முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
தவேப வேளாண் இணைய தளம் :: ஊட்டச்சத்துக்களின் முக்கியத்துவம்
தண்ணீர்
தண்ணீர், மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஊட்டச்சத்தாகும். மனித உடல் 70 % தண்ணீரால் ஆனது. வியர்வை, கழிவுகள் மூலம் ஏற்படும் நீரிழப்பை நமது உணவு, குறிப்பாக, நீர் அருந்துவதன் மூலம் ஈடு செய்யலாம்.

செயல்பாடுகள்

  • செரிமான திரவங்கள், நிணநீர், இரத்தம், சிறுநீர் மற்றும் வியர்வைத் தண்ணீரால் ஆனது.
  • செரிமானப் பொருட்களுக்கு நீர் கரைப்பானாக செயல்பட்டு அவற்றை ஒரு திரவக் கலவையாக மாற்றி உடல் சுவர்கள் மூலம் உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் கலக்க உதவுகிறது
  • ஊட்டச்சத்துக்கள் உடலில் எல்லா இடங்களுக்கும் சென்று வர செய்கிறது.
  • உணவை மெல்லுதல், உறிஞ்சுதல் மற்றும் செரிமானத்திற்கு நீர் உதவுகின்றது.
  • தண்ணீர், உயவுப்பொருளாக செயல்படுகிறது. அது திசுக்களின் உள்ளேயும் சுற்றியும் பரவி நமது உடலை அதிர்ச்சியிலிருந்து காக்கின்றது. மூளை, கண்கள் மற்றும் முதுகுத்தண்டு ஆகிய நுட்பமான உறுப்புகளைச் சுற்றியும் நீர்ப்படலம் காக்கின்றது.
  • உயிரிமிகளின் எதிர் வினையால் ஏற்படும் வெப்பத்தை உடல் முழுவதும் பரவச்செய்து உடல் வெப்பத்தைச் சீராக்குகின்றது.
  • கழிவு மற்றும் நச்சுக்கள் வெளியேறத் தூண்டுகிறது.

நீர் - ஆதாரம்
உடலுக்குத் தேவையான நீர்
  • நீர் மற்றும் நீர் பானங்களை உட்கொள்வதாலும்,
  • உணவுப்பொருட்களிலுள்ள நீரினாலும்
  • உணவுப்பொருட்களில் உயிரேற்றம் ஏற்படுவதின் மூலமும் கிடைக்கின்றது.
உணவு
தண்ணீரின் சதவீதம்
பால் 87%
முட்டை 75%
இறைச்சி 40%
காய்கறிகள் மற்றும் பழங்கள்        70-95%
தானியங்கள், தயார் நிலை 1-5%
தானியங்கள் சமைத்தது 80-88%
ரொட்டி வகைகள் 35%


தினசரி ஏற்படும் நீரிழப்பு

தினசரி ஏற்படும் நீரிழப்பு மி/லி
மலம் 100-200 மி
சிறுநீர்   1000-1500 மி
நுரையீரல்  250-400 மி
உணர்வில்லாத வியர்வை       400-600 மி
கண்ணுக்குப் புலப்படும் வியர்வை   0 - 10,000 மி

தேவை

 நாளொன்றிற்குக் குறைந்தது 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் தேவைப்படுகின்றது. இதனால் கணிசமாக, மூட்டு மற்றும் முதுகு வலியிலிருந்து விடுபடலாம்.


ஆதாரம்:

Robinson,C.N and Lawler, M.R 16 Edition. Normal and Therapeutic Nutrition. Oxford and IBH Publishing Co, Delhi.
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015