அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: வேளாண் பயிர்கள் :: தானியங்கள் :: நெல்

பஃடு அரிசி

இது மிகவும் பிரபலமான சிற்றண்டியாகும்.  புழுங்கல் அரிசியிலிருந்து தயாரிக்கப்படுகிறது.  பழங்காலத்தில் அரிசியானது மெதுவாக பீங்கான் பாத்திரத்தில் மணலில்லாமல் சூடேற்றி ஈரப்பதத்தை குறைக்கவேண்டும்.  பின்பு இதனுடன் உப்பு கரைசல் சேர்த்து மறுபடியும் பீங்கான் பாத்திரத்தில் மணல் சேர்த்து சிறிதாக பலத்த தீயில் சில மணிதுளிகள் சூடுபடுத்தும்போது அரிசி பெரிதாகின்றது. அரிசியானது 8 மடங்கு அளவு அரிசியைப்போல உருவத்தில் பெரிதாகின்றது.  இவை மிகவும் பெரிதான வெற்றிடம் மற்றும் மொறு மொறுப்பு தன்மையும் கொண்டது.

பார்சல் அரிசி

சூரிய ஒளியில் காய வைத்த நெல்லானது மண் ஜாடிகளில் நிரப்பி சுடு தண்ணீர் கொண்டு ஈரப்படுத்தப்படுகிறது.  2-3 நிமிடங்களுக்கு பிறகு நீர் வெளியேற்றப்பட்டு தரைகீழாக 8 முதல் 10 மணி நேரம் நிறுத்தப்படும்.  பிறகு நெல்லானது சூரிய ஒளியில் சிறிது நேரம் வைத்து சுடு மணலில் வறுக்கப்படும்.
அரிசியானது உப்புத் தண்ணீரில் ஊறவைத்து அதன் ஈரப்பதத்தை 20 சதவீதம் உயர்த்தப்படும்.  ஈரப்படுத்தப்பட்ட அரிசியானது நன்கு சூடான பாத்திரத்தில் 250-275 டிகிரி செண்டிகிரேட் வெப்பநிலையில் 30 முதல் 40 மணி துளிகள் சூடுபடுத்தப்படும் அரிசி உடனடியாக உப்புகிறது
பழங்காலந்தொட்டு மதசார்ந்த பணடிகை மற்றும் விழாக்களில் பயன்படுத்தப்படுகிறது.  12-14 சதவீதம் நீர் நெல்லில் சேர்த்து இரும்பு சட்டியில் மணல் சூடு செய்து 150-200 டிகிரி செண்டிகிரேட் வெப்பநிலையில் தயாரிக்ப்பட்டு மணலிலிருந்து பிரிக்கப்படும்.

அவல்

நெல்லிலிருந்து அதிக அளவு அடுத்து தயாரிக்கும் பொருள் அவல் ஆகும்.  ஊறவைத்த நெல்லை சூடு செய்து உடனடியாக தட்டையாக்கப்படும் இயந்திரத்தின் உதவியுடன் தட்டையாக்கப்படும்.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015