காப்புரிமை ::  பயிர் இரகங்களின் பாதுகாப்பு & விவசாயிகளின் உரிமைகள்

அறிமுகம்

ஒரு இரகத்திற்கு ஒரு விவசாயியோ அல்லது நிறுவனமோ காப்புரிமை பெற்றுவிட்டால் அவரைத் தவிர வேறு யார்க்கும் காப்புரிமை பெற்ற இரகத்தை உற்பத்தி செய்யவோ, சேமித்து வைத்து பதப்படுத்தவோ, விற்கவோ காப்புரிமை கால அவகாசம் முடியும் வரை உரிமை இல்லை.வணிக சம்பந்தமான காப்புரிமை வேளாண் பொருட்களின் காப்பீட்டிற்கு அதிக உரிமை அளிக்கிறது. இதன் சாசனம் (கூறு)  27 – ன் படி வேளாண் சம்பந்தப்பட்ட எந்த ஒரு தொழில்நுட்பமும் காப்புரிமை பெறத் தகுதிபெற்றது. மேலும் இதன் உறுப்பினரான நாடுகள் அனைத்தும் பயிர்க்காப்பு பற்றிய ஒரு அரசியல் கட்டமைப்பை உருவாக்கித் தர வேண்டும்.

இந்தியக் காப்புரிமைச் சட்டம் 1970 – ன் படி பயிர் இரகங்கள் மற்றும் விலங்கு / கால்நடை இனங்கள் போன்ற இயற்கை உயிரினங்களைக் காப்புரிமை செய்வது தடை செய்யப்பட்டிருந்தது. பின்பு பயிர் இரகங்களைப் பயிரிடும் விவசாயிகள் மற்றும் உற்பத்தி செய்வோரின் நன்மைகளைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு பயிர்க்காப்பீடு மற்றும் விவசாயிகள் உரிமை பாதுகாப்பு சட்டத்தை 2006 – ஆம் ஆண்டு அமுல்படுத்தியது.

பயிர்க்காப்பீடு மற்றும் விவசாயிகள் உரிமை பாதுகாப்பு:

புதிய பயிர் இரகங்களை உருவாக்க விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளரை ஊக்குவிக்க இத்தகைய திட்டம் அவசியமானதாகப்பட்டது. அதோடு வேளாண் வளர்ச்சியைத் துரிதமாக்க, விதை உற்பத்தியாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

விதை உருவாக்கத்தில் ஈடுபட்டோரின் உழைப்பு மற்றவர்களால் வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படுவதை தடுக்க இச்சட்டம் தேவைப்பட்டது. அப்போதுதான் பலர் இவ்வேளாண்மைத் துறையில் முதலீடு செய்ய முன் வருவார்கள். இதன் மூலம் நல்ல தரமான, அதிக மகசூல் தரும் விதைகள் கிடைக்கும்.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014