அங்கக வேளாண்மை :: அங்கக வேளாண்மையில் விவசாயிகளின் அனுபவங்கள்
கம்பளிப்பூச்சி புழுக்கள் , இலைச்சுருள் புழு , இலை சுருட்டுப்புழு கட்டுப்படுத்த அல்லது தண்டு துளைப்பான் கட்டுப்படுத்தும் முறை

தேவையான பொருட்கள்:

  • கரைசல் தயாரிப்பு (நொதித்தல் முறை அல்லது கொதிக்கும் முறையை பயன்படுத்தி ) மேலேகுறிப்பிட்ட பூஞ்சான கட்டுபாட்டிற்கு.

  • பின்வரும் விதைகள் / பழங்கள் தூள் ஒரு [ (அ) (ஏ) மூலம் பட்டியலில் கீழே உள்ளவற்றை சேர்க்கவும்: (அ) வேம்பு, புங்கம் , அல்லது மலை வேம்பு 1-2 கிலோ , (ஆ) 250-500 கிராம் , (இ) சீதாப்பழ அல்லது தங்க அரளி 200-250 கிராம் , (ஈ) எட்டி100-250 கிராம் , (உ) கடுக்காய் சுண்டக்காய் 1-2- கிலோ , (ஊ) பச்சை மிளகாய் 500-1000 கிராம் , (எ ) வில்வம் பழம் 5-10 எண்ணிக்கை, அல்லது (ஏ) ஊமத்தை பழம் 10-20 எண்ணிக்கை.

தயாரிப்பு: கரைசலுக்கு தேவையான பொருட்களை தயார் செய்தல்(அ) பட்டியலிடப்பட்டுள்ள விதைகள் / பழங்கள் ஒன்றாய் (ஆ) மூலம் (அ) மற்றும் இந்த பொருட்களை கரைசலுடன் சேர்க்க வேண்டும். 12 மணி நேரம் கலவையை நொதிக்க விட வேண்டும். நாம் இப்போது மேலே கூறியவற்றை கட்டுப்படுத்த மற்றொரு கரைசலை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: (அ) 100 கிராம் சீதாப்பழ விதைகள், 500 கிராம் சிரியநங்கை, 500 கிராம் ஆடுதொடா, 1 கிலோ தங்க அரளி பழம், 1 கிலோ நொச்சி அல்லது சீதாப்பழ இலைகள், 1 கிலோ கற்றாழை, (ஆ) 1 கிலோ புகையிலை தூள் மற்றும் (இ) கரையான் புற்றிலிருந்து மண் - பசை செய்ய போதுமான அளவு எடுத்து கொள்ள வேண்டும்.

தயாரிப்பு: மேலே குறிப்பிட்ட பொருட்களை பசையாக அரைத்துக் கொள்ளவும் (அ). 6 லிட்டர் நீரில் கொதிக்க வைக்கவும். புகையிலை தூள் சேர்க்கவும், பன்னிரெண்டு மணி நொதிக்க அனுமதிக்கவும். புகையிலை சாறு சேர்த்து 2-3 நாட்களுக்கு நொதிக்க விடவும். புளிப்பு சுவையை பெற்றிருக்கும். மஞ்சள் தூள் மற்றும் கரையான் புற்று மண் போதுமான அளவு சேர்த்து பசை போன்ற நிலைத்தன்மையை கொண்டு வரவும். பயன்பாடு: 1 கிலோ பசையை 100-125 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பு செய்யலாம்.


 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிற்சிகள் | புகைப்படங்கள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2009-16