முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
தவேப வேளாண் இணைய தளம் :: ஊட்டச்சத்து

பெருஊட்டச்சத்துக்கள்

மனிதனின்  உடலில் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் ஒரு ஆரோக்கியமான வாழ்வுக்கு சத்துக்கள் ஒரு பெரும் முக்கியத்துவமாகும். புரதம்,  கொழுப்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், தனிமங்கள் மற்றும் நீர் ஆகியவை சத்துக்கள் ஆகும். இந்த சத்துக்கள் நாம் தினசரி சாப்பிடும் உணவு உள்ளன. நாம் தினமும் எடுத்துக் கொள்ளும் இந்த சத்துக்கள் உணவுகளான தானியங்கள், பருப்புவகைகள் , மற்றும் எண்ணெய் வித்துக்கள், காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் பால்பொருட்கள், மாமிச உணவுகள் (மீன், இறைச்சி மற்றும் கோழி) உள்ளன. புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் சில நேரங்களில் அண்மை பகுதிகளாக குறிப்பிடப்படுகிறது. இவைகள் ஆக்ஸிஜனேற்றமடைந்து உடலுக்கு தேவையான ஆற்றல் விளைவிக்கிறது. வைட்டமின்கள் மற்றும் தனிமங்கள் ஆற்றல் வழங்காது ஆனால் அவைகள் அருகில்  உடல் மற்றும்  வளர்சிதைமாற்ற செயல்பாடுகளை கட்டுப்பாடுத்தும் ஒருமுக்கிய பங்குவகிக்கின்றன.

ஆற்றல்
ஆற்றலானது மனிதனின் ஓய்வு, செயல்பாடு மற்றும் வளர்ச்சிக்கு அவசியம். இது   சுவாசம், இரத்தஓட்டம், செரிமானம், உறிஞ்சுதல்,வெளியேற்றுதல்,  ,உடல் நன்றாக ஓய்வில் இருக்கவும், உடல் வெப்பநிலை பராமரிப்பு முதலியவைக்கு  பெரிதும் அவசியமானது.  உடல் முழு ஓய்வில் இருக்கும் (மனதாலும் உடலாலும்) போது ஆற்றல் குறிப்பிட்ட அளவு செலவழிக்கப்படுவது இழிவு் சேர்க்கையெறிகை அல்லது நின்று போகும் வளர்சிதை மாற்றம்  என்று அழைக்கப்படும். வயது, பாலினம், உயரம் மற்றும் எடை மற்றும் தனிப்பட்ட ஊட்டச்சத்து அளவானது இந்த் காரணிகளை பொருத்து அமையும்.

ஒரு தனிநபரின் ஆற்றல் தேவையானது தினசரி ஆற்றல் செலவு அடிப்படையில் அமையும்.  இது வயது, உடல் எடை, உடல் செயல்பாடு, வளர்ச்சி மற்றும் உடலமைப்பை பொருத்தது. இந்தியாவில், மொத்தம்உணவு கலோரியானது 70-80% தானியங்கள், பருப்புவகைகள் மற்றும் கிழங்குகள் போன்ற  உணவு தானியங்கள் பெறப்படுகிறது.

குழந்தைகள், இளம்பருவத்தினர் உட்பட கலோரியை தங்களது அன்றாட தேவைக்கு 55-60%  கார்போஹைட்ரேட் இருந்து பெறுகின்றனர். இளம்பருவத்தினரின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அதிக அளவிலான சக்தி தேவைப்படுகிறது. உதாரணமாக, 16-18 வயது வரையுள்ள பெண்கள் மற்றும் சிறுவர்கள் 2060 KCals - 2640 KCals வரை முறையே தேவைப்படுகிறது.

கர்ப்ப காலத்தில், கூடுதலாக ஆற்றல் கருவளர்ச்சி மற்றும் கர்ப்பிணிபெண்கள் சுகாதாரத்துக்கு தேவைப்படுகிறது.ஆற்றல் போதாமையால் ஊட்டச்சத்து குறைவும்  அதேநேரத்தில் அதிகம் உணவு உட்கொள்வதால் உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது.

ஆற்றல் அதிகமுள்ளஉணவுகள்
ஆற்றல் அதிகமுள்ளஉணவுகள் பொருட்களான தானியங்கள், பருப்புவகைகள், கிழங்குகள், தாவரஎண்ணெய்கள், நெய், வெண்ணெய், கொட்டைகள், எண்ணெய்வித்துக்கள், சர்க்கரை,சிறுதானியங்களான  கம்பு, கேழ்வரகு போன்றவைகளும்  மலிவான  மற்றும் ஆற்றல் மிகு உணவு பொருட்களாகும்.1கி கார்போஹைட்ரேட் அல்லது புரதத்தில் 4  கிலோகலோரி  (16.8KJ) , 1கி கொழுப்பில்  9 கிலோகலோரி (37.8KJ) ஆற்றல் உள்ளது.பெரு அளவு ஊட்டச்சத்துக்கள் ஆற்றலை கிலோகலோரிகளில் வடிவில் கொடுக்கின்றன (கி.கலோரி).சத்துக்களான அதாவது மாவுச்சத்து, புரதம் மற்றும் கொழுப்பு ஆகியவை பெரு அளவு ஊட்டச்சத்துக்கள் ஆகும்.

ஆதாரம்:
Vijayapushpam et al. 2008, Why do we need energy? NIN, Hyderabad.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015