எஸ்பிரஸ்சோ (Espresso)
- மிகச்சூடான நீரை உயர் அழுத்தத்தில் வைக்கப்பட்ட இறுக்கமான பொடித்த காப்பி வழியாக செலுத்தி வடிகட்டப்படும். வடிக்கப்பட்ட காப்பி அடர்த்தியாக கரையும் கூறுகளைக் கொண்டதாகவும் இருக்கும்.
|
 |
ஒலியாங் (Oliang)
- பொதுவாக இது தாய்லாந்து ஐஸ் காப்பி என்று அழைக்கப்படும். ஒலியாறு காப்பி, சோயாபீன்ஸ், சோளம், எள் போன்றவற்றை சேர்த்து செய்யப்படும்.
|
 |
கபே அமெரிக்கானா (Cafe Americano)
- எஸ்பிரஸ்சோ காப்பியில் சுடு தண்ணீர் கலந்து எஸ்பிரஸ்சோ போன்ற திடத்துடன் வேறு புதிய நறுமணத்துடன் கபே அமெரிக்கானா தயாரிக்கப்படுகிறது. எஸ்பிரஸ்சோ சேர்க்கப்படும் அளவைப் பொறுத்து கபே அமெரிக்கானாவின் திடம் மாறுபடும்.
|
 |
வெள்ளைக்காப்பி (Flat White)
- இது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திலிருந்து தோன்றியது. நுண் நுரையுடனான சூடான பாலை எஸ்பிரஸ்சோவுடன் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
|
 |
கபே லேட்டே (Caffe Latte)
- பாலும் காப்பி வடிநீரையும் கலந்து செய்யப்படுவதற்கு இத்தாலி மொழியில் கபே லேட்டே என்று அழைக்கப்படுகிறது. இது பாலும் காப்பியும் 1:1 விகிதத்தில் கலந்து செய்யப்படுகிறது.
|
 |
கபே பிரேவா (Cafe Breva)
- முழுமையான பாலுக்கு பதிலாக பாதியளவு பால் கொண்டு தயாரிக்கப்படும் காப்பி சூனோ ஆகும்.
|
 |
கபே மோச்சா (Cafe Mocha)
- கபே மோச்சா கபே லேட்டேவிலிருந்து சிறிது வேறுபடும். இதில் சாக்லேட் சிரப் அல்லது சாக்கலேட் பொடி கலந்து செய்யப்படுகிறது. இதில் அடர்த்தியான சாக்லேட் அல்லது பால் கலந்த சாக்கலேட் சேர்க்கப்படுகிறது.
|
|
சென்னை பில்டர் காப்பி (Indian (Madras) Filter Coffee)
- நன்றாக வறுக்கப்பட்ட காப்பி கொட்டைகள்(70 – 80 %) மற்றும் சிக்கரி(20-30%) சேர்த்து தயாரிக்கப்படும் இனிப்பான காப்பியாகும். இது 3:1 (பால்:காப்பி) என்ற விகிதத்தில் தயாரிக்கப்படுகிறது.
|
 |
பிராட்பே (Frappe)
- லத்தின் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய புகழ் நாடுகளில் கோடை கால பானமாக மிகவும் பிரசித்திப் பெற்றது. முன்னர் குளிர்ந்த எஸ்பிரஸ்சோவாக வழங்கப்பட்ட இப்பானம் தற்போது 1-2 தேக்கரண்டி காப்பி பொடி, சர்க்கரை, தண்ணீர் மற்றும் ஐஸ் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
|
 |
கபே லேட்டோ பிரட்டோ (Cafe Latte Freddo)
- இது குளிர்விக்கப்பட்ட காப்பியாகும். எஸ்பிரஸ்சோ குளிர்ந்த பாலுடன் கலந்து நன்றாக நுரை வருமாறு ஆட்டப்பட்டு பரிமாறப்படும்.
|
 |
காப்பிசுனோ (Cappucino)
- காப்பிசுனோ சூடான பால், எஸ்பிரஸ்சோ மற்றும் நுரைத்த பால் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
|
 |
வியன்னா காப்பி (Vienna Coffee)
- பாரம்பரியமாக பாலேட்டைக் கொண்டு தயாரிக்கப்படும் காப்பிக்கு வியன்னா காப்பி என்று அழைக்கப்படும். இதில் எஸ்பிரஸ்சோ ஊற்றி அதன்மேல் நன்றாக அடிக்கப்பட்ட பாலேட்டை (பால் மற்றும் சர்க்கரைக்குப் பதில்) அலங்கரித்து அளிக்கப்படும்.சில சமயம் சாக்லேட் துகள்களும் அலங்கரிக்கப்படும். பாலேட்டைச் சேர்த்து காப்பி அருந்தப்படும்.
|
 |
ஐரிஷ் காப்பி (Irish Coffee)
- ஐரிஷ் காப்பி, ஐரிஷ் விஷ்கி, கரும்பு சர்க்கரை நன்றாக கலந்து அடர்த்தியான பாலேடு மேலே அலங்கரித்து பரிமாறப்படுகிறது. இதில் வெள்ளை சர்க்கரைக்குப் பதில் நாட்டுச்சர்க்கரை பயன்படுத்த வேண்டும்.
|
 |
லிக்கர் காப்பி (Liqueur Coffee)
- இது மது சேர்த்து அளிக்கப்படும் காப்பியாகும். இது பிரத்யேகமான மது கோப்பையில் பாலேடு மற்றும் சர்க்கரை கலந்து பரிமாறப்படும்.
|
 |
டர்கிஷ் காப்பி (Turkish Coffee)
- டர்கிஷ் காப்பி நன்றாக வறுத்துப் பொடிக்கப்பட்ட, காப்பிப்பொடியை பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து (தேவைக்கு ஏற்ப) கொதிக்க விட வேண்டும். பொடி கீழே கோப்பைகளில் படிந்து விடும். இது மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வட ஆப்ரிக்காவில் புகழ் பெற்ற பானமாகும்.
|
 |
காப்பி பாம்பன் (Coffee Bombon)
- வேலென்சியா, ஸ்பெய்னிலிருந்து மற்ற நாடுகளுக்கும் பரவியது. இது எஸ்பிரஸ்சோ மற்றும் குறுக்கிய பால் 1:1 என்ற விகிதத்தில் கலந்து பரிமாறப்படும்.
|
 |
மாச்சியாட்டோ (Macch iato)
- மாச்சியாட்டோ, எஸ்பிரஸ்சோ காப்பியில் சிறிது நுரைத்த பாலைச் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. பார்ப்பதற்கு சிறிய காப்பிசினோ போன்றிருக்கும்.
|
 |
உடனடி காப்பி (Instant Coffee)
- காப்பி திரவம் உலர வைக்கப்பட்டு துகள்களாக ஆக்கப்படும். அது சுடுநீர் சேர்த்து மீண்டும் திரவமாக மாற்றப்பட்டு அளிக்கப்படும்.
|
 |