தவேப வேளாண் இணைய தளம் :: ஊட்டச்சத்து :: வெப்பத்தை குறைக்க எளிய உணவு முறைகள்

கோடை காலத்தில் வெப்பத்தின் அளவு கூடும் போது மருத்துவர்கள் மற்றும் உணவியல் நிபுணர்கள் அதிக அளவில் தண்ணீர் அருந்தவும், எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ள அறிவுறுத்துகிறார்கள். இதனால் உடல் குளிர்ச்சி அடைகிறது.

கோடையில் அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்:

இளநீர்:இளநீர் வெப்பத்தைப் போக்குவதோடு நல்ல ஊட்டச்சத்தையும் கொண்டது. இளநீரில் உள்ள வழுக்கையில் வைட்டமின்கள், தாதுப்பொருட்கள், இணையற்ற பொட்டாசியம் சத்தும் நிறைந்துள்ளதால் அவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
நெல்லிக்காய்:புத்துணர்ச்சியையும், வயது மூப்பையும் தடுக்கவல்ல நெல்லிக்காயானது கடும் வெப்பகதிர்களிலிருந்து நம்மை காக்கின்றது. அது இதயத்திற்கும், தலைமுடிக்கும் சிறந்த ஊட்டச்சத்தை தருகின்றது.
ஆப்ரிகாட்:இதில் சிறந்த அளவு இரும்புச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்சத்து நிறைந்துள்ளதால் வெப்பத்தால் ஏற்படும் வேர்குரு, கட்டிகளை நீக்குகிறது. உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும் எடுத்துக்கொள்ள சிறந்த உணவாகும்.
தக்காளி:தக்காளி சாலடாக எடுத்துக்கொள்வது சிறந்தது. இயற்கையான வெப்பத்தில் இருந்து நம் தோலை காக்கும் தன்மையும் உடையது.
தர்பூசணி:கோடை காலங்களில் பிரியமான உணவான தர்பூசணி 92% தண்ணீரை கொண்டதால் நீரிழப்பிலிருந்தும் கடுமையான வெப்பத்திலிருந்தும் காக்கிறது.
செரி: இந்த சிறிய பழங்கள் தூக்கமின்மைக்கு சிறந்த உணவாகும். கொழுப்பு சத்தையும் குறைக்கவல்லது.
ஏலக்காய்:வெயிலில் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு ஏலக்காய் டீ சிறந்தது. இது நச்சு நீக்கும் தன்மையுடையது.
சோளம்:பேண்டோதினிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி நிறைந்துள்ள சோளம் உடல் அழற்சியை நீக்கவல்லது. இது கொலஸ்ட்ராலையும் குறைக்கின்றது.
மாங்காய்:வேகவைத்த மாங்காயில் ஜீரகம் மற்றும் உப்பு சேர்த்த பானம் வெப்பத்தினால் ஏற்படும் வெப்பதாக்கம் மற்றும் களைப்பிற்கு சிறந்தது.

மோர்:நீரழிப்பு மற்றும் அஜீரணத்திற்கு மோர் சிறந்த உணவாகும்.

தயிர்:பனிக்கூழுக்கு சிறந்த மாற்றான தயிர் வைட்டமின்கள், கால்சியம் நிறைந்தது. வயிற்றுப்புண், ஒவ்வாமை மற்றும் வெப்பத்தினால் ஏற்படும் கட்டிகளுக்கு சிறந்தது.

பழரசம்: எலுமிச்சை மற்றும் பலவகையான  பழரசம் உடலின் ஏற்படும் நீரழிப்பை சமன் செய்கிறது.

குறைத்து கொள்ள வேண்டிய உணவுகள்:

  • தயார் நிலை குளிர்ந்த தேநீர் மற்றும் சோடா பானங்கள் அதிக சர்க்கரை சத்துடையது. பாதுகாப்பான், நிறமிகள் நிறைந்திருப்பதால் இவற்றை தவிர்ப்பது நல்லது.
  • கோடைகாலங்களில் மாமிச உணவு எளிதில் ஜீரணமாகாது. எளிய உணவுகளை தேர்ந்தெடுப்பது சிறந்தது.
  • கொட்டை மற்றும் நறுமணப்பயிர் வகைகள் கோடை காலத்தை விட குளிர் காலத்திற்கு சிறந்தது.  
http://indiatoday.intoday.in/story/special-summer-diet-beneficial-food-items-during-summer/1/189250.html
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள்| தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015