அங்கக வேளாண்மை :: அங்கக வேளாண் நுட்பங்கள் |
|||||||||||||||||
தட்ப வெப்ப நிலை நெல் வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் வளரக் கூடியது. இதன் வளர்ச்சிக்கு அதிக வெப்பநிலை, அதிக காற்றின் ஈரப்பதம் மற்றும் மிதமான ஈரப்பதம் தேவைப்படுகிறது. மிதமான வெப்பநிலை 21-35º செல்சியஸ் ஆகும். ஒரே சீரான மற்றும் மிதமான காலநிலைகள் ஒரு வருடத்திற்கு ஒரு பயிருக்கு மேலே பயிர் செய்ய வழிவகுக்கிறது. ஒளியுணர்வு கொண்ட மற்றும் ஒளியுணர்வு அற்ற என இரண்டு நெல் இரகங்கள் உள்ளன. ஒளியுணர்வு அற்ற நெல் ரகம், குறைந்த கால முதிர்தல் தன்மை கொண்டது. பயிர்த்திட்டம் மண்ணில் உள்ள ஊட்டசத்துக்களை சிறந்த முறையில் பயன்படுத்த பயிர் சுழற்சி என்ற உழவியல் தொழில் நுட்பம் விவசாயிகளால் பின்பற்றப்பட்டு வருகிறது. ஒரே பயரை, ஒவ்வொரு பருவத்திலும், திரும்ப பயிரிடும் பொழுது மண்ணில் ஒரு குறிப்பிட்ட ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. வெவ்வேறு ஊட்டச்சத்துகளை எடுத்துக் கொள்ளும் பயிர்களை பயிரிடுவதன் மூலம் இதனை சரி செய்ய முடியும். பயிறு வகை பயிர்கள் (வேர் முடிச்சு தாவரங்கள்) பயிரிடும் பொழுது, அவை வளிமண்டல நைட்ரஜனை எடுத்துக் கொண்டு அதை தாவரங்கள் எளிதாக எடுத்துக் கொள்ளும் நிலைக்கு மாற்றி தருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களான தென் ஆற்காடு, வட ஆற்காடு, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் நெல்லுக்கு மாற்றுப் பயிராக வாழை, கரும்பு மற்றும் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. இரண்டு நெல் பயிருக்கு இடையில் அகத்தியை இடைப்பயிராக சாகுபடி செய்வதால் நல்ல விளைச்சலைப் பெற முடிகிறது. நெல் சார்ந்த பயிர்த்திட்டம்
பயிர்களை இவ்வாறு திட்டமிட்டு பயிர் செய்வதால் முதல் பயிர் மூலம் எடுத்துக் கொள்ளப்பட்ட ஊட்டச்சத்துக்கள் இரண்டாவது பயிர் மூலம் சரிசெய்யப்படுகிறது. இரண்டாவது பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துகள் வேறுபட்டு இருக்க வேண்டும். இது மண்ணில் ஊட்டச்சத்து சமநிலையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. மண் மேல் மண் 18 -23 செ.மீ ஆழம் இருக்க வேண்டும். நெல் பயிரிடுவதற்கு முன்னர் அந்த மண்ணின் வகை, மண்ணின் தன்மை மற்றும் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களை கண்டறிந்து பின் தேவையான ஊட்டச்சத்துக்களை இட வேண்டும். இந்த மண் மாதிரிகளை மண் பரிசோதனை ஆய்வகத்தில் கொடுத்து சோதனை செய்ய வேண்டும். மண்ணில் உள்ள தழைச் சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து கண்டறிந்து அதற்கேற்றாற் போல் எருக்களை இட வேண்டும். மண்ணின் அமில –காரத்தன்மை 5 மற்றும் 6.5 க்கு இடையில் இருந்தால் நெல் சாகுபடியில், அதிக மகசூல் பெற முடியும். மண்ணின் அமில – காரத்தன்மை 5க்கும் குறைந்தாலோ அல்லது 9க்கு அதிகரித்தாலோ குறைந்த மகசூல் மட்டுமே பெற முடியும். நெல் சாகுபடிக்கு, வண்டல் மண், மணல் சார்ந்த களிமண் அல்லது களிமண் ஏற்றது. நெல் இரகங்கள் கலப்பில்லா சந்ததி முறையை தேர்வு செய்து நெல் ரகங்களை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சி, 1811 ம் ஆண்டு, டாக்கா (பங்களாதேஷ்) நெல் ஆராய்ச்சி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது. பின்னர், 1945 ம் ஆண்டு, மத்திய நெல் ஆராய்ச்சி நிலையம், கட்டர்ககில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் தான் இண்டிகா – ஜப்பானிகார் கலப்பினத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. நெல் முன்னேற்றத்திற்கான முக்கிய நோக்கமான வெவ்வேறு சுற்றுச் சுழல் தன்மைக்கு ஏற்றவாறு நெல் தானிய மகசூலை அதிகப்படுத்துதல் மற்றும் நிலையான மகசூலை, தேவைாயன தாவர வகைகள் எடுத்துக்கொண்டு ஆராய்ச்சி மேற்கொள்வதாகும். ஒரு நல்ல தரமான நெல் இரகத்தை உருவாக்க தானிய விளைச்சல், தானிய நிலம், சமையல் மற்றும் சாப்பிட சிறந்த காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும். விரைவில் முதிர்வடையும் உயிருள்ள மற்றும் உயிரற்ற அழுத்த எதிரிப்புத்திறன் மற்றும் அதனதன் தரம் கூடிய சிறந்த நெல் இரகங்கள் உருவாக்கப்படுகின்றன. இதை தவிர பல்வேறு சூழ்நிலைக்கேற்ற நாட்டு இரகங்கள், குறிப்பாக அங்கக விவசாயிகளால் சாகுபடி செய்யப்படுகிறது. வறட்சியைத் எதிர்த்து வளரும் நெல்இரகங்கள் காட்டு சம்பா, சொர்ணாவரி, புழுதிக்கள், புழுதிசம்பா, மட்டாக்கார், வடன் சம்பா, குள்ளாககார், ஜில நெல் சம்பா, ஜிஇபி-24, குழியடிச்சான். நீர் தேக்கத்தை எதிர்த்து வளரும் ரகங்கள் : நிலன் சம்பா, குதிரைவால் சம்பா, கல்யாண் சம்பா, சம்பா மொசானம், பெருங்கார், கோம்வாழை, குடை வாழை. வறட்சி மற்றம் நீர் தேக்கத்தை எதிர்த்து வளரும் நெல் ரகங்கள் : காப்பக்சாரி, வைகுண்டா, பிச்சாவரி, குரங்குசம்பா உவர் மண்ணில் வளரக்கூடிய நெல் இரகங்கள் : கருப்பு நெல், சம்பா, குழியடிச்சான் பூச்சி மற்றும் நோயை எதிர்த்து வளரும் நெல் இரகங்கள் கப்பா, சம்பா, வாடன் சம்பா, குதிரைவால், கல்யாண் சம்பா, குரங்கு சம்பா, கிச்சிலி சம்பா, மட்டாக்கார், குள்ளாக்கண், சிதப்பு குருவிக்கார், தூயமல்லி, செப்பாலை, கல்லிமடயான், பிட்சாவரி, சதாகர் கதிர் நாவாய்ப்பூச்சி மற்றும் எதிர்த்து வளரும் நெல் இரகங்கள் : நிலன் சம்பா கூண்டு புழு மற்றும் எதிர்த்து வளரும் நெல் இரகங்கள்: சிகப்பு குருவிக்கார் களைகளை எதிர்த்து வளரும் நெல் இரகங்கள் : வைகுண்டா Updated on : March 2015 |
|||||||||||||||||
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு |