organic farming
அங்கக வேளாண்மை :: மற்ற கேள்விகள் : கேள்வி பதில்

மற்ற கேள்விகள்  

எப்படி களைகள் அங்கக பண்ணைகளில் நிர்வகிக்கப்படுகிறது?

உழவியல் மற்றும்  இயந்திர தொழில்நுட்பங்களான பயிர் சுழற்சி, மூடாக்கு,  உழவு, சாகுபடி நுட்பம்,  நீர் மேலாண்மை மற்றும் கைக்களை  ஆகியவற்றை ஒருங்கிணைத்து  அங்கக பண்ணைகளில் களை மேலாண்மை செய்யபடுகிறது. அங்கக பண்ணைகளில் களைகள் பெரும்பாலும் மண்ணை பாதுகாத்து, மண்ணின் அங்கக  தன்மையை நிலைபடுத்தி, இயற்கை எதிரிகளுக்கு  நன்மை தரும்  வாழ்விடத்தை வழங்குகிறது. பிளாஸ்டிக் மூடாக்குகள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு, அவை பயிர் பருவத்தின் முடிவில் நீக்கப்படுகின்றன. சில பூச்சிகள் மற்றும் நோய்கள், களை அதிகரிப்பைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகின்றன. களைகளை கட்டுப்படுத்த ஒரு சில இயற்கை பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த பொருட்களின் பயன்பாடு இன்னும் கேள்விகுறியாக உள்ளது .

எப்படி பயிரை தாக்கும் நோய்கள் அங்கக பண்ணைகளில் நிர்வகிக்கப்படுகிறது?

அங்கக பண்ணைகளில் மண் மூலம் பரவும் நோய்கள், அங்கக  தன்மை மற்றும் உயிரியல் செயல்பாடு அதிகரிப்பு மூலம் நிர்வகிக்கப்படுகிறது. உழவியல்,  உயிரியல் மற்றும் இயற்பியல்  முறைகளான  பயிர் சுழற்சி, சுகாதாரம்,  கவாத்து செய்தல் மற்றும் நோய் எதிர்ப்பு ரகங்களை தேர்வு செய்தல்  என இவைகள் அனைத்தும்  அங்கக  நோய் மேலாண்மையின் பகுதி ஆகும். தேசிய பட்டியலில் உள்ள  விதிமுறையின் படி, களிமண், சில இயற்கை பொருட்கள் மற்றும் காப்பர் சல்பேட் போன்ற ஒரு சில செயற்கை பூசணக் கொல்லிகள் பண்ணை திட்டதில்  பயன்படுத்த யுஎஸ்டிஏ தேசிய அங்கக தர திட்டத்தின் மூலம் அனுமதிக்கப்படுகிறது.

அங்கக பால் உற்பத்தியை பெற என்னென்ன தேவைகள் மேற்கொள்ள வேண்டும்?

கறவை மாடுகளை அங்கக பால் உற்பத்தி செய்யும் விலங்குகளாக மாற்ற இரண்டு வழிகள் உள்ளன:

   1) எந்தவொரு பொருளும் அங்ககப்பொருள் என விற்பனை செய்வதற்கு 12 மாதத்திற்கு முன்னர் வழக்கமான முறைகளில் இருந்து விலங்குகள் அங்கக  மேலாண்மையின் கீழ் பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும். வேறு விலங்குகள் இது போன்றே ஒரு 12 மாத அங்கக மாற்ற காலத்திற்கு பிறகு கூட்டத்தில் சேர்க்க        வேண்டும்.

   2) ஒரு தனித்துவமான, முழு விலங்கு கூட்டமும் அங்கக முறையில் மாற்றப்படுவதாக இருந்தால், 20% அங்ககம் அல்லாத தீவனம் முதல் 9 மாதங்கள் வரை வழங்க        அனுமதிக்கபடுகிறது. பிறகு கடைசி மூன்று மாதங்களுக்கு 100% அங்கக தீவனம் வழங்கப்பட வேண்டும். இந்த வகை மாற்றங்களின் கீழ், அங்கக முறைக்கு மாற்றப்பட வேண்டிய அனைத்து விலங்குகளையும் கன்றின் மூன்றாவது மாத சினைப் பருவத்திலிருந்து நிர்வகிக்க வேண்டும்.

எப்படி அங்கக விலங்குகள் தங்கள் ஊட்டச்சத்துத் தேவைகளை நிறைவு செய்கின்றன?

அங்கக விலங்குகளுக்கு வழங்கப்படும் அனைத்து விவசாய தீவன பொருட்கள் அங்ககப் பொருளாகவும், அதில் சத்தூட்டிகள் மற்றும் சேர்க்கைகள் குறைந்த அளவு உள்ளதாகவும்  இருக்க வேண்டும். அசைபோடும் கால்நடைகள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் குறிப்பிடத்தக்க மேய்ச்சல் நிலங்களில் மேய விட வேண்டும்.

தொடர்ச்சி.....


ஆதாரம்:

http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm    
www.mycorrhizae.com
www.hortsorb.com
http://kendujhar.nic.in/
http://www.greenpeace.org

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016