முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு
தவேபக வேளாண் இணைய தளம் :: வெற்றிக் கதைகள்

KVK வெற்றிக் கதைகள்

வெற்றிக் கதை – வாழையில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்

குமரி மாவட்டத்தில் சுமார் 8500  எக்டோ் நிலப்பரப்பில் வாழை தனிப்பயிராகவும் ஊடுபயிராகவும் பயிரிடப்பட்டு வருகிறது.  75 சதவீதத்திற்கு  மேற்பட்டவா்கள் ஒரு எக்டேருக்கு குறைவாகவே சாகுபடி நிலங்கள் வைத்திருப்பதால் அதிலிருந்து பெறப்படும் மகசூல் மற்றும் வருமானமானது வாழ்வாதாரத்திற்கு  போதுமானதாக இ்ல்லை.

எதிர்நோக்கு

வாழையிலிருந்து தயாரிக்கப்படும் மதிப்பூட்டப்பட்ட பொருட்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிக மதிப்புள்ளது.  வாழைப்பழத்தை தவிர வாழையிலிருந்து பெறப்படும் பூ மற்றும் தண்டுப்பகுதி அறுவடைக்குப்பின் வீணடிக்கப்படுகின்றன. இப்பொருட்கள் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதற்கு மூலப்பொருளாக பயன்படுகின்றன.  பெருமளவில் வாழை சாகுபடி செய்யும் குமரி மாவட்டத்தில், மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் கிடைப்பது ஒரு வரப்பிரசாதமாகும்.

வேளாண் அறிவியல் நிலையத்தின் பங்கு

மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் பற்றிய சுயதொழில் பயிற்சி விவசாயிகள், பண்ணை மகளிர் மற்றும் இளைஞா்களுக்கு வேளாண் அறிவியல் நிலையத்தால் நடத்தப்பட்டது.  இப்பயிற்சிகளில் பல்வேறு வகையான மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் பற்றிய தொழில்நுட்பங்கள் கொடுக்கப்பட்டன. வாழை சாகுபழ செய்யப்படும் பகுதியிலுள்ள விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிருக்கு வாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் பற்றிய சிறப்புத்திட்ட பயிற்சிகள் நடத்தப்பட்டன. இத்திட்டத்தில் தெரிந்தெடுக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிருக்கு வாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பது பற்றிய தொடா் பயிற்சிகள் வழங்கப்பட்டன.  விவசாயிகள் மதுரை மற்றும் கோவையிலுள்ள மனையியல் கல்லூரிகளுக்கு கண்டுணா் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா்.  சந்தைப்படுத்துதல் பற்றிய விளக்கங்களும் கொடுக்கப்பட்டன.

மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்

  • வாழைத்தண்டு ஊறுகாய்
  • வாழைக்காய் ஊறுகாய்
  • வாழைப்பழ மிட்டாய்
  • வாழைக்காய் பொடி
  • வாழைப்பூ தொக்கு
  • வாழைத்தண்டு மிட்டாய்
  • நேந்திரன் சிப்ஸ்
  • வாழைப்பழ அல்வா
  • வாழைப்பூ வடகம்

செயல்பாடு

வாழை விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிர் ஒரு குழுவாக இணைந்து இத்தொழிலை செய்கிறார்கள்.  வாழை விவசாயிகளுடைய வயல்களிலுள்ள மூலப்பொருட்கள் இத்தொழிலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தலில் பண்ணை மகளிர் ஈடுபடுத்தப்படுகின்றனா். மூலப்பொருட்களை சேகரிப்பதிலும் சந்தைபடுத்துதலிலும் விவசாயிகள் ஈடுபடுத்தப்படுகின்றனா்.  மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் பல்வேறு அளவிலான புட்டிகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

தாக்கம்

சுயதொழில் பயிற்சி மற்றும் சிறப்பு திட்ட பயிற்சிகள் பெற்ற வாழை விவசாயியான திரு.சி.ஆறுமுகம் அவா்கள், வாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் சுயதொழிலை வெற்றிகரமாக செய்து வருகிறார்கள்.  இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு ரூ.45000 வருமானம் ஈட்டுகிறார்.  மேலும் 13 பண்ணை மகளிருக்கு வேலையும் அளித்துள்ளார்.  தயாரிக்கப்பட்ட மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் ”குமரி விவசாயிகளின் பொருட்கள்” என்ற பெயரில் ”நாஞ்சில் நாட்டு உற்பத்தியாளா் சங்கத்தின் ” மூலமாகவும் பொருட்காட்சிகள் மூலமாகவும் விற்பனை செய்ய்பபடுகின்றன.  இவா் தொலைக்காட்சி மற்றும் வானொலியிலும் நிகழ்ச்சி அளித்ததோடு தமிழ் நாளிதழ்களிலும் கட்டுரைகள் வழங்கியுள்ளார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் திரு.சி.ஆறுமுகம் அவா்களுக்கு ”வேளாண் ஆசிரியா் விருது – 2014” மற்றும் ”உழவா் ஊக்குவிப்பாளா் விருது-2015” ஆகிய விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது.

தொழில் நுட்ப பரவல்

வாழை விவசாயிகள் 20 போ் இணைந்து வாழை விவசாயிகள் குழு செயல்பட்டு வருகிறது.  வாழை சாகுபடி, மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் மற்றும் சந்தைபடுத்துதல் பற்றிய குழுக்கூட்டங்கள் நாஞ்சில் நாட்டு வேளாண் உற்பத்தியாளா் சங்கத்தால் குறிப்பிட்ட இடைவெளியில் நடத்தப்பட்டு வருகிறது. பயிற்சியில் கலந்து கொண்ட பண்ணை மகளிர் வீட்டு உபயோகத்திற்காக தயாரிப்பதோடு சுற்றத்தாருக்கும் இத்தொழிலை கற்றுத் தருகிறார்கள். அலைபேசிவழியாக சந்தேகங்களுக்கு பதில் வழங்கப்படுகிறது. இத்தொழிலின் முக்கியத்துவம் அண்டை மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டிற்கு பரவி வருகின்றது.

சாதனை விவசாயியின் பெயா் மற்றும் முகவரி:

திரு.சி. ஆறுமுகம்,
த.பெ திரு. சின்ன நாடார்,
புதுவிளை,
தலக்குளம் அஞ்சல் – 629 802
கன்னியாகுமரி மாவட்டம்
அலைபேசி - 8344021003

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016