முள் இல்லா மூங்கில் வனங்களின் இலைக் கழிவுகளில் இருந்து மண்புழு உரம் தயாரித்தல்
ஒரு ஹெக்டேர் மூங்கில் வனங்களிலிருந்து சுமார் 11.25 டன் இலைக் கழிவுகள் கிடைப்பதாக அறியப்பட்டது. மூங்கில் இலைக் கழிவுகளில் 19.5 -26.3 சதவிகித அளவில் செல்லுலோசும் 11.30-13.50 சதவிகித அளவில் ஹேமி செல்லுலோசும் மற்றும் 8.7-11.60 சதவிகித அளவில் லிக்னினும் உள்ளது. மேலும் இது 34.6 -37.5 சதவிகித அளவில் அங்கக கரிம பொருளைக் கொண்டுள்ளது.
தயாரித்தல்
- மூங்கில் இலைக் கழிவுகளையும் சாணத்தையும் 5:1 என்ற சதவிகித அளவில் கலந்தும் அதோடு நுண்ணுயிர் கூட்டுக் கலவையை டன்னுக்கு 2 கிலோ என்ற அளவில் இட்ட வேண்டும்
- கழிவுகளை பாதி மக்க வைத்த பின் அதோடு மண் புழுக்களை (யூடிரில்வஸ் யூஜினியே) டன்னுக்கு 3 கிலோ அளவிலும் இட்ட வேண்டும்
- 75 நாட்களுக்கு மக்க வைத்து மண்புழு உரம் தயாரிக்கவும்
இந்த மண்புழு உரமானது 1.14 இ ௦.65 இ ௦. 88 என்ற அளவில் தழைமணி மற்றும் சாம்பல் சத்துக்களையும் 16.54 சதவிகித அங்கக கரிமப் பொருளையும் கொண்டுள்ளது. |