organic farming
அங்கக வேளாண்மை :: தோட்டப் பயிர்கள்

ஏலக்காய் பயிரின் அங்கக சாகுபடி

ஏலக்காய் பயிரானது கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. ஏலக்காய் உற்பத்தியில் இந்திய இரண்டாவது இடம் வகிக்கிறது. பராம்பரிய தோட்டங்களைச் சுற்றி 25 மீ. அகலத்துக்கு தனிமைப்படுத்தப்படுகிறது. இந்தப்பகுதியில் இருந்து வரும் விளைபொருளை அங்ககப் பொருளாக எடுத்துக்கொள்ளக் கூடாது. மறுபயிரிடப்பட்ட மற்றும் புதிதாக பயிரிடப்படும்  பகுதிகளில், 4வது வருடத்திலிருந்து வரும் விளைபொருளையே அங்கக மில்லி லிட்டராக எடுத்துக் கொள்ளலாம். அங்கக முறையில் பயிரிடும் பொருட்களை பயன்படுத்தினால், குறைந்தது 2 வருடத்திற்கு பயிரிடுவதற்கு முன் அங்கக இடுபொருட்களை பயன்படுத்தாமல் இருந்தாலும். அதிலிருந்து வரும் மகசூலை அங்கக சாகுபடியாக எடுத்துக் கொள்ளலாம். எந்த விதமான இராசயன இடு பொருட்கள் முன்னர் பயன்படுத்தாமல் இருந்தாலும், இந்த மாற்றப் பகுதி தளர்த்தப்படலாம். 

பயிரிடத் தேவையான மூலங்கள்

அங்கக முறை பயிரிடப்படாமல் இருந்தாலும், விதைகளை அதிலிருந்து பயிரிடுவதற்கு எடுத்துக் கொள்ளலாம். கிழங்குகள் விதைப்பதற்கு எடுத்துக் கொண்டால், அந்த தோட்டம் முழுவதும் ஒரு வருடத்திற்காகவது அங்கக விதிமுறைகளை பயன்படுத்தி இருக்க வேண்டும். திசு வளர்ப்பு செடிகளை பயிரிடப் பயன்படுத்தக் கூடாது. அமில விதை நேர்த்தியை தவிர்க்க வேண்டும். டிரைக்கோடெர்மா வளர்ச்சியை (100 கிராம் விதைக்கு 50 மி.லி.டிரைக்கோடெர்மா) கொண்டு விதை நேர்த்தி செய்தால் நாற்றங்கால் அழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம். விதைப் படுக்கைகளைத் தயார் செய்யும்போது  வாம் கரைசலை மண்ணில் பரப்ப வேண்டும். பாலித்தீன் பைகளில் நாற்றுக்களை வளர்த்தால், பானைக் கலவையான மண், எரு, மண்புழு உரம், மணல் 3:1:1 என்ற விகிதத்தில் கலந்து அளிக்க வேண்டும். வாம் மற்றும் டிரைக்கோடெர்மாவை கலந்து (25 கிலோ நன்கு சிதைந்த மாட்டு சாணியை 250 கி கலவை கலக்க வேண்டும் , இடலாம் செடியின் வளர்ச்சி நன்றாக இல்லாமல் இருந்தால், வெர்மிவாஷ் ஒரு செடிக்கு 20 மில்லி, தெளிக்க வேண்டும். போர்டாக்ஸ் கலவை 1%ஐ அழுகல் நோய்க்காக ஆரம்ப நிலையில் சிறிதளவு பயன்படுத்தலாம்.

பயிரிட நிலத்தை தயார் செய்தல்

மலைச் சரிவு பகுதிகளில், நிலத்தைத் தயார் செய்யும் போது தேவையான அளவிற்கு மண் மற்றும் நீர் பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும். மழை குறைவான பகுதிகளில், குழிகளில் நடும் போது. மூலவிட்ட வடிவில் விதைத்தல் மற்றும் மூடாக்கு செய்வதால் மண் அரிப்பைத் தடுக்கலாம்.

உழவியல் முறைகள்

சுத்தமான களையெடுக்க வேண்டும். இந்த களைகளை மூடாக்காகப் பயன்படுத்தலாம். உதிர்ந்த இலைகளை மூடாக்குக்கு பயன்படுத்தலாம். இடைவரிசைகளில் குழித் தோண்டக் கூடாது. பூச்சிக் கொல்லிகள், பூஞ்சாணக் கொல்லிகள், இதர இராசயனங்கள், உரங்கள் பாசன நீரில் கலக்கக் கூடாது. மண் பாதுகாப்பு முறைகளை முறையாக ஏற்படுத்தியிருந்தால், மண் அணைத்தல் செய்ய வேண்டியதில்லை.
பயிரைச் சுற்றி நிழல் ஏற்படுத்த மரங்களின் கீழ் பயிரிட வேண்டும். மழைக்காலத்தின் போது இலைகள் உதிர்தல், தானாகவே கிளை, தழைகள் உதிர்தல், கோடைகாலத்தில் பூத்தல் போன்ற குணங்களை கொண்ட மரங்களை நிழல் தடுவதற்காக தேர்ந்தெடுக்க வேண்டும். பயிறு வகைப் பயிர்களாக இருந்தால் மிகவும் நல்லது. தேனீப் பண்ணை வயலில் அமைத்தால், மகரந்தச் சேர்க்கையை அதிகப்படுத்தலாம்.

உரமிடுதல்
வேப்பங்கட்டி 1 கிலோ (அ) கோழிகளின் எச்சங்கள் பண்ணை எரு கம்போஸ்ட் மண்புழு உரம் ஒரு செடிக்கு 2 கிலோ என்ற அளவில் மே-ஜீன் மாதத்தில் வருடத்திற்கு ஒருமுறை அளிக்கலாம். முசோரி பாறை பாஸ்பேட் (அ) எலும்புத்தூளையும் மண் ஆய்வின்படி அளிக்கலாம்.

பயிர் பாதுகாப்பு

நோய்கள்

அழுக்கல் (பைட்டோத்தோரா மெய்டி), குத்து அழுகல் (பித்தியம் வெக்லான்ஸ், ரைசோக்டினியா சொலானி மற்றும் ப்யூசேரியம் வகைகள்) போன்றவை ஏலக்காயின் முக்கியமான நோய்களாகும். டிரைக்கோடெர்மாவை (ஒரு குத்துக்கு1 கிலோ) பருவமழை ஆரம்பமாவதற்கு முன் குத்து அழுகல் நோயை கட்டுபடுத்த அளிக்கலாம். போர்டாக்ஸ் கலவை 1% யைப் பயன்படுத்தலாம். நோயுற்ற செடிகளை அகற்றி அழிக்க வேண்டும்.

பூச்சிகள்

வாடி வதங்கிய இலைகள், இலையுறைகள், வயதான கதிர்கள் மற்றும் இதர காய்ந்த செடிப் பகுதிகளை அகற்ற வேண்டும். முட்டைகள், புழுக்களை கையால் சேகரித்து அழிக்க வேண்டும். தண்டு துளைப்பானை (கோனோகீத்தஸ் பங்டிபெராலிஸ்) துளைகளில் பேசில்லஸ் துரியன்ஜியன்ஸிஸ்(10மி.லி.நீரில் 0.5 மிலி கரைக்க வேண்டும்) ஊற்றிக் கட்டுபடுத்த வேண்டும். எங்கெல்லாம் அங்கக சாகுபடி நடைமுறையில் உள்ளதோ, அங்கெல்லாம் வெள்ளை ஈக்களின் (டையாலூராய்டிஸ் கார்டார்மி) தாக்கம் அதிகமாக இருக்கும். அதிகப்படியான தாக்கம் இருந்தாலும், தாய்ப்பூச்சிகளை மஞ்சள் ஒட்டுப் பொறியைக் கொண்டு சேகரித்து அழிக்க வேண்டும். இளம் பூச்சிகளை மென்சோப்புடன் சோடா காரம் கலந்து (500 மி.லி. வேப்பஎண்ணெய், 500 கி மென் சோப்பை 100 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும்) தெளிக்க வேண்டும். நூற்புழுக்களின் (மெலாய்டிகைன் வகைகள்) தாக்கம் அதிகம் இருக்கும் போது வேப்பங்கட்டி தூளை மண்ணில் அளிப்பதால் கட்டுபடுத்தலாம். மீன் எண்ணெய் ரோசின் சோப்பை இலைப்பேனைக் கட்டுபடுத்த தெளிக்கலாம். மலபார் வகைகள் இலைப்பேன் தாக்கத்திலிருந்து தாங்கி வளரும்.

அறுவடை மற்றும் அறுவடையின் சார் முறைகள்

அறுவடை செய்தபின் காய்களை அழுக்கு எதுவும் இல்லாமல் சுத்தம் செய்ய வேண்டும். ஏலக்காயை 80% ஈரப்பதத்திலிருந்து 8-12% ஈரப்பதம் இருக்குமாறு குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்து பச்சை நிறம் மாறாமல் பதப்படுத்த வேண்டும். ஏலக்காயை 2 முறைகளில் பதப்படுத்தலாம்
சூரிய ஒளியில் உலர்த்த வேண்டும் . ஏலக்காயை உலர்த்த 5-6 நாட்கள் ஆகும். மழைக் காலத்தைப் பொறுத்த இது மாறாது. இந்த முறை கர்நாடகாவின் சில பகுதிகளில் பின்பற்றப்படுகிறது. இந்த முறையால், ஏலக்காயின் பச்சை நிறத்தை அப்படியே பெறலாம்.

பராம்பரிய முறைப்படி பதப்படுத்துதல்

இந்த துறை பொதுவாக ஏலக்காயை பதப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. இதற்காக அமைப்புக்களைக் கொண்டு பதப்படுத்த வேண்டும். இந்த அமைப்பில் 2 அறைகள் இருக்கும். பதப்படுத்தும் அறை மற்றும் புகையூட்டும் அறை, பதப்படுத்தும் அறை உயரமான கூரையுடன் தரைக்கு இணையாக அறையின் உயரமான கூரையுடன் தரைக்கு இணையாக அறையின் நடுவில் பெரிய குழாய் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். புகை அறையை விட்டு வெளியேற சிம்னியுடன் குழாய்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஏலக்காயை பதப்படுத்த செவ்வக வடிவ தட்டுக்கள் பக்கச் சுவற்றுடன் பொருத்தியிருக்கும்.

ஏலக்காய்கள் ஒரு பரவலாக தட்டுக்களில் பரப்பப்படும். பரப்பிய பின் தீமுட்டி ஏலக்காயை சூடுபடுத்த வேண்டும். மரத்திலிருந்து உதிர்ந்த கிளைகள் மற்றும் இலைகள் எரிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. சூடான புகை குழாய்களின் வழியே வந்து அறையின் வெப்பநிலை 45-50 செ. வளர உயர்த்தும். இந்த வெப்பநிலை 3-4 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். இந்த நிலையில் ஏலக்காய் இனிப்பாகவும், ஈரப்பதத்துடனும் இருக்கும். தீடீரென குளிர்படுத்துவதால், காற்று வெளியேற்றி மூலம் புகையை வெளியேற்ற வேண்டும். புகை வெளியேறிவுடன் காற்று வெளியேற்றியை மூடி விட வேண்டும். பின் அறையின் வெப்பநிலையை 40 செ. அளவுக்கு 24-30 மணி நேரத்திற்கு வைத்திருக்க வேண்டும். திரும்பவும் வெப்பநிலையை ஒரு மணி நேரத்திற்கு 45 செ. அளவுக்கு உயர்த்த வேண்டும். இந்த முறை முழுவதும் நடந்தேற 28 முதல் 36 மணி நேரம் ஆகும். பொதுவாக, ஏலக்காயின் தரம் இந்த முறையில் பதப்படுத்தினால் நன்றாக இருக்கும். சமூகமாக சேர்ந்து பதப்படுத்தினால் புகையூட்டம் குறைவாகவும், செலவு குறைவாகவும் ஆகும்.