அங்கக வேளாண்மை :: அங்கக வேளாண்மையில் விவசாயிகளின் அனுபவங்கள்
மீன் அமிலம்

மீன் அமிலம் மிகவும் இயற்கை வழியில் பசுந்தாள் கொடுக்க உதவுகிறது. இது பரவலாக ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் அங்கக விவசாயிகளால் பயன்படுத்தப்படுகிறது

தேவையான பொருட்கள்: 1 கிலோ மீன் , 1 கிலோ வெல்லம் .

தயாரிப்பு:

  • மீன் குடல்களை நீக்கி மற்றும் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும் . ( குடல் பயன்படுத்துவதால் தீங்கு இல்லை, ஆனால் துர்நாற்றம் வீசக்க்கூடியது) .
  • தூள் வெல்லத்தை அதனுடன் சேர்க்கவும்.
  • இரண்டையும் பரந்த வாய்ப்பகுதி கொண்ட கண்ணாடி குடுவை ( சிறந்த ) அல்லது பிளாஸ்டிக் ஜாடியை சரியான அளவு ( மிக பெரிய இல்லை ) தேர்தெடுத்து ( தொப்பி ) இறுக்க மூடி காற்று புகாதவாறு இருக்க வேண்டும்.
  • ஜாடியை குலுக்க கரைசல் நன்றாக கலந்து விடும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
  • முப்பது நாட்களில் நொதித்து விடும்.
  • நைலான் வலை பயன்படுத்தி அதை வடிகட்டினால் 300-500 மில்லி அளவிற்கு தேன் போன்ற திரவம் கிடைக்கும்.
  • இது தாவரங்களுக்கு ஒரு சிறந்த ஊட்டச்சத்தாக அமைகிறது.

பயன்பாடு: ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மில்லி சேர்த்து தெளிக்கலாம். பாசன நீருடன் கலந்தும் தெளிக்கலாம் ( ஆனால் குறைந்தபட்சம் மீன் 5 கிலோ மற்றும் வெல்லம் 5 கிலோ பயன்படுத்த வேண்டும்) .

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிற்சிகள் | புகைப்படங்கள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2009-16