தோட்டக்கலைப்பயிர்கள் :: காபி 

காப்பி தயாரிக்கும் முறைகள்

காய்ச்சி வடிகட்டும் முறை (brewing)

  • அரைக்கப்பட்ட காப்பி கொட்டைகள் வழியாக சுடுநீர் செலுத்தப்பட்டு வடிகட்டப்படும். இதில் கரையும் கூறுகள் நிறைந்திருக்கும்.

ஊடுருவிப்பான் (percolater)

  • இந்த முறையில் கொதித்த நீர் மீண்டும் மீண்டும் காப்பி பொடியில் சுழன்று பின் வடிகட்டப்படும். ஏற்கனவே வடிகட்டப்பட்ட காப்பி நீரும் மீண்டும் சுழற்றி செய்யப்படும்.

வடிகட்டும் முறை (Filter)

  • இது கைமுறை அல்லது மின்சாரம் கொண்டு வடிக்கப்படும். இரண்டு முறைகளிலும் அரைத்த பொடிகளில் வழியே சுடுநீர் செலுத்தி, கீழே உள்ள பாத்திரத்தில் சேமிக்கப்படும்.

குவித்தல் (steeping)

  • எளிதான முறையாகும். கொதிக்கும் நிலையில் உள்ள நீரில் அரைத்துப் பொடித்த காப்பிக்கொட்டையையும் கலந்து பின் வடித்த காப்பி வடிந்த நீரை மட்டும் பிரித்து எடுக்க வேண்டும்.

சொட்டு நீராக வடிக்கும் முறை (Drip brew)

  • பொடிக்கப்பட்ட காப்பி காகித வடிகட்டிகளில் நிரப்பப்பட்டு, கொதிப்பதற்கு முன் இருக்கும் நிலையில் உள்ள நீரை அவற்றில் ஊற்றி வடிகட்ட வேண்டும். காப்பி நுண்பொடியாக இருக்கும் போது கபெய்ன், ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் மற்றும் எண்ணெய் அதிகமாக வடிக்கப்படும்.

வெற்றிட வடித்தல் (Vaccum pot)

  • இது இரண்டு அடுக்குகளைக்கொண்டது. கீழ் உள்ள அடுக்கில் ஓர் குழாய் நடுவில் பொருத்தப்பட்டிருக்கும். முழு கருவியையும் அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும். (மேலே உள்ள அறையில் காப்பிப்பொடியும், கீழ் உள்ள அறையில் தண்ணீரும் அனுப்ப வேண்டும்).

  • முழு கருவியையும் அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும். வெப்பம் அதிகமாகும் போது தண்ணீர் ஆவியாக மாறி மேல் உள்ள காப்பி பொடியுடன் கலந்து விடும். பின் நீராவி குளிர்ந்து சுருங்கும் போது வெற்றிடம் ஏற்பட்டு காப்பி நீர் கீழே வடிகட்டி மூலமாக வடித்து எடுக்கப்படும்.

 

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015