organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக இடு பொருட்கள் மற்றும் உத்திகள்

சாணக் குவியலில் இருந்தது 40 நாட்களில் வலுப்படுத்தப்பட்ட உரம் தயாரித்தல்

சஃபல் உரம் தயாரிப்பு தொழில்நுட்பத்தின் நன்மைகள்:

  • உரக்குவியலை தொடர்ச்சியாக திருப்புதல் இம்முறையில் அவசியம் இல்லை.
  • உரமாக்குதல் அமைப்பு, கட்டுமானம் அவசியமில்லாததால் எந்த கூடுதல் செலவும் இல்லை.
  • மிகவம் எளிமையான முறைகளைப் பின்பற்றுவதால் மூன்று மணி நேர உழைப்பே போதுமானதாகின்றது.
  • சந்தை சார்ந்த எந்த உள்ளீட்டு பொருட்களும் தேவையில்லை.
  • இம்முறையில் கனிமப்படுத்துதல் விரைவில் நடைபெறுவதால், ஊட்டச்சத்துகள் எப்பொழுதும் தயாராகவும் மற்றும் எளிதில் கிடைக்கக் கூடிய வகையிலும் இருக்கின்றன.
  • நுண்ணுயிரிகளின் அதிகப்படியான செயல்பாடுகள் மற்றும் மக்குதல் செயல்பாடுகளால் சீரான வெப்பநிலையில் மற்றும் இயற்கையான தாதுக்களினால் உரத்தின் தரம் உயர்ந்ததாகக் காணப்படுகின்றது.
  • 45 நாட்களில் தயாரிக்கப்பட்ட சஃபல் உரமாக மற்ற வெளிநாட்டு உரங்களுடன் ஒப்பிடும் அளவுக்கு தரத்தில் சிறந்ததாகும்.

அங்கக உரங்களின் பயன்கள்:

  • மற்ற ஊட்டச்சத்துக்களுடன் சேர்த்து நுண்ணூட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.
  • மண்ணிலுள்ள நுண்ணுயிரிகளின் செயல்பாடுகளைத் தூண்டுகிறது.
  • மண்ணிலுள்ள மட்கிய பொருட்களை அதிகரித்து மண்ணை செழிப்பானதாக்குகின்றது.
  • நிலத்தின் நற்பண்புகளை அதிகரிக்கின்றது.
  • மணல் கலந்த களிமண் மற்றும் வடிகால் மண்ணில் நீர் தக்கவைக்கும் திறனை அதிகரிக்கச் செய்கின்றது.
  • மண்ணின் தாங்கல் செயல்பாடுகளை அதிகரிக்கின்றது.
  • மண் அரிப்பைத் தடுக்கின்றது.
  • இந்த சஃபல் உரம் வளர்ச்சி ஊக்கிகள், வைட்டமின்கள், ஹார்மோனக்ள மற்றும் நோய் எதிர்ப்பு காரணிகளை பயிர்களுக்கு வழங்குகிறது.

 

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016