அங்கக வேளாண்மை :: அங்கக வேளாண்மையில் விவசாயிகளின் அனுபவங்கள்
மேல்சாம்பல் நோய்

தேவையான பொருட்கள் :

(அ) 3-5 கிலோ கற்றாழை, (ஆ) 10-12 கிலோ பின்வரும் ஒன்றின் இளம் இலைகள்: மூங்கில், சவுக்கு அல்லது லண்டானா காமரா (இ) 100-200 கிராம் மஞ்சள் தூள், (ஈ) 250-500 கிராம் சூடோமோனாஸ், (இ) 10 லிட்டர் ஆர்கியபாக்டீரியல் கரைசல்.

தயாரிப்பு :

  • கொதிக்கும் முறையை பயன்படுத்தி 50 லிட்டர் கரைசல் தயார் செய்யவும்.
  • அதே நேரத்தில், ஆர்கியபாக்டீரியல் கரைசல் மற்றும் சூடோமோனாஸ் கலந்து 12 மணி நேரம் வைத்திருக்கவும்.

பயன்பாடு: மேலே இரண்டு கரைசலை கலந்து போதுமான அளவு தண்ணீர் சேர்த்து மொத்த அளவாக100 லிட்டர் கொண்டு வந்து பின்னர் தெளிக்கவும்.

மேலே கூறியவற்றை தெளிக்கும் போது, சூடோமோனாஸ் மேற்குறிப்பிட்ட அளவில் போதுமானது. சாதகமற்ற காலநிலையில், பூஞ்சை நோய்கள், பாக்டீரியா மற்றும் மேல் சாம்பல் நோய் தாக்குதல் கடுமையாக இருக்கும். இந்த நிலையில் 1-2 கிலோ சூடோமோனாஸ் அதிகரித்து வராமல் தடுக்கலாம். இதனை 7-நாட்கள் இடைவெளியில் 2 முறை தெளிக்க வேண்டும்; மூன்றாவது தெளிப்பு பத்து நாட்களுக்கு பின்னர் இருக்க வேண்டும். இதனால் சாகுபடி செலவு அதிகமாவது தவிர்க்க முடியாமல் போகிறது. ஆனால், ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு ஒப்பிடும்போது செலவு மிகவும் குறைவாக உள்ளது. தவிர, இந்த கரிம முறை நம் உடல் ஆரோக்கியத்தில் எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது.

 

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிற்சிகள் | புகைப்படங்கள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2009-16