அங்கக வேளாண்மை :: அங்கக வேளாண்மையில் விவசாயிகளின் அனுபவங்கள்
நீட்டிக்கப்பட்ட திரமி (ET)

தேவையான பொருட்கள்: (அ) குளோரின் இல்லாத 20 லிட்டர் குடிநீர் (ஆ) 1 கிலோ வெல்லம், (இ) 1 லிட்டர் திரமி கரைசல்.

தயாரிப்பு:

  • ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் இந்த கலவையை கலக்க வேண்டும் மற்றும் இதனை கொண்டு இருபது ஒரு லிட்டர் பிளாஸ்டிக் ஜாடிகளை நிரப்ப வேண்டும்.  
  • பாட்டில் மூடிகளை இறுக்கமாக மூட வேண்டும். பல்வேறு நுண்ணுயிர்கள் பெருக்கத்திற்காக 7-10 நாட்கள் வைத்து இருக்க வேண்டும்.  
  • ஒவ்வொரு பாட்டில் உள்ள மீத்தேன் வாயு உருவாகி இருக்கும்.  
  • முதல் அல்லது இரண்டாவது நாளில் தொப்பியை திறந்து வாயுவை வெளியேற்றி மீண்டும் இறுக்கமாக மூடவும்.  
  • இதை அடிக்கடி தேவையான பொழுது செய்யவும். 
  • ஒவ்வொரு திறக்கப்படாத பாட்டில்களில் உள்ளடக்கங்களை 3-4 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

பயன்பாடு: 5-10 லிட்டர் நுண்ணுயிர் கரைசலை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

இந்த வளர்ச்சி மற்றும் பூச்சிகள் கட்டுப்பாட்டை ஊக்குவிக்கிறது. இது 100 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் என்ற அளவில் பயிர் எச்சங்கள் சிதைவிற்கு பயன்படுத்தப்படுகிறது. ஏக்கருக்கு 3-6 லிட்டர் என்ற விகிதத்தில் பாசன நீரிலும் பயன்படுத்தப்படுதலாம்.

 

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிற்சிகள் | புகைப்படங்கள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2009-16