அங்கக வேளாண்மை :: அங்கக வேளாண் நுட்பங்கள்

ஆரோக்கியமான நாற்றுக்களுக்கான விதை நேர்த்தி

  • இறுக்கி மூடப்பட்ட சாக்குப் பையில் நெல் விதைகளை எடுத்துக்கொண்டு அதை உயிர்வாயுக் குழாய் 24 மணி நேரம் ஊற வைத்து விதைப்பதால் பசுமையான மற்றும் வீரிய நாற்றுகளை பெற முடியும்.
  • மட்பானையில் மாட்டுக் கோமியத்தை எடுத்து, அதை 48 மணிநேரம் வரை வைத்திருக்க வேண்டும். இதில் 10 சதவிகித மாட்டுக் கோமியத்தில் நெல் விதைகளை ஊறவைத்து (100 மிலி மாட்டுக் கோமியம்/1 லி தண்ணீர்) விதைத்தால் ஆரோக்கியமான விதை நாற்றுகளை பெற முடியும்.
  • நொச்சி, துளசி மற்றும் புங்கை இலையின் சாறு எடுத்து (ஒவ்வொரு இலையிலும் 3 கிலோ எடுத்து அரைத்துக் கொள்ளவும்) அதை புதிய மாட்டுச் சாண கரைசலுடன் கலந்து, பின் ஒரு சாக்குப் பையில் 25 கிலோ நெல் விதைகளை எடுத்து இறுக்கமாக கட்டி அதனை அக்கரைசலில் 12 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். விதைகளை அரை மணிநேரம் நிழலில் உலர்த்தி விதைப்பு செய்தால் ஆரோக்கியமான மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நாற்றுகளை பெற முடியும்.

பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கான விதை நேர்த்தி

  • விதைகளை 12 மணிநேரம் தண்ணீரில் ஊற வைத்து அதனுடன் 10 சதவிகித மாட்டு கோமியம் (10 மிலி மாட்டு கோமியம் + 90 மிலி தண்ணீர்) அல்லது 5 சதவிகித புரோசோபில் கசாயம் கலந்து பின் அதனை 30 நமிடங்கள் உலர்த்த வேண்டும்.
  • நெல் விதைகளை காடா துணியில் சிறு கட்டுகளாக்கி அதை மாட்டுக் கோமியத்தில் (500 மிலி மாட்டுக் கோமியம்/2.5 லி தண்ணீர்) அரை மணிநேரம் ஊற வைத்து பின் விதைக்க வேண்டும். இந்த விதை நேர்த்தி முறை விதை மூலம் பரவும் பூஞ்சாணம் மற்றும் பாக்டீரியா நோய்களிலிருந்து பயிர்களை பாதுகாக்கிறது.
  • விதைப்பதற்கு 12 மணி நேரத்திற்கு முன்பு நெல் விதைகளை புதினா இலைச்சாறு 20 சதவிகிதம் (200 மிலி இலைச்சாறு + 800 மிலி தண்ணீர்) ஊற வைக்கவும். இதனால் முளைக்கும் விகிதம் அதிகரித்து வீரிய நாற்றுகளை பெற முடியும். மேலும் இது நெல்லைத் தாக்கும் ஹெல்மின்தோஸ்போரியம் இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
  • விதைப்பதற்கு முன் முளை விட்ட நெல் விதைகளை சிறிய பைகளில் கட்டி அதை இனிப்புக்கொடி சாற்றில் (500 கிராம் இனிப்பு கொடி கிழங்கு தூள்/ 2.5 லி தண்ணீர்) 30 நிமிடங்கள் ஊற வைத்து, நிழலில் உலர்த்த வேண்டும். இது விதை மூலம் பரவும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை நோய்களுக்கு எதிராக பயிர்களை பாதுகாக்கிறது.

பயிர் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்திற்கான விதை நேர்த்தி

விதைப்பதற்கு முன் நெல் விதைகளை மாட்டுச் சாணத்துடன் கலக்க வேண்டும். இந்த மாட்டுச் சாணம் நெல் விதைகளை பறவைகள் மற்றும் பூச்சிகளின் தாக்குதலிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் இந்த சாணம் விதைகளுக்கு உரமாகவும் பயன்படுகிறது. இந்த முறை வறட்சியை விதைகளை கடினப்படுத்தவும் உதவுகிறது. இது மானாவாரி நெல் சாகுபடியில் பரிந்துரைக்கப்படுகுிறது.

Updated on : Feb 2015

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2009-16