அங்கக வேளாண்மை :: அங்கக வேளாண் நுட்பங்கள்

முளைப்புத் திறனை மேம்படுத்துவதற்கான விதை நேர்த்தி

  • விதைகளை பிரகாசமான சூரிய ஒளியில் (மதியம் 12.00-.1.00 மணி இடையே) அரை மணி நேரம் உலர்த்தி விதைப்பு செய்வதால் முளைக்கும் திறன் அதிகரித்து வீரிய நாற்றுகளை பெற முடியும்.
  • முதலில் நெல் விதைகளை சாக்குப் பையில் கட்டி 12 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, பின்பு அதை உயிர்வாயு கொழம்பில் 12 மணி நேரம் ஊற வைத்து பின் விதைக்க வேண்டும்.
  • விதைப்பதற்கு முப்பது மணி நேரத்திற்கு முன்பு நெல் விதைகளை பஞ்சகாவ்யா (35 மிலி/ லிட்டர் தண்ணீர்) யில் ஊற வைக்க வேண்டும்.
  • நெல் விதைகளை காடா துணியில் கட்டி இனிப்பு கொடி சாற்றில் (500 கிராம் இனிப்பு கொடி கிழங்கு தூள்/2.5 லிட்டர் தண்ணீர்) அரை மணி நேரம் ஊற வைத்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.
  • விதைகளை மாட்டு சாணத்தில் ஊற வைப்பதால் அதன் முளைப்புத்திறன் அதிகரிப்பதை காணலாம்.

செய்முறை

புதிய மாட்டுச் சாணம் ½ கிலோ மற்றும் 2 லிட்டர் மாட்டு கோமியம் எடுத்து அதை 5 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். அடுத்து, 10-15 கிலோ விதையை 10-12 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பின் அதனை மாட்டுச் சாண கரைசலில் 5-6 மணி ஊற வைக்க வேண்டும். அதன்பின் விதையை நிழலில் உலர்த்தி விட்டு நாற்றங்காலில் விதைக்க வேண்டும்.

  • நெருக்கிப் பின்னிய மூங்கில் கூடையில் நூல்வடோரா பெர்சிகா இலையை அடியில் பரப்பி விட்டு அதன் மேல் நெல் விதைகளை இட்டு, 10-12 லிட்டர் தண்ணீரை கூடையில் நிரப்ப வேண்டும். மீண்டும் கூடையை சல்வடோரா இலைகள் கொண்டு மூடி வைக்க வேண்டும். இந்த அமைப்பை அசைவின்றி விதைப்பதற்கு 24 மணி நேரம் முன்பு வரை வைத்திருக்க வேண்டும். இம்முறை விதைகள் நன்கு முளைக்க உதவுகிறது.
  • உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம்/ பாஸ்போ பாக்டீரியா / சூடோமோனாஸ் (1.25 கிராம்/ 60-70 கிலோ விதைகள்) ஆகியவற்றை 1 லிட்டர் அரிசி கஞ்சியில் கலந்து அதனுடன் முளை கட்டிய விதைகளை இட்டு 30 நமிடங்கள் நிழலில் உலர்த்திய பின் விதைக்க வேண்டும்.

 

Updated on : Feb 2015

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2009-16