அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: வேளாண் பயிர்கள் :: தானியங்கள் :: நெல்
தோசை

தோசையானது இந்தியாவில் அதிகம் உபயோகப்படுத்தப்படும் பதார்த்தம் ஆகும்.  அரிசி மற்றும் உளுந்து 6:1 என்ற விகிதத்தில் இருந்து 10:1 என்ற விகிதம் வரை சேர்த்து  மென்மையாக அரைத்து மாவை நீர் (கெட்டி இல்லாமல்) போல் கரைத்து கொள்ளவெண்டும்.  பின்பு இதை தோசை வார்க்கும் கல்லில் வார்க்கவும்.
   

தோக்லா

தோக்லா என்பது அரிசி மற்றும் கடலைபருப்பு சேர்த்து புளிக்க வைத்து செய்யும் பதார்த்தம் ஆகும்.  இது இந்தியாவில் குஜராத்தில் அதிகம் செய்யப்படுகிறது.  அரிசி மற்றும் கடலைப் பருப்பு குருணையாக அரைத்து அதனை ஆவியில் வேக வைத்து சதுரமாக நறுக்கவும்.

அவல்

அவல் தயாரிக்க புழுங்கல் அரிசி உபயோகப்படுத்தப்படுகிறது.  நெல் 2-3 நாட்கள் ஊறவைத்து, பின்பு சுடுநீரில் சில நிமிடம் வேகவைத்து வடிகட்டவும்.  நெல் இரும்பு சட்டியில் சூடுசெய்து வெடிக்க செய்கிறது.  மர உருளி கொண்ட அமிழ்த்தி உமியானது புடைத்து வெளியேற்றப்படுகிறது.

விரைவு அரிசி

பாலிஷ் செய்த அரிசி ஊறவைத்து 35 சதவீதம் ஈரப்பதத்தில் அழுத்தத்தில் வேகவைத்து பின்பு உலர்த்தவேண்டும்.  மாற்று முறையாக உறையவைத்து, வறுத்தும் உலர வைக்கலாம்.
பாலிஷ் செய்த அரிசியை வேகவைத்து மற்ற சில புளிக்க வைத்து தயாரிக்கப்டும் பதார்த்தங்கள் அம்பாளி, ராகி மாவை கரைத்து புளிக்க வைத்து அதனுடன் அரிசி கஞ்சியை மற்றும் நீராகாரம் சேர்த்து ஒரு இரவு முழுவதும் புளிக்க வைக்கவும்.


 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015