தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் & சுய உதவிக் குழுக்கள் :: உருவாக்கம் மற்றும் பதிவு

அரசு சாரா நிறுவனங்கள் அமைப்பு மற்றும் பதிவு

அமைப்பு

அரசு சாரா நிறுவனம் என்பது தனி நபர் அல்லது மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அமைத்த சங்கமாகும். கீழ்வரும் இந்திய சட்டத்தின் ஏதாவது ஒன்றின்படி, லாபம் அல்லாத நோக்கத்தோடு எந்த நபர் வேண்டுமானாலும் பதிவை மேற்கொள்ளலாம்.

  1. தொண்டு நிறுவனச் சட்டம்
  2. சமூக பதிவு சட்டத்தின் கீழ் சங்கமாக பதிவு செய்வது
  3. நிறுவன சட்டத்தில் பிரிவு 25ன் படி நிறுவனமாக பதிவு செய்வது

அறக்கட்டளை

அறக்கட்டளை என்பது தொழிலதிபர் ஒருவர் தனது உடைமைகள் அனைத்தும் பொறுப்பாக நிர்வகிக்க ஒருவரை நம்பிக்கையுடன் நியமித்து, அவற்றிலிருந்து வரும் லாபம் மற்றும் நன்மைகளால் பயனடைகின்றன. இந்தியாவில் மாநிலங்கள் ஒவ்வொன்றிற்கும், பலவகையான அறக்கட்டளை சட்டம் உள்ளது. அறக்கட்டளை அல்லாத மாநிலத்திற்கு இந்திய அறக்கட்டளை சட்டத்தின் படி 1882 படி இயக்கப்படும். அறக்கட்டளை எந்த வித மொழிகளில் வேண்டுமானால் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும். அறக்கட்டளையில் உள்ள விவரங்கள்.

  1. அறக்கட்டளையாளரின் பெயர்
  2. தர்மகர்த்தாவின் பெயர்
  3. பயனாளிகளின் பெயர்
  4. அறக்கட்டளையை அறிந்துகொள்ள உதவும் பெயர்
  5. உடமைகளின் அறக்கட்டளைக்கு தரும் உரிமைகளின் விவரம்
  6. அறக்கட்டளை உடமைகளை தர்மகர்த்தாவிடம் ஒப்படைக்க விருப்பம் தெரிவிப்பது.
  7. அறக்கட்டளயின் நோக்கங்கள்
  8. பதவி நியமனம், விலகல் ஆகியவற்றின் வழிமுறைகள் மற்றும் அறக்கட்டளையின் உரிமைகள், கடமைகள் மற்றும் அதிகாரங்களை பற்றி கூறுவது.
  9. பயனாளிகளின் உரிமை மற்றும் கடமைகள்
  10. அறக்கட்டளையின் பத்திரத்தை உரிமையாளர் மற்றும் இரண்டு நபர் சாட்சியின் முன்னிலையில் முத்திரைத் தாளில் எழுதப்பட்டு கையொப்பமிடுவர் இவற்றின் மதிப்பு, அறக்கட்டளையின் உடமை மதிப்பு பொறுத்தே அமையும்.

அறக்காவலர்கள்

அறக்கட்டளையின் இயக்கத்திற்கு குறைந்த பட்சம் இரண்டு அறக்காவலர்கள் தேவைப்படுகின்றன. வாரிய மேம்பாட்டின் கீழ் அறக்காவலர்கள் செயல்படுவர்.

பதிவு விண்ணப்பம்

அறக்கட்டளை பதிவு செய்யும் பகுதியில் உரிமையுள்ள அலுவலர்களிடம் பதிவு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவேண்டும். தகுதி, தர்மகர்த்தாவின் பெயர், பதவி நீடிப்பின் காலம் பற்றிய விவரங்களை தெரிந்த பிறகு, விண்ணப்பதாரர்கள் ரூ. 2 முத்திரைத் தாள்கள் விண்ணப்பப் படிவத்தில் ஒட்டி, சாதாரண பதிவுக் கட்டணமான ரூ. 3 முதல் ரூ. 25க்கும் செலுத்தவேண்டும். ஒட்டி, சாதாரண பதிவுக் கட்டணமான ரூ. 3 முதல் ரூ. 25க்கும் செலுத்த வேண்டும். இவை அறக்கட்டளையின் உடமைகளின் மதிப்பை பொறுத்தே அமையும்.

மண்டல அலுவலர் அல்லது மன்ற ஆணையர் கையெழுத்து இடுவதற்கு முன் விண்ணப்பதாரர்கள் கையொப்பமிடவேண்டும். விண்ணப்பப்படிவங்கள் முத்திரை தாள் பத்திரத்துடன் சேர்த்து சமர்ப்பிக்கவேண்டும். சமர்ப்பிக்கும் போது உறுதி செய்துக் கொண்ட படிவம் மற்றும் ஒப்பந்த கடிதத்தையும் சேர்த்து சமர்ப்பிக்கவேண்டும்.
சங்கம்

சங்கம் என்பது ஓர் நிறுவனமோ அல்லது நபர்கள் அனைவரும் பரஸ்பரம் ஒப்பந்தத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாகும். ஒப்பந்தத்திற்கு குறைந்தபட்சம் ஏழு நபர்கள் தேவைப்படுகிறது. அவையே பின்பு சங்கமாக செயல்படுகிறது.

அரசு சாரா நிறுவனங்கள் சங்கமாக இயங்க வேண்டுமென்றால் சங்கப் பதிவு சட்டத்தின் 1860 கூட்டாட்சி சட்டத்தின் கீழ் பதிவு செய்யவேண்டும். சில மாநிலங்களில் மன்ற ஆணையர் செயல்படுத்தப்பட்டால், சங்கப் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்வது மட்டுமல்லாமல் மும்பை பொது அறக்கட்டளை சட்டத்தின் கீழ் பதிவுசெய்யவேண்டும்.

சங்க அமைப்பின் முக்கிய நன்மை யாதெனில் அறக்கட்டளையுடன் ஒப்பிடும் போது நிறுவனம் போல் தோற்றமளிப்பது மட்டுமன்றி, ஒப்பந்தம் மற்றும் சட்டம் மிக மேற்கொள்ள எளியதாக உள்ளது. ஆனாலும் சங்க அமைப்பதற்கு அறக்கட்டளையை காட்டிலும் அதிக விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பதிவு மேற்கொள்வதற்கு கீழ் வரக்கூடிய ஆவணங்கள் அனைத்தும் சங்கப் பதிவாளரின் ஆணைப்படி மேற்கொள்ளவெண்டும்.

பதிவுக்காக பணிவுக்கொண்ட உரைக்கடிதத்தில், பலவிதமான ஆவணங்களை அதனுடன் இணைத்து, அக்கடிதத்தில் ஒப்பந்தம் செய்ய விருப்பப்பட அனைத்து சந்தக்காரர்களும் அல்லது உரிமையுள்ள நபர்கள் கையெழுத்திடவேண்டும்.

சங்க ஒப்பந்தங்களை இரண்டு நகல் எடுத்து, அழகாக எழுத்துக்களை தட்டச்சு செய்து தாள் வாரியாக அமைத்து, குறிக்கோள், நோக்கம் மற்றும் மேலாண்மையை உரிய ஸ்தாபனத்தில் மேம்படுத்துதல்.

விதி மற்றும் விதிமுறை நகல்கள் குறைந்தபட்சம் நிர்வாக வாரியத்தின் செயல்படும் மூன்று உறுப்பினர்களைக் கொண்டு சான்றளிக்கவேண்டும்.

தலைவர் அல்லது சங்க செயலாளரின் முத்திரைத்தாள் பத்திரத்தில் சத்தியப் பிரமாணம் மேற்கொள்வது. இவை முதல் வகுப்பு நகர சபை ஆணையரின் சான்றளிக்கப்பட்ட உறுதிமொழி சட்ட அதிகாரி ஆகியவர்களின் கீழ் சந்தக்காரர்களின் உறவுகளை விளக்குகின்றன.

  1. வீட்டு வரி இரசீது, வாடகை இரசீது, சங்கப்பதவி அலுவலகத்தில் பதிவானது போன்று மற்றும் வளாகத்தை வாடகைக்கு விடுபவரிடம் சான்று பெறவேண்டும்.

  2. மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்ட அதிகாரப் பத்திரம்.

  3. மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் அனைவரின் தீர்மானத்தின்படி சங்க நிதி அனைத்தும் சங்கத்தின் குறிக்கோள் மற்றும் நோக்கம் நிறைவேற்றுவதற்காக பயன்படுத்தப்படுகின்றன.

  4. குறைந்தபட்சம் ஏழு மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் சங்கம் இயங்க செயலகமாகவோ தேவைப்படுகிறது. மேலாண்மை வாரியம் நிர்வாக சபையாகவோ அல்லது செயலகமாகவோ அல்லது செயற்குழுவாகவோ இயங்குகிறது.

படிவங்கள்

சங்க பதிவுப் படிவங்கள்
படிவம் எண் 1, படிவம் எண் 5, 6 மற்றும் 7
இதரப் படிவங்கள் சங்கத்தின் சட்டத்தை உள்ளடக்கியதாகும்.

நிறுவனம்

  1. நிறுவனச் சட்டம் பிரிவு 25ன்படி சங்கம் உருவாக்குதல் அல்லது சங்கத்தை உருவாக்கவேண்டும்.
  2. வர்த்தகம், கலை, அறிவியல், மதம், நற்பணி மற்றும் இதரப் பயனுள்ள கல்வியை ஊக்குவித்தல்.
  3. வருகின்ற லாபத்தை நிறுவன மேம்பாட்டிற்காக பயன்படுத்திக் கொள்வது.
  4. உறுப்பினர்களுக்கு வரும் ஈவுத்தொகையை தடைசெய்வது.

பதிவாளர் அனைத்து சம்பிரதாயங்களில் திருப்தி அடைந்த பிறகு பதிவு பெற்ற நடைமுறைப்படுத்துவதற்கு சான்று ஒன்றை வழங்குவர். நிறுவனச் சட்டம் பிரிவு 25க்கு ஒப்பந்தம் மற்றும் சங்க சட்ட விதிகைள உள்ளடக்கியதாகும். (முத்திரைத் தாள் தேவையில்லை).

அறங்காவலர்கள்

நிறுவனம் சட்டம் பிரிவு 25 இயங்க, குறைந்தபட்சம் மூன்று அறங்காவலர்கள் தேவைப்படுகின்றன. நிர்வாக வாரியம், வாரிய இயக்குநர் அல்லது மேலாண்மை குழுவாக இயங்குகிறது.

பதிவுக்கான விண்ணப்பம்

  • விண்ணப்பம் எண் 1அ உத்தரவின் கீழ், நிறுவனப் பெயரை நிறுவனப் பதிவாளர் தெரிந்து கொள்வதற்காக ரூபாய் 500 கட்டணமாக செலுத்தவேண்டும். நிறுவனத்திற்கு வேறு மூன்று பெயரைத் தேர்வு செய்துக் கொள்ளவேண்டும். பதிவாளர் முதல் பெயர் ஏற்றுக்கொள்ளவில்லை எனில் மற்ற பெயரைக் கொண்டு நிறுவனத்தை அழைக்கலாம்.

  • நிறுவனப் பெயர் உறுதியானபிறகு, விண்ணப்பங்கள் எழுதப்பட்டு மண்டல் இயக்குநர், நிர்வாக சட்ட வாரியத்திடம் சமர்ப்பிக்கவேண்டும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் போது மூன்ற அச்சு அல்லது தட்டச்சு கொண்ட ஒப்பந்தம் சங்க சட்ட விதிகளின் நகல் மற்றும் முழுப் பெயர், முகவரி மற்றும் தொழில்களோடு, கையெழுத்திட்ட படிவம் ஆகியவற்றை இணைக்கவேண்டும்.

  • வழக்கறிஞர் அல்லது பத்திர கணக்காய்வாளர் தீர்மானத்தின்படி, இந்திய சட்டத்தின் கீழ், ஒப்பந்தம் மற்றும் சங்க சட்ட விதிகளை உறுதி செய்யப்படுகிறது. மேலும் நிறுவன சட்ட விதிகளின்படி நிறுவன பதிவு மேற்கொள்ளப்பட்டது.

  • பெயர் பட்டியல், முகவரி மற்றும் தொழில் அடங்கிய மூன்று நகல்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்களுக்கு கீழ் உள்ள உறுப்பினர்கள் நிறுவனப் பெயர்களுடன் சங்கம் மற்றும் இதர நிறுவனங்களின் பெயர்கள் அனைத்தும் மூன்று நகல்களாக அச்சு எடுக்கவேண்டும்.

  • சொத்து உடமைகளின் மதிப்பு மற்றும் சங்கங்கள் கொடுக்க வேண்டிய கடன்கள் பற்றி அறிக்கையை விண்ணப்பிக்கும் தேதி அல்லது விண்ணப்பித்த நாட்களுக்குள் சமர்ப்பிக்கவேண்டும்.

  • நிறுவனத்தை இயக்குவதற்கு உண்டாகும் செலவுகள் மற்றும் வருடாந்திர வருமானத்தை குத்துமதிப்பாக கணக்கீடு செய்யவேண்டும்.

  • பணிகள் பற்றிய விரிவாக விவரங்கள் அல்லது சங்கத்தின் முந்தையப் பணிகள் மற்றும் பதிவு மேற்கொண்ட பிறகு தொடர வேண்டிய பணிகள் அனைத்தும் பிரிவு 25ன்படி அறிக்கையாக தயாரித்து சமர்ப்பிக்கவேண்டும்.

  • விண்ணப்பம் தயாரிக்க அடிப்படையான தகவல்கள் பற்றிய அறிக்கையை, தயாரிக்கவேண்டும். விண்ணப்பிக்கும் நபர்கள் தெளிவான மனநிலையில் தீர்மானம் எடுத்ததாகவும், எவ்வித குற்றமும் மேற்கொள்ளாமல் பிரிவு 203, நிறுவனச் சட்டம் 1956க்கு கீழ் அல்லது சட்டவிதிகள் இயக்குநராக அல்லது தகுதியுடையவர் என்று சான்றளிக்கவேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள், நிறுவனங்களின் பதிவாளர் பதிவு பெற்ற நிறுவனங்கள் இருக்கின்ற மாநிலம் விண்ணப்பப் படிவத்தின் நகல் மற்றும் மண்டல இயக்குநர் நிறுவன சட்ட வாரியம் முன்னர் பதிவு செய்ய ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டும்.

  • விண்ணப்பதாரர்கள் நிறுவன மண்டல  இயக்குநரிடம் விண்ணப்படிவத்தை சமர்ப்பித்த ஒரு வாரத்திற்குள் மாவட்டத்தின் மொழியில் ஒரு தடவையாவது செய்தித்தாளில் நிறுவனத்தின் பதிவு அலுவலகம் எங்கு உள்ளது என்று அறிவிப்பு வெளியிடவேண்டும். மேலும் ஒரு முறை ஆங்கிலத்தில் அம்மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிக்கும் பரவுமாறு அறிவிப்பு வெளியிடவேண்டும்.

  • மண்டல இயக்குநர், பதிவு அலுவலகத்தை பற்றிய அறிவிப்பு வெளியிட்ட 30 நாட்களுக்குள் நிர்வாகம் துறை அல்லது செயலகத்தை ஆலோசனைக் கொண்ட பிறகு உரிமம் தருவதா வேண்டாமா என்ற தீர்மானத்தை எடுப்பர்.

  • மண்டல இயக்குநர் அந்நிறுவனத்தை ஒப்பந்தத்தில் சேர்ப்பது பற்றி முடிவு எடுப்பர்.

மூலதனம்

http://inanswers.yahoo.com/question/index?gud=20080001020231) AANZEOY

சங்கம் சட்டம், 1956 பற்றிய அறிய கொடுக்கவும்

சங்கம் அறக்கட்டளை மற்றும் லாப நோக்கமற்ற நிறுவனம் - ஒரு ஒப்புமை

அறக்கட்டளை சங்கம் மற்றும் லாபமற்ற நிறுவனங்களுக்கு இடையேயான வேறுபாடுகள்

அறக்கட்டளை சங்கம் நிறுவனம் - பிரிவு 25
சட்டம் / நிதீ வடிவம் தொடர்புடைய மாநில அறக்கட்டளை சட்டம் அல்லது பம்பாய் பொது அறக்கட்டளை சட்டம் 1950 சங்க பதிவு சட்டம் 1860 இந்திய நிறுவனச்சட்டம் 1956
சட்ட பொறுப்பு துணை பதிவாளர் / அறக்கட்டளை கண்காணிப்பாளர் சங்கப்பதிவாளர் (மகாராஷ்டிராவில் அறக்கட்டளை கண்காணிப்பாளர்) நிறுவன பதிவாளர்
பதிவு ஒரு அறக்கட்டளையாக மகாராஷ்டிராவில் சங்கம் மற்றும் அறக்கட்டளை இரண்டுமே சங்கமாகவே கருதப்படும் இந்திய நிறுவனம் சட்டத்தின் கீழ் பிரிவு 25ல் நிறுவனத்திற்காக கருதப்படும்
பதிவு பத்திரம் அறக்கட்டளை பத்திரம் கூட்டமைப்பு ஒப்பந்தம் மற்றும் விதிகள் மற்றும் நடை முறைகள் ஒப்பந்தம் மற்றும் ஒப்பந்த கருத்துக்கள் மற்றும் நடைமுறைகள்
முத்திரை கட்டணம் அறக்கட்டளை பத்திரம் பிரிவு பெறாத முத்திரைதாள் அது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் கூட்டமைப்பு ஒப்பந்தம் மற்றும் விதிகள் நடைமுறைகளுக்கு முத்திரைதாள் தேவையில்லை கூட்டமைப்பு ஒப்பந்தம் மற்றும் கூட்டமைப்பு கருத்துக்களுக்கு முத்திரை தாள் அவசியமில்லை

மூலதனம் காப், இந்தியா

பதிவு

தலைமை அலுவலகம்
பதிவு பொது கண்காணிப்பாளர்
எண் 100, சாந்தோம் நெடுஞ்சாலை
சென்னை 600 038
தொலைபேசி : 91-44-24942774
மின்னஞ்சல் :igregn@tnreginet.net
http://www.tnreginet.net/
மாவட்ட அளவில்
மாவட்ட பதிவு அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் வளாகம்

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015