முதல் பக்கம் | பட்டுப்புழு வளர்ப்புத் துறை - தமிழ்நாடு | வீடியோ தொகுப்பு | புத்தகங்கள்| கேள்வி பதில் | தொடர்பு கொள்ள | ||||||||||
பட்டுப்புழு வளர்ப்பு கண்ணோட்டம் |
||||||||||
தமிழ்நாட்டில் பட்டு வளர்ப்பு நம் நாட்டில் நிலவும் காலநிலைக் கேற்ப முசுகொட்டை வளர்ப்பில் ஐந்து மாநிலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவைகள் கர்நாடகா, ஆந்திர பிரதேஷம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் ஜம்மு காஷ்மீர். இந்தியாவில் இந்த மாநிலங்கள் மொத்த மல்பெரி உற்பத்தியில் 97% சதவீதம் மூலப்பட்டாக (கோந்து நீக்கப்படாத) உற்பத்தி செய்கிறது.நம் நாட்டின் பட்டு உற்பத்தியில் தமிழ்நாடு நான்காம் இடம் வகிக்கின்றது. 1956 ம் வருட காலத்தில் நம் மாநிலத்தில் பட்டு பூச்சி வளர்ப்பு பயிற்சியானது குறிப்பிட்ட பகுதிகளான கோவை மற்றும் தருமபுரி மாவட்டங்களில் 500 ஹெக்டர் பரப்பளவில் மட்டும் செய்யப்பட்டது. அதன் பிறகு அதிகபடியான மேம்பாட்டுத் திட்டங்கள் பட்டுப்பூச்சி வளர்ப்பில் நம் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1979 ம் வருடம் சேலத்திலுள்ள பட்டுப்பூச்சி வளர்ப்பு துறையின் தலைமை செயலகம் பல்வேறு மேம்பாட்டு பணிகளை தொழில் மற்றும் வணிகத் துறையில் மேற்கொண்டது.தற்பொழுது பட்டுபூச்சி வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள பண சேமிப்பு தொழில்நுட்பமானது (பட்டுப்புழு வளர்ப்பிற்கான தனி வளர்ப்பறை, பட்டுப்பூச்சியின் உணவான மல்பெரி வளர்ப்பு, 100% கிருமி நீக்கப்பட்ட இளம் புழுக்கள் உற்பத்தி மற்றும் பல) விவசாயிகளுக்கு அவர்களுடைய உற்பத்தி மற்றும் வருமானத்தை அதிகரிக்க உதவி புரிகிறது. தற்போது, தமிழ்நாட்டில் 31 மாவட்டங்களில் 41,624 ஏக்கரில் மல்பெரி இலை சாகுபடி, பட்டுபுழு வளர்ப்பு செய்யப்படுகிறது மற்றும் இதன் மூலம் 1.5 லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. மாநில அளவில் 2012-2013 ஆம் ஆண்டில் 1184.62 மெட்ரிக் டன் மூலப்பட்டு, 609.12 மெட்ரிக் டன் கலப்பின பட்டு, 575.50 மெட்ரிக் டன் இருசந்ததி பட்டு உற்பத்தி செய்யப்பட்டது. நாட்டின் இருசந்ததி பட்டுபுழு வளர்ப்பு துறையில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. நோயற்ற தரமான சராசரி பட்டு கூடு உற்பத்தி தேசிய அளவில் 58.20 கிலோ, தமிழ்நாட்டின் பட்டுகூடு உற்பத்தி 69.69 கிலோ அளவாக முதலிடத்தில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இளம்புழுக்கள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குவதற்காக உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த இளம்புழுக்கள் உற்பத்தி 27% ஆக உள்ளது. இது தேசிய அளவில் மிகவும் அதிக அளவாகும். |
||||||||||
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014 |
||||||||||