organic farming
அங்கக வேளாண்மை :: மற்ற கேள்விகள் : கேள்வி பதில்

மற்ற கேள்விகள்

எப்படி தயாரிப்பாளர்கள் அங்கக விலங்குகளின் சுகாதாரத்தைத் தக்க வைக்கிறார்கள்?

அங்கக உணவுப் பொருட்களிலிருந்து கிடைக்கும் சீரான ஊட்டச்சத்து, மன அழுத்த குறைப்பு மற்றும் நோய் தடுப்பு நடைமுறைகள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு, கால்நடை சுகாதார பராமரிப்பு இருக்கிறது. தேசிய பட்டியலில் உள்ள மருந்துகள் தேவையான போது மட்டுமே பயன்படுத்தபட வேண்டும் மற்றும் நோய் இல்லாத நிலையில் பயன்படுத்தக்கூடாது. நுண்ணுயிர் கொல்லிகளுக்கு அனுமதி இல்லை மற்றும் எந்த ஒரு தடை செய்யப்பட்ட மருந்துகள் மூலம் சிகிச்சை அழிக்கபட்டாலும் விலங்குகளை அங்கக சந்தைப்பாதைகள் வழியிலிருந்து திருப்பி விட வேண்டும்.

அங்ககக் கால்நடை ஒட்டுண்ணிகளை நிர்வகிக்க என்ன முறைகள் உள்ளன?

அங்ககக் கால்நடை வளர்ப்பவர்கள் ஒட்டுண்ணித் தாக்கத்தைக் குறைக்கப் பாரம்பரிய முறைகளைக் கையாளுகிறார்கள். அவர்கள் தேசிய பட்டியலில் உள்ள செயற்கை ஒட்டுண்ணிக் கொல்லிகளைப் பயன்படுத்தலாம் மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படும் விலங்குகளில் பயன்படுத்தக்கூடாது.

அங்ககக் கால்நடைகளின் வாழ்க்கை நிலைகள் என்ன?

அனைத்து அங்கக அசைபோடும் விலங்குகளையும் ஆரோக்கியமான சுற்றுப்புற  சூழல் உள்ள வெளிப்புறங்களில் மேய்ச்சலுக்கு விட வேண்டும்.

தேசிய அங்ககத் திட்டம் என்றால் என்ன?

அங்கக என பெயரிடப்பட்ட விவசாயப் பொருட்களின் தரத்தைப் பாதுகாக்க அரசாங்க விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறை முகவர்களை தேசிய அங்ககத் திட்டம் கொண்டிருக்கிறது. இந்த விதிமுறைகள் தேசிய அங்ககத் திட்டம் என்று அழைக்கப்படுகின்றன. காங்கிரஸ், அங்கீகரிக்கப்பட்ட யுஎஸ்டிஏ மற்றும் அங்கக  உணவு உற்பத்தி சட்டம் 1990 மூலம் தேசிய அங்ககத் திட்டத்தை நிறுவியது. அமெரிக்காவில் தயார் செய்யப்பட்ட அனைத்து அங்கக உணவு முத்திரை கூற்றுக்களும், தேசிய அங்ககத் திட்ட விதிப்படி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

யார் சான்றிதழ் அளிக்க முடியும்?

தங்கள் தயாரிப்புகளுக்கு ஒரு அங்ககக் கோரிக்கை பெற விரும்பும் அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் கையாளர்கள்  யுஎஸ்டிஏ விதிகளை பின்பற்றி  இயங்கும் ஒரு யுஎஸ்டிஏ அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் நிறுவனம் மூலம் சான்றிதழ் பெற்று இருத்தல் அவசியம். சிறிய விவசாயிகள் அல்லது $ 5,000 க்கும் குறைவாக அங்கக விற்பனை செய்யும் கையாளர்கள், பொருட்களை வாங்கி வடிவம் மாற்றாமல் விற்பனை செய்யும்  கையாளர்கள் மற்றும் உணவுப்பொருட்களை பதப்படுத்தாமல் விற்பனை செய்யும்  சில்லறை விற்பனையாளர்களுக்கு  சான்றிதழ்  பெற விதிவிலக்குகள் உள்ளன. சான்றளிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் தயாரிப்புகள், அங்ககப்பொருட்கள் என குறியிட, தேவையான பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். மேலும்  அங்கக உற்பத்தி முறைகளையே பின்பற்ற வேண்டும்.

யார் சான்றளிக்கிறார்கள்?

என்ஓபியின்  கீழ்  செயல்படும்  அரசு, தனியார் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் அங்கக விவசாய பொருட்கள் மற்றும் உணவுகளுக்கு சான்றளிக்க யூஎஸ்டிஏ அங்கீகரிக்கிறது.

தொடர்ச்சி.....


ஆதாரம்:

http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm    
www.mycorrhizae.com
www.hortsorb.com
http://kendujhar.nic.in/
http://www.greenpeace.org

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016