முதல் பக்கம் | பட்டுப்புழு வளர்ப்புத் துறை - தமிழ்நாடு | வீடியோ தொகுப்பு | புத்தகங்கள்| கேள்வி பதில் | தொடர்பு கொள்ள

 
பட்டுப்புழு வளர்ப்பு அறை
 

இளம்புழு வளர்ப்பு

பட்டுப்புழு வளர்ப்புத் தொழிலில் மிகுந்த கவனம் தேவைப்படக்கூடிய ஒன்று இளம்புழு வளர்ப்பாகும். பட்டுப்புழுக்களில் நோய்கள் வராமல் தடுக்க இளம்புழுக்களிலிருந்தே நல்ல சுகாதாரமான சூழலில் வளர்க்க வேண்டும். சரியான மல்பெரித் தழைகளைக் கொடுத்து வளர்ப்பறைகளில் தகுந்த வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் நிலவும் சூழ்நிலையில் இளம்புழுக்களை வளர்த்தால் அவை நோய் எதிர்க்கும் திறன் பெற்று பிறகு நல்ல மகசூலைத் தர வல்லது.

இளம்புழு வளர்ப்பறை

ஒவ்வொரு பட்டு விவசாயியும் இளம்புழு வளர்ப்பிற்கெனத் தனியாக ஒர் அறை வைத்திருக்க வேண்டும். இதனால் முதரிந்த புழுக்களை வளர்க்குமிடங்களிலிருந்து கிருமித் தொற்றைத் தவிர்க்க முடியும். மேலும் இளம்புழு வளர்ப்பிற்கு சிறிய அளவே இடவசதி தேவைப்படுவதால், தட்ப வெப்பநிலையைச் சீராக வைத்திருக்க முடியும், இளம்புழு வளர்ப்பறைகளில் 28 செல்சியஸ் வெப்பநிலையும் காற்றில் ஈரப்பதம் 70 முதல் 80 சதமும் இருக்க வேண்டும் ஒரு ஏக்கர் மல்பெரித் தோட்டத்திற்கு இளம்புழு வளர்ப்பிற்கு சுமாராக 150 சதுர அடி பரப்பு கொண்ட வளர்ப்பறைத் தேவை. வளர்ப்பறை 15 X 10 X  16 என்ற அளவில் அமைக்க வேண்டும். நான்கு பக்கமும் கதவுகள் கொண்ட  ஜன்னல்களை அமைக்க வேண்டும்.

இளம்புழு வளர்ப்பு சாதனங்கள்
இளம்புழுக்களை வளர்க்க இதற்கெனப் பிரத்தியேகமாகச் செய்யப்படும் 3 X 2 அடி அளவுள்ள பிளாஸ்டிக் அல்லது மரத்தட்டுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தட்டுகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கியோ, அல்லது அவற்றை தாங்கிகளில் வைத்தோ புழுக்களை வளர்க்கலாம்.

தட்டுகளில் மெழுகுத்தாளைப் பரப்பி அவற்றின் மேல் பட்டுப்புழு முட்டை அட்டைகளை வைக்கவேண்டும். நன்கு நனைத்துப் பிழியப்பட்ட நுரைப் பஞ்சுப் பொதிகளை தட்டுகளில் வைத்து மெழுகுத் தாளைக் கொண்டு முட்டை அட்டைகளை மூட வேண்டும்.

முட்டை பொறிப்பு முன்னேற்பாடுகள்
இளம்புழு வளர்ப்பறை மற்றும் புழு வளர்ப்புத் தளவாடகங்கள் அனைத்தையும் 2 பார்மலின் அல்லது 2.5 சதம் குளோரின் டை ஆக்ஸைடு திரவம் கொண்டு கிருமிநீக்கம் செய்ய வேண்டும்.
முட்டை தரமான நோயற்ற பட்டுப்புழு முட்டைத் தொகுதிகளை தேவைக்கேற்ப அங்கிகரிக்கப்பட்ட முட்டை விற்பனை நிலையங்களிலிருந்து வாங்கி வரவேண்டும்.

அடைகாத்தல், இருட்டடைப்பு
பட்டப்புழு முட்டைகள் 250 செல்சியஸ் வெப்பநிலை மற்றும் 80 சத ஈரப்பதம் கொண்ட சூழ்நிலையில் பராமரிக்க வேண்டும். இதனால் முட்டை பொறிப்பது சீராக இருக்கும். முட்டை பொறிப்பதற்கு 24 மணி நேரம் முன்பு முட்டைகளில் கருவின் தலை உருவாகி  நீல நிறம் அடையும் நிலையில் முட்டைகளின் மேல் கருப்புக் காகிதம் அல்லது துணி கொண்டு மூடி இருட்டடைப்பு செய்வதால் கரு முழுமையாக சீராக வளர்ச்சியடையும்.
பருவ நிலைக்கேற்ப முட்டைகள் 9 முதல் 12 நாட்களில் பொறிந்து விடுகின்றன. முட்டைகள் பொறிக்கும் நாளன்று, ஒன்றிரண்டு புழுக்கள் வெளிவருவதைக் கண்டவுடன், வெளிச்சத்தின் தூண்டுதலால் சீராக முட்டைகள் பொறிந்து விடும்.

Seri Poly Sheet Sericulture Net Sericulture Tray Stand Sericulture

 

 

Silkworm

 

Silkworm

Sericulture

 

Sericulture - Rearing

   
 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014