முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
வெற்றிக் கதைகள் :: வேளாண்மை

விவசாயத்திலும் விஞ்ஞானி சாதனை

கே.ரங்கராஜன்
விஞ்ஞானி (ஓய்வு)
சாலூர் ,
சிவகங்கை மாவட்டம்.
தொடர்புக்கு: 94427 22928

ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து கரும்பு, நெல், பழம், மூலிகை பயிர், கால்நடை வளர்ப்பு, பண்ணை குட்டையில் மீன் மற்றும் கோழி வளர்த்து சிறந்த விவசாயியாக திகழ்கிறார் சிவகங்கை விஞ்ஞானி (ஓய்வு) கே.ரங்கராஜன்.அவர் கூறியதாவது: சிவகங்கை அருகே சாலூரில் விவசாய குடும்பத்தில் பிறந்தேன். கேரள பல்கலையில் "மரைன் சயின்ஸ்'சில் முனைவர் பட்டம் பெற்றேன். விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படும் கொச்சி விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஏ.ஆர்.எஸ்.,) 1964ல் முதன்மை விஞ்ஞானியானேன். இங்கு 37 ஆண்டு பணிபுரிந்து 2000ல் ஓய்வு பெற்றேன். எனக்கு 75 வயதானாலும் விவசாயத்தை மறக்கக்கூடாது என்ற நோக்கத்தில், அதில் கவனம் செலுத்தி வருகிறேன்.

விவசாயத்திலும் "விஞ்ஞானி': 2001ல் நாட்டரசன்கோட்டையில் 28 ஏக்கர் தரிசு நிலத்தை வாங்கினேன். அதை பண்படுத்தி திருந்திய நெல் சாகுபடி, இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் கோவையில் உள்ள கரும்பு இனப்பெருக்க நிலையம் கண்டறிந்த புதிய ரக கரும்பு சாகுபடி செய்துள்ளேன். இவை அதிக சர்க்கரை சத்துடன் 8 முதல் 10 அடி உயரம் வரை வளரும். இந்த ரகத்தில் கரணை போட்டு மேலக்காடு, திருவேலங்குடி மற்றும் சுற்றுப்புற விவசாயிக்கு நடவுக்காக வழங்குகிறேன். இது தவிர மாம்பழ விளைச்சலும் உள்ளது. இங்கு 4 பண்ணை குட்டை மூலம் நீரை சேமித்து விவசாயம் செய்கிறேன். பண்ணை குட்டையில் கட்லா, ரோகு, மிர்கிலா, விறால் வகை மீன்களும் வளர்கிறது. பால் உற்பத்தி செய்யும் நோக்கில் பசு மாடுகள் மற்றும் கோழிகள் வளர்த்து ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து, "பன்முக விவசாயி' ஆனேன், என்றார்.பணி காலத்தில் விஞ்ஞானி ஆனதோடுமட்டுமின்றி விவசாயத்திலும் சாதிக்கும் நோக்கில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து "விவசாயத்திலும் விஞ்ஞானி' என பெயர் எடுத்துள்ளார்.

Updated on June,2015
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015