அங்கக வேளாண்மை :: அங்கக வேளாண்மையில் விவசாயிகளின் அனுபவங்கள்
அமுத கரைசல்

பயிர் வளர்ச்சிக்கு ஒரு ஊக்கியாக செயல்படுகிறது. மிக சிறிய வேலை மூலம் நாம் இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் இந்த கரைசலை உருவாக்க முடியும்.

தேவையான பொருட்கள்: 1 லிட்டர் கோமியம் , 1 கிலோ சாணம் , 10 லிட்டர் நீரில் 250 கிராம் வெல்லம் தேவை.

தயாரிப்பு: சாணத்தை முற்றிலும் தண்ணீரில்  கலக்க வேண்டும். சிறுநீர் சேர்த்து நன்றாக கலக்கவும் . வெல்லத்தை தூளாக்கி மேலே உள்ளவற்றுடன் கலக்கவும், கட்டிகள் இல்லாதவாறு மூடி 24 மணி நேரத்திற்கு வைத்திருக்க வேண்டும்.

பயன்பாடு: இந்த கரைசலைப் பத்து லிட்டர் தண்ணீரில் கலக்கவும் (10 சதவிகிதம்).
நீர்மமாக்குவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் இலைகள் காய்ந்து விடும்.
               
இந்த கரைசல் நேரடியாக இலைகள் வளர்ச்சிக்கு  உதவுகிறது. இது பூச்சிகள் தடுக்கும் தன்மையுடையது, வெல்லத்திற்குப் பதிலாக பழ கழிவுகளைப்  பயன்படுத்தலாம்: ஒரு நைலான் பையில் ஒரு கிலோ கழிவுகள் பழம் கட்டி சிறுநீரில் மூழ்கடிக்கவும்.  ஐந்து நாட்கள் ஊற விட வேண்டும். இது  பழம் நொதிக்க உதவுகிறது. இதனுடன் பத்து மடங்கு தண்ணீர் சேர்த்து தெளிப்பு அல்லது ஒரு ஏக்கருக்கு என்ற 60-100 லிட்டர் என்ற அளவில் பாசன நீரில் கலந்து அளிக்கலாம் .

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிற்சிகள் | புகைப்படங்கள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2009-16