிடபிள் ஸ்பெஷல் (Arka Vegetable Special) – 4 கிராம் / லிட்டர் – நடவு செய்த 25, 45 மற்றும் 65வது நாளில் 0
  • தெளிக்கப்பட்டது.
  • நீரில் கரையும் உரங்கள் (80 – 15 40 கி.கிராம் / ஏக்கர் தழை, மணி மற்றும் சாம்பல் சத்து) நீர் வழி உரப்பாசன முறையில் அளிக்கப்பட்டது.
  • தண்டு மற்றும் காய் துளைப்பான் மேலாண்மை
  • இனக்கவர்ச்சி பொறி – 5 / ஏக்கர் (25 நாட்களுக்கு ஒர முறை இனக்கவர்ச்சி மருந்து மாற்றப்பட்டது)
  • திரவ வடிவ சூடோமோனஸ் 1 லி / ஏக்கர் சொட்டு நீர் பாசனம் மூலம் 15 நாட்களுக்கு ஒரு முறை அளிக்கப்பட்டது. இதனால் தண்டு அழுகல் மற்றும் வேர் அழுகல் பாதிப்பு இல்லாமல் செடியின் வீரியம் பராமரிக்கப்பட்டது.

வரவு செலவு விவரம்

விவரம்

பழைய முறை – பாரம்பரிய பண்ணையம்

புதிய தொழில்நுட்பம் – துல்லிய பண்ணையம்

மகசூல் – கிலோ / ஏக்கர்

19,000

72,000

விவசாய செலவு - ரூ. / ஏக்கர்

45,000

1,60,000

சராசரி விலை - ரூ. / கிலோ

6.00

8.00

வருமானம் - ரூ. / ஏக்கர்

1,14,000

5,76,000

நிகர வருமானம் - ரூ. / ஏக்கர்

69,000

4,16,000

வெற்றிக் கதை – 2
திரு வெ.சாமிகண்ணு
மோளையனூர் அஞ்சல்
பாப்பிரெட்டிபட்டி வட்டம்
9788318950
vsamikannu @ gmail.com

பயிர் : செடி முருங்கை
பின்பற்றிய தொழில்நுட்பங்கள் : அடர் நடவு முறை மற்றும் துல்லிய பண்ணையம்
ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறைகள்:

  • இரகம் : பி கே எம் 1
  • நடவு : அக்டோபர் 2011
  • இடைவெளி : 2 x 1.5 மீட்டர் (3125 செடிகள் / எக்டர்)
  • 45 நாள் வயதடைய பாலீத்தின் பை நாற்றுகள்
  • நாற்றுகளின் வேர்களை சூமோமோனஸ் ப்ளுரோசன்ஸ் 10 கிராம் / லிட்டர் கரைசலில் நனைத்து நடுதல்
  • நீரில் கரையும் உரங்களான 19:19:19, மோனோ அம்மோனியம் பாஸ்பேட் 13:0:45 நாட்கள் இடைவெளியில் சொட்டு நீர் உரப்பாசனம் மூலம் அளித்தல்
  • திரவ சூடொமோனஸ் ப்ளுரோசன்ஸ், பாஸ்போபாக்டீரியா, அசோஸ்பைரில்லம் மற்றும் கடல் பாசி சாறு ஆகிய ஒவ்வொன்றும் 375 மிலி / எக்டர் என்றளவில் 3 நாட்கள் இடைவெளியில் சொட்டு நீர்ப் பாசன அமைப்பில் செலுத்துதல்
  • ஹியூமிக் அமிலத்தை 1.25 லி / எக்டர் என்ற அளவில் ஒரு மாத கால இடைவெளியில் சொட்டு நீர்ப்பாசன அமைப்பில் அளித்தல்.
  • சூடோமேனாஸ் ப்ளுரோசன்ஸ் 5 மிலி/லிட்டர் என்றளவில் 15 நாட்கள் இடைவெளியில் இலைவழித் தெளிப்பு செய்தல்
  • இலைப் புழுக்களைக் கட்டுப்படுத்த இன்டாக்ஸோகார்ப் 0.5 மிலி/ லிட்டர் என்றளவில் தெளித்தல்

வரவு செலவு விவரம்

விவரம்

பாரம்பரிய முறை

துல்லிய பண்ணையம்

மகசூல் – (டன் / எக்டர்)

23.8

45.0

சாகுபடி செலவு – (ரூ/ எக்டர்)

26,250

56,375

சராசரி பழ நீளம் (செ.மீ)

14.00

15.00

பழ எண்ணிக்கை / கிலோ

14

12

சராசரி சந்தை விலை

14.00

15.00

வருமானம் (ரூ/எக்டர்)

3,22,500

6,74,625

நிகர வருமானம் (ரூ/எக்டர்)

3,06,250

6,18,250

வெற்றிக் கதை :3
திரு.பி.கதிர்வேல்
/பெ.திரு பழனிவேல்
பாலவாடி அஞ்சல் பொன்னகரம் மாவட்டம் – 636 809
09750357381
பயிர் : நிலச்சம்பங்கி
பின்பற்றிய தொழில்நுட்பங்கள் : அடர் நடவு முறை மற்றும் துல்லிய பண்ணையம்

ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறைகள் :

  • இரகம் : இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து வெளியிடப்பட்ட வீரிய ஒட்டு இரகம் – ப்ரஜ்வால்
  • இடைவெளி : 60 x 45 செ.மீட்டர்
  • விதை கிழங்கு எடை – 25-30 கிராமம்
  • விதை கிழங்கு நேர்த்தி – சூடோமோனாஸ் ப்ளுரோசன்ஸ் 10 கிராம் /லிட்டர்
  • நீர்ப்பாசன முறை – சொட்டு நீர்ப்பாசனம் மூலம் தினமும் நீர்ப்பாய்ச்சுதல்

நல்ல தரமான பூக்களைப் பெற வெயில் காலத்தில் தெளிப்பு நீர்ப்பாசனம் அளித்தல்

  • உர நிர்வாகம் – 200:200:200 தழை மணி சாம்பல் சத்து/ எக்டர் அடியுரம் – 75 சதவிகிதம், மணிச்சத்து சூப்பர் பாஸ்பேட் அளித்தல் மீதி 25 சதவிகிதம் மணிச்சத்தையும், முழு அளவு தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து, நீர்வழி உரமாக 19:19:19, யூரியா மற்றும் 0:0:50 சொட்டு நீர்ப்பாசன அமைப்பு மூலம் அளித்தல்
  • நூற்புழுத் தாக்குதலை கட்டுப்படுத்த வேப்பம் புண்ணாக்கு 250 கிலோ/ எக்டர் என்றளவில் 3 முறை பிரித்து இடுதல்
  • மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை சாறு 3 சதவீதம் அல்லது தயோமீத்தாக்ஸிம் 0.5 கிராம் /லிட்டர் அல்லது இமிடாகுளோபிரிட்    0.5 கிராம் /லிட்டர் இவற்றுள் ஒன்றை ஒட்டும் திரவத்துடன் (0.5மிலி / லிட்டர்) கலந்து தெளித்தல்
  • பூ மொட்டுப் புழு தாக்குதலை கட்டுப்படுத்த இன்டாக்ஸோகார்ப் 0.7 மிலி/லிட்டர் அல்லது புளுபென்டியமைடு 0.5 மிலி/லிட்டர் என்றளவில் தெளித்தல்
  • இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த புரப்பிகொனஸோல் 1.5 மிலி/லிட்டர் அல்லது மான்கோ செப் 2.5 கி /லிட்டர் தெளித்தல்

 

வரவு செலவு விவரம்

விவரம்

உள்ளூர் இரகம்

துல்லிள பண்ணையம் மற்றும் நிலப்போர்வை அமைத்து ப்ரஜ்வால் சாகுபடி

பூக்களின் எண்ணிக்கை / கிலோ

870

750

சராசரி பூக்களின் மகசூல் (கிலோ /மாதம் /எக்டர்)

1190

1850

பூ மகசூல் (டன்/ வருடம் /எக்டர்)

14.0

22.0

நிகர வருமானம் (ரூபாய் /எக்டர்)

4,20,000

6,60,000

வருமானம் சாகுபடி செலவு விகிதம்

3.1

4.2

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013