அங்கக வேளாண்மை :: அங்கக வேளாண்மையில் விவசாயிகளின் அனுபவங்கள்
இளநீர் - மோர் கரைசல்

இந்த கரைசல் சுலபமாக தயாரிக்கலாம், தாவர வளர்ச்சி அதிகரிக்க உதவுகிறது, பூச்சிகள் தடுக்கிறது, காளான் நோய்களுக்கான எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மேலும், இது தாவரங்களின் பூக்கும் தன்மை மேம்படும். இந்த கரைசல் சைட்டோசைம்/ பயோசைம் போன்று அதே வளர்ச்சி அதிகரிக்கும் சாத்திய கூறுகள் உள்ளது. (இவை வர்த்தக பெயர்கள்).

தேவையான பொருட்கள்: 5 லிட்டர் மோர், 1 லிட்டர் இளநீர், 1-2 தேங்காய், 500மிலி-1லிட்டர் கழிவுகளிலிருந்து பெறப்படும் சாறு (அல்லது 500 கிராம் - 1 கிலோ பழ கழிவுகள் சாறு பிரித்தெடுக்கும் முறை எளிதானது இல்லை என்றால் ).

தயாரிப்பு:

  • தேங்காய் உடைத்து ஒரு பாத்திரத்தில் இளநீர் சேகரிக்க வேண்டும். இதனுடன் மோர் சேர்த்து நன்றாக கலக்கவும், தேங்காயை இதனுடன் சேர்த்து இதனை ஊற விட வேண்டும்.
  • அல்லது, தேங்காய் மற்றும் பழ (சாறு வடிவத்தில் இல்லை என்றால்) கலந்து, ஒரு நைலான் வலையில் வைத்து கட்டி, மோர் திரவத்தில் மூழ்கடித்து வைக்கவும்.
  • இந்த கரைசல் ஏழு நாட்களில் நன்கு புளித்து விடுகிறது.
  • நைலான் பையில் உள்ளடக்கங்களை ஒவ்வொரு முறையும் தேங்காய் ஒரு சிறிய அளவு சேர்ப்பதன் மூலம் அடுத்தடுத்த ஒரு சில முறை பயன்படுத்தலாம்.

பயன்பாடு: 300-500 மில்லி கரைசலை பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். இது ஏக்கருக்கு 5-10 லிட்டர் என்ற விகிதத்தில் பாசன நீ ரிலும் பயன்படுத்தலாம்.

 

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிற்சிகள் | புகைப்படங்கள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2009-16