|| | | |||
 

வெற்றிக் கதைகள் :: வேளாண்மை

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

தென்னை, வாழை, பால், முட்டை, கோழி, ஆடு, மீன், தேன், மண்புழு உரம், சாண எரிவாயு..

இம்சையே இல்லா வருவாய்க்கு இலவு..!

நல்ல லாபம் கொடுக்கும் நாட்டுக் கத்திரி ரகங்கள்!

[ மேலும் வெற்றிக் கதைகள் காண ]

தென்னை,வாழை,பால்,முட்டை,கோழி,ஆடு,மீன்,தேன்,மண்புழு உரம்,சாண எரிவாயு..

ஆண்டுக்க ரூ.9 லட்சம் லாபம்.. 9 ஏக்கரில் உயர்ந்து நிற்கும்.ஓர் ஒருங்கிணைந்தப் பண்ணை!
கணக்குப் போட்டு காரியத்தில் இறங்கினால், எதிலுமே கணிசமான லாபம்தான்” என்று தெம்பாகப் பேசும் ஜெயராமன், ஒன்பது ஏக்கர் நிலத்தில்.. தென்னை , பாக்கு, வாழை, ஆடு, மாடு, கோழி, மீன், தேன்.. என ஒருங்கிணைந்தப் பண்ணை அமைத்து, பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார் வருமானத்தில்!
சேலம் மாவட்டம், புத்திரக்கவுண்டன் பாளையம். அபநவம் கிராமத்திலிருக்கும் பண்ணைக்குச் சென்ற நம்மை அன்புடன் வரவேற்ற ஜெயராமன், தன்னைப் பற்றிய அறிமுக உரையோடு ஆரம்பித்தார்.. “பி.எஸ்.சி. (வேதியியல்) படித்துவிட்டு, விவசாயம் பார்க்க வந்தவன் நான். 88-ம் வருடம் வந்த வறட்சியில் எங்க பகுதியில் ஓடிக்கிட்டிருந்த ‘வசிஷ்ட நதி’ வறண்டு போயிடுச்சு.பயிர்களெல்லாம் வாடத் தொடங்கி விட்டது, இதைச் சமாளிப்பதற்காக வேளாண்மைத் துறை அதிகாரிகள் போய் பார்த்த பொழுது, சொட்டு நீர்ப்பாசனத்தைப் பற்றிக் தெரிந்துக்கொண்டேன். விவசாயம், கால்நடை வளர்ப்பு சம்பந்தமான நிறையப் பயிற்சிகளில் கலந்துக்கிட்டப்ப.. ஆடு, மாடு, வளர்ப்பு எப்படி என்பதை புரிந்துகொண்டேன். விவசாயப் பயிற்சிகளுக்கு சென்ற பொழுது ஈ பண்ணை வடிவமைப்பு, தென்னை, வாழை, சாகுபடி பற்றியெல்லாம் தெரிந்துகொண்டேன்.
இது எல்லாவற்றையும் ஒரே இடத்தில் அமைத்துக் கொண்டால் நல்ல லாபம் கிடைக்கும் என்று எனக்குத் தோணிச்சு. அதனால்தனர் மூன்று வருடத்திற்கு முன் ஒன்பது ஏக்கரில் இந்த ‘ஒருங்கிணைந்தப் பண்ணை’யை அமைத்தேன். பண்ணைக்குள் கிடைக்கும் எந்தக் கழிவையும் வீணாக்காமல், உரமாக மாற்றி உபயோகப்படுத்திடுவேன். அதனால் இங்க ரசாயன உரங்களுக்கு வேலையே இல்லாமப் போயிடுச்சு. மொத்தத்தில் மனசுக்கு நிறைவான வருமானத்தோட பண்ணையம் செய்துகொண்டிருக்கிறேன்.

தென்னைக்கிடையில் வாழை, பாக்கு!

‘ஏழு ஏக்கர் நிலத்தில், 23x23 அடி இடைவெளியில் 15 வயதான தென்னை இருந்தது. அதற்கிடையில், 7x7 அடி இடைவெளியில் பாக்கு நடவு செய்தேன். அதற்கு இடையில் அதே இடைவெளியில் கதளி வாழையை நடவு செய்திருக்கிறேன். ஏக்கருக்கு 70 தென்னை, 900 பாக்க, 900 வாழை என்று எழு ஏக்கரிலும் சேர்த்து 490 தென்னை, 6,300 வாழை, 6,300 பாக்கு மரங்கள் இருக்கின்றன. இவற்றிற்கு இடையில் அரை அடி இடைவெளியில் கோ – 4 தீவனக் கரணைகளை நடவு செய்திருக்கிறேன்.

பறிப்பதற்கு முன்பே பணம்!

தென்னை, பாக்கு ஆகியவற்றை நடவு செய்த ஐந்தரை வருடங்களில் வருமானம் கிடைக்கத் தொடங்கி விடும். என்னுடைய தோப்பில் ஒரு தென்ளை மரத்தில் இருந்து வருடத்திற்கு சராசரியாக  150 காய்கள் வரைக்கும் கிடைக்கின்றன. ஆள் பற்றாக்குறையால், மரத்திற்கு வருடத்திற்கு 200 ரூபாய் என்று கணக்கிட்டு குத்தகைக்கு விட்டிருக்கிறேன்.  இதன் மூலமாக 490 மரங்களுக்கும் சேர்த்து வருடத்திற்கு 98,000 ரூபாய் கிடைக்கிறது. பாக்கு காய்ப்புக்கு வர இன்னமும் இரண்டரை வருடங்கள் ஆகும். ஒரு மரத்தில் இருந்து சராசரியாக இரண்டரை கிலோ அளவிற்கு பாக்கு கிடைக்கும். அதன் மூலம் ஒரு மரத்திற்கு வருடத்திற்கு 200 ரூபாய்க்கு குறையாமல் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.

வாழை தரும் வஞ்சமில்லா வருமானம்!

வாழையில் வருடத்திற்கு 6,200 தார்களுக்குக் குறையாமல் கிடைக்கும். ஒரு தார் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனையாகிறது. குறைந்தபட்ச விலையாக 100 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலெ, 6,20,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். பக்கக் கன்றுகளை நல்லபடியாகப் பராமரித்தால்.. தொடர்ந்து ஐந்தாண்டுகள் வரை, வாழையில் வருமானம் பார்க்கலாம்.

கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம்!

இடைவெளிகளில் நடவு செய்திருக்கும் கோ – 4 புல் மூலமாக வருடத்திற்கு கிட்டத்தட்ட 20 டன் தீவனம் கிடைக்கிறது. தனியாக ஒன்றரை ஏக்கரில் சவுண்டல் (சூபாபுல்), கோ – 4, கோ.எப்.எஸ்.ஹெச்.29.. போன்ற பசுந்தீவனங்களும், அசோலாவும் சாகுபடி செய்கிறேன். இந்தத் தீவனங்களை ஆதாரமாக வைத்துதான் 12 கறவை மாடுகளை வளர்க்கிறேன். இதில் எப்பொழுதுமே 8 மாடுகள் கறவையில் இருப்பதுபோல பராமரித்து வருவதால், வருடம் முழுவதும் பால் மூலமாக கணிசமான வருமானம் கிடைத்து வருகிறது.

பாலில் பொங்கும் வருமானம்!

தானியங்கள், மரவள்ளி, திப்பி (சேகோ), தவிடு, பிண்ணாக்கு, தாது உப்பு.. போன்றவற்றைக் கொண்டு அடர்தீவனம் தயாரித்து மாடுகளுக்குக் கொடுத்து வருகிறேன். ஒவ்வொரு மாட்டுக்கும் தினமும் 7 கிலோ அடர்தீவனம், 30 கிலோ பசுந்தீவனம் கொடுக்கிறேன். ஒரு மாட்டில் இருந்து தினமும் 10 முதல் 12 லிட்டர் வரை பால் கிடைக்கிறது. 8 மாடுகள் மூலமாக சராசரியாக தினமும் 80 லிட்டர் பால் கிடைக்கிறது. ஒரு லிட்டர் பால் 20 ரூபாய் என்று உள்ளூரிலேயே நேரடியாக விற்பனை செய்துவிடுகிறேன். பால் மூலமாக தினசரி 1,600 ரூபாய் என வருடத்திற்கு 5,84,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. மாடுகளின் சாணம் மூலமாக எரிவாயுவையும் உற்பத்தி செய்த கொள்கிறேன்.

லெவில்லாமல் மீன்!

தோப்பின் ஓரத்தில் 100 அடி நீளம் மற்றும் அகலம், 5 அடி ஆழத்தில் மீன் குட்டை வெட்டியிருக்கிறேன். சாணத்தை இந்தக் குட்டையில் கலந்து விடும்பொழுது மீன்களுக்கான உணவு  இலவசமாக உற்பத்தியாகி விடுகிறது. இதிலிருந்து வருடத்திற்கு 1.300 கிலோ அளவில் மீன் கிடைக்கிறது. ஒரு கிலோ 70 ரூபாய்க்கு வற்பனையாகிறது. அதன் மூலமாக வருடத்திற்கு 91,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

மீதமாகும் சாணத்தில் மண்புழு உரம்!

சாண எரிவாயு, மீன் குட்டை ஆகியவற்றிற்குப் போக மீதமுள்ள சாணம் மற்றும் சாண எரிவாயுக் கலனில் இருந்து வெளிவரும் ‘சிலரி’ ஆகயிவற்றில் இருந்து மண்புழு உரம் தயாரிக்கிறேன். இதற்காக 4 அடி அகலம், 9 அடி நீளம், 5 அடி உயரத்தில் ஆறு தொட்டிகள் அமைத்திருக்கிறேன். 45 நாட்களுக்கு ஒரு முறை ஆறு தொட்டிகளில் இருந்தும் மொத்தம் 2,400 கிலோ மண்புழு உரம் கிடைக்கிறது. எனது தோட்டத்தில்  உள்ள பயிர்களுக்குப் பயன்படுத்தியத போக, வருடத்திற்கு 3,000 கிலோ வரை மண்புழு உரத்தை கிலோ 4 ரூபாய் என்று விற்பனையும் செய்து வருகிறேன். அதன் மூலமாக 12,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

கொட்டிக்கொடுக்கும் கோழிகள்!

பண்ணையில் 200 நாட்டுக் கோழிகள், 30 வான்கோழிகள், 30 வாத்துகளும் உள்ளன. தினமும் 70 முதல் 80 நாட்டுக் கோழி முட்டைகள், 10 வான்கோழி முட்டைகள். 10 வாத்து முட்டைகள் கிடைக்கின்றன. வருடத்திற்கு 300 நாடடுக் கோழி முட்டைகளை அடை வைப்பதன் மூலமாக 200 குஞ்சுகள் கிடைக்கின்றன.
அடை வைத்தது போக மீதமுள்ள வான்கோழி முட்டைகளை தலா 15 ரூபாய்க்கும், நாட்டுக் கோழி மற்றும் வாத்து முட்டைகளை தலா 5 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறேன். முட்டைகள் மூலமாக தினமும் சராசரியாக 700 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. முட்டையிட்டு முடித்த நாட்டுக் கோழிகளை மட்டும் விற்பனை செய்து விடுவேன்.
இந்த வகையில் வருடத்திற்கு 150 நாட்டுக் கோழிகள் வரை விற்பனையாகின்றன. ஒவ்வொரு கோழியும் சராசரியாக இரண்டு கிலோ எடை இருக்கும். அவற்றை உயிர் எடைக்கு கிலோ 110 ரூபாய் என்று விற்பதன் மூலம் 300 கிலோவிற்கு 33,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. வருடத்திற்கு சராசரியாக 5 கிலோ எடை கொண்ட 15 வான்கோழிகளை உயிர் எடைக்கு கிலோ 185 ரூபாய் என விற்பதன் மூலம் 75 கிலோவிற்கு 13,875 ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

தேன் தரும் தித்திக்கும் வருமானம்!

தோட்டம் முழுவதும் 40 இடங்களில் தேனீப் பெட்டிகளை வைத்திருக்கிறேன். இவற்றிற்க்காக தனியாக எந்தப் பராமரிப்பும் செய்வது கிடையாது. ஆனால், இவற்றின் மூலமாக அனைத்து தென்னை மரங்களிலும் நல்லபடியாக மகரந்தச்சேர்க்ககை நடைபெற்று மகசூல் கூடுகிறது. தவிர, ஒவ்வொரு பெட்டியில் இருந்தும் 50 நாட்களுக்கு ஒரு முறை ஒரு கிலோ தேன் கிடைக்கிறது. இதன் மூலமாக வருடத்திற்கு சராசரியாக 280 கிலோ தேன் கிடைக்கிறது. ஒரு கிலோ தேன் 140 ரூபாய் என விற்பதன் மூலமாக, ஆண்டிற்கு 39,200 ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

ஆடு மூலம் அறுபதாயிரம்!

இரண்டு ஜமுனாபாரி கிடாக்கள், ஒரு தலைச் சேரி கிடா மற்றும் எட்டு பள்ளை ரகப் பெட்டை ஆடுகளையும் வளர்க்கிறேன். இதன் மூலமாக கலப்புக் குட்டிகளை உற்பத்தி செய்கிறேன். ஒரு பெட்டை ஆட்டில் இருந்து இரண்டு வருடத்தில் ஆறு குட்டிகள் கிடைக்கின்றன.
வருடத்திற்கு மூன்று குட்டிகள் என்று வைத்துக் கொண்டால், எட்டு ஆடுகளில் இருந்தும் வருடத்திற்கு 24 குட்டிகள் கிடைக்கும். எட்டு மாதம் வரை குட்டிகளை வளர்த்து விற்பனை செய்கிறேன். இளம் ஆடு ஒன்று 2,500  ரூபாய் முதல் 3,000 வரை விற்பனையாகிறது. அதன் மூலமாக வருடத்திற்குச் சராசரியாக 60,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

9 ஏக்கரில் .. ரூ.9 லட்சம்!

தென்னை, வாழை, பால், முட்டை, கோழி, ஆடு, மீன்,தேன், மண்புழு உரம், சாணஎரிவாயு என்று மொத்தமாக 9 ஏக்கர் நிலத்தல் இருந்து வருடத்திற்கு 18 லட்சத்திற்கு 11 ஆயிரத்து 575 ரூபாய் வருமானமாக கிடைக்கிறது. பராமரிப்பு, தீவனம், மீன்குஞ்சு, வேலையாள் கூலி என்ற ஐம்பது சதவிகிதம் செலவானாலும்.. வருடத்திற்கு ஒன்பது லட்ச ரூபாய்க்கு குறைவில்லாமல் லாபம் கிடைக்கிறது.

9 ஏக்கரில் ஒருங்கிணைந்தப் பண்ணை மூலமாக கிடைக்கும் வருமானப் பட்டியல்

விவரம்

வரவு

தென்னை

98,000

வாழை

6,20,000

பால்

5,84,000

மீன்

91,000

முட்டை

2,55,500

நாட்டுக் கோழி, வான்கோழி

46,875

ஆடு

60,000

தேன்

39,200

மண்புழு உரம்

12,000

சாண எரிவாயு

5,000

மொத்தம்

18,11,575

இதில் பாதித்தொகையை செலவு என்று வைத்துக் கொண்டால், 9,05,787 ரூபாய் லாபம்.

தொடர்புக்கு


ஜெயராமன், அலைபேசி : 99424-43055.

ஆதாரம் : www.vikatan.com பசுமை விகடன் வெளியிடான தேதி, 25.7.11

இம்சையே இல்லா வருவாய்க்கு இலவு..!

வானம் பார்த்த பூமியாகிப் போச்சு.. அதனால் ஏதாவது மரத்தை நட்டு விடலாம் என்று இருக்கிறேன்.
மரத்தை நடுவதோடு நம்ம வேலை முடியனும். அதற்குப் பிறகு நமக்கு எந்த வேலையும் இருக்கக் கூடாது. ஆனால்.. வருடா வருடம் வருமானம் வந்துகிட்டே இருக்கணும். இப்படியெல்லாம் கணக்குப் போடும் விவசாயியா நீங்கள்..? உங்களுக்கு சரியான மரப்பயிர் இலவு மரம்தான்.
இலவு மரங்கள் அனைத்து மண்ணிலும் சிறப்பாக வளரும். கடும் வறட்சியையும் தாங்கி  வளரும் தன்மையுடையது. இதில் நாட்டு ரகம், சிங்கப்பூர் ரகம் என இரண்டு வகைகள்தான் தமிழகத்தில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. நாட்டு ரகம் மிக உயரமாக வளர்வதால், அறுவடை செய்வதில் கொஞ்சம் சிரமம் இருக்கும். சிங்கப்பூர் ரகம் கிடை மட்டத்திலேயே படர்ந்து வளர்வதால், அறுவடை செய்வது சுலபமாக இருக்கும். எந்த ரகமாக இருந்தாலும், நான்கு முதல் ஐந்து மாத வயதுள்ள கன்றுகளைத் தேர்ந்தெடுத்து நடவு செய்வது நல்லது.

மழைக் காலங்களில் நடவு!

தண்ணீர் வசதியுள்ள பகுதிகளில் வருடம் முழுவதும் நடவு செய்யலாம். தரிசு மற்றும் மானாவாரி நிலங்களில் மழைக் காலங்களில் நடவு செய்ய வேண்டும். 15 அடிக்கு 15 அடி இடைவெளியில் மூன்று கன அடி அளவில் குழியெடுக்க வேண்டும். ஏக்கருக்கு 200 குழிகள் வரை எடுக்கலாம். ஒவ்வொரு குழியிலும் 1 கிலோ மண்புழு உரம், 30 கிராம் வேர் வளர்ச்சி உட்பூஞ்சணம் (வேம்), 1 கிலோ தொழுவுரம், 15 கிராம் அசோஸ்பைரில்லம், 15 கிராம் பாஸ்போ – பாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து இட்டு அதன் பிறகு கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.

மழைநீரைச் சேகரிக்க வட்டப்பாத்தி

தண்ணீர் வசதியுள்ள இடங்களில் நடவு செய்த முதல் வருடத்தில் 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்தால் போதும். அதன் பிறகு மரத்தைக் காயவிடாமல் தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. தரிசு மற்றும் மானாவாரி நிலங்களில் ஒவ்வொரு  கன்றைச் சுற்றியும் 10 அடி சுற்றளவில், ஒரு அடி உயரத்தில் வட்ட வடிவில் கரை அமைக்க வேண்டும். இவ்வாறு அமைக்கப்படும் கரை மூலமாக ஒவ்வொரு மழையின் போதும் 1,400 லிட்டர் வரை தண்ணீர் சேகரமாகும். டிசம்பர் – ஜனவரி மாதங்களில் செடிகளைச் சுற்றியுள்ள களைகளை நீக்கி மண்ணைக் கொத்தி விட வேண்டும்.

400 முதல் 500 காய்கள்

நடவு செய்த மூன்றாம் ஆண்டில் காய்க்கத் தொடங்கும். அது  வரையிலும் நிலக்கடலை, பீன்ஸ், தக்காளி போன்ற பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் பூக்கத் தொடங்கி. ஜனவரி-பிப்ரவரி  மாதங்களில் சிறு பிஞ்சுகளாகி, மார்ச் – ஏப்ரல் மாதங்களில் காய்கள் கிடைக்கும். நடவு செய்த 4-ம் ஆண்டில் ஒரு மரத்திலிருந்து 100 முதல் 200 காய்கள் வரை கிடைக்கும். 5-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 400 முதல் 500 காய்கள் வரை கிடைக்கும். நன்கு முற்றியக் காய்களை வெடிப்பதற்குள் பறித்துவிட வேண்டும்.

விறகுக்கு விற்றாலும், 5 லட்ச ரூபாய்!

ஒரு காயிலிருந்து கிடைக்கும் பஞ்சுக்கு இன்றைய சந்தை நிலவரப்படி 50 பைசா விலை கிடைக்கும். அதன்படி பார்த்தால், ஒரு மரத்திலிருந்து 400 காய்கள் மூலம் ஆண்டுக்கு 200 ரூபாய் கிடைக்கும். ஒரு ஏக்கரில் உள்ள 200 மரங்களிலிருந்து ஆண்டுக்கு 40,000 ரூபாய் வரை வருமானமாகக் கிடைக்கும். அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரை மகசூல் எடுக்கலாம். அதன்பிறகு, முதிர்ந்த மரங்களை விறகுக்காக வெட்டி விற்கலாம். தற்போதைய நிலவரப்படி ஒரு டன் மரம் 2,500 ரூபாய் விலை போகிறது. ஒரு மரம் குறைந்தபட்சம் ஒரு டன் எடை என்று வைத்துக் கொண்டாலும் ஒரு ஏக்கரில் இருந்து, 5 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். உங்களிடம் இலவு மரம் இருப்பதாகத் தெரிந்தால், வியாபாரிகளே நேரடியாக வந்து காய்களுக்கு முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்து கொள்வார்கள்.

கேட்க பிரமிப்பாக இருக்கிறது. ஆனால், எந்த அளவுக்கு இது நிஜம்?

தேனி மாவட்டம், போடி நாயக்கனூர், குட்டிபுரம் கிராமத்தில் ஐந்து ஏக்கரில் இறவைப் பாசனத்தில் இலவு மரத்தை சாகுபடி செய்திருக்கும் செல்வராஜிடம் இருக்கிறது. இதற்கான பதில்!
இந்தப் பகுதியில் இலவு சாகுபடி சக்கைப்போடு போடுது! நான் ஐந்து ஏக்கரில் இறவையில் இலவ மரத்தை நட்டிருக்கேன். 16 அடிக்கு 16 அடி இடைவெளயில் ஏக்கருக்கு 170 மரம் இருக்கு. இரண்டு வயது மரத்திலிருந்து 5 வயது மரம் வரைக்கும் வயது வாரியான மரங்கள் என் வயலில் இருக்கு. சிங்கப்பூர், நாடு .. இரண்டு ரகத்தையும் நட்டிருக்கேன். நடவுக்குப் பிறகு எந்த பண்டுதமும் தேவையில்லை. நம்ம சவுகரியத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக்கலாம்.

அறுவடை அவஸ்தையும் இல்லை!

நடவு செய்த இரண்டு மூன்று வருடத்திற்கு கன்னிக் காய்ப்பு வரும். அதில் பெரிதாக மகசூல் கிடைக்காது. நான்காவது வருடத்திலிருந்து மரத்திற்கு 500 காய்கள் வரைக்கும் கிடைக்கும். என் தோட்டத்தில் 5 வயதான மரங்களில் 500 காய்களுக்கு மேலேயே காய்க்கிறது. சில மரங்களில் 1,000 காய்கள் கூட காய்க்கிறது. நாம மரத்தை வளர்த்தால் மட்டும் போதும்.. அறுவடை வேலை கூட இல்லை. வியாபாரிகளே அதை செய்துக்குவாங்க.

ஏக்கருக்கு 85,000 ரூபாய்!

என் தோட்டத்தில் இருக்கும் மரங்களோட வயதைப் பொருத்து ஒரு மரம் 200 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரைக்கும் குத்தகைக்கு விட்டிருக்கிறேன். ஒரு மரம் 200 ரூபாய் என்றால் ஒரு ஏக்கரில் இருக்கும் 170 மரத்திற்கும் மொத்தம் 34,000 ஆயிரம் வருடத்திற்கு கிடைக்கிறது. தென்னை மரத்திற்கு ஈடாக வருமானம் கொடுக்கிறது.

இறவையில் சரி மானாவாரிக்கு எப்படி என்கிறீர்களா?

இந்தக் கேள்விக்கு .. திண்டுக்கல் மாவட்டம், வெள்ளோடு கிராமம் சுப்புராஜின் அனுபவமே பதில் சொல்லும்

காயாமல் காப்பாற்றும் கரை!

நான் 2005-ம் வருடம் 5 ஏக்கர் கரிசக் காட்டில் இலவஞ்செடியை நட்டேன். 20 அடிக்கு 20 அடி இடைவெளியில் ஏக்கருக்கு 100 கன்னுகள் வரைக்கும் இப்ப இருக்கு. ஒவ்வொரு மரத்தை சுத்தியும் நல்லா வட்டமாக குழி எடுத்து வைத்திருக்கிறேன்.  10 மரததிற்கு ஒரு பாத்தி கணக்கில் அங்கங்க பெரிய சைஸ் பாத்தி மாதிரி எடுத்து, உயரமாக கரையும் போட்டிருக்கிறேன். இதனால் ஒர பாத்தயில் விழற மழைத் தண்ணீர், அடுத்தப் பாத்திக்குப் போகாது. இந்த தண்ணியிலேயே மரம் வளர்ந்துவிடும். நடவு செய்ததிலிருந்து இதுவரைக்கும் மழைத் தண்ணீரியை வைத்துதான் மரம் இவ்வளவு செழிப்பாக வளர்ந்திருக்கு.

வருடத்திற்க்கு ஒர தடவை உழவு போட்டு பாத்தியை பலப்படுத்தி வைத்துக்கிட்டால்.. காடு சுத்தமாக இருக்கும். நடவு செய்த 3-ம் வருடம் பரவலாக காய் பிடிக்கும். அதற்குப் பிறகு, வருடா வருடம் காய்ப்பு அதிகமாயிட்டே இருக்கும் குறைந்தபட்சம் ஒரு மரம் 100 ரூபாய்க்கு காய்த்தால் கூட ஒரு ஏக்கரில் இருக்கும் 100 மரங்க மூலமாக 10 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். மரத்தைக் குத்தகைக்கு விடாமல், நானே காய்களை எடுத்துடுவேன். அவைகளை தட்டி பஞ்சு எடுத்து விற்றுவிடுவேன். இன்றைய நிலவரத்திற்க்கு ஒரு கிலோ பஞ்சு 65 ரூபாய்க்கு போகிறது. வானம் பார்த்த பூமி வைத்திருக்கிற சம்சாரிகளுக்கு இம்சையில்லாத வருமானம் கொடுக்கிறத இலவு.

கன்றுகள் இலவசம்!

செல்வராஜ் மற்றும் சுப்புராஜ் இருவரின் விளக்கங்களே போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இப்போது இலவு மரம் நடவு செய்வதற்கு நீங்கள் முடிவெடுத்து விட்டால்.. உங்கள் மாவட்டத்திலிருக்கும் வன விரிவாக்க மையத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கரில் நடுவதற்காக 1,000 கன்றுகள் வரைக்கும் இலவசமாகவே கிடைக்கும். இது போக ஏக்கருக்கு 200 ரூபாய் மானியமும் உண்டு. மானாவாரி நிலத்தில் நடவு செய்பவர்களுக்கு இதுதான் சரியான தருணம். தாமதிக்காமல் செயலில் இறங்குங்கள்!

தொடர்புக்கு
செல்வராஜ், அலைபேசி் 73735 – 89020
சுப்புராஜ், அலைபேசி : 99445 – 92378
ஆதாரம் : www.vikatan.com பசுமை விகடன் வெளியிடான தேதி, 25.7.11


நல்ல லாபம் கொடுக்கும் நாட்டுக் கத்திரி ரகங்கள்!

சுவையிலும், மணத்திலும் ஈடு இணையற்றவையாக இருக்கும் பாரம்பரிய ரக கத்திரியின் மவுசே தனிதான்! அந்த வரிசையில் பொன்னி, மணப்பாறைப் பச்சை, வெள்ளை ஆகிய பாரம்பரிய ரக கத்திரிகளை, இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறார். திருச்சி, மாவட்டம், திண்ணக்கோணம் கிராமத்தைச் சேர்ந்த யோகநாதன்.

வீரிய ரகத்தால் விளைந்த வினை!

கத்திரித் தோட்ட வேலைகளில் காலையிலேயே சுறுசுறுப்பாக இறங்கயிருந்த யோகநாதன், “இரண்டு ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து, கத்திரி சாகுபடி பண்ணிக்கிட்டிருக்கிறேன். எங்கப் பகுதியில் பிரபலமான பொன்னி, மணப்பாறை வெள்ளை, மணப்பாறைப் பச்சை.. இந்த மூன்று ரகங்களும் நல்லா சுவையாக இருக்கும். குழம்பு வைத்தால்.. நெய் மாதிரி மணக்கும். அதனால், இந்த ரகங்களுக்கு தமிழ்நாடு முழுக்கவே நல்ல மவுசு இருக்கிறது.
ஆரம்பத்தில் இந்தப் பகுதியில் வெறும் தொழுவுரத்தை மட்டுமேதான் போட்டு சாகுபடி பண்ணிக்கிட்டு இருந்தாங்க. வீரிய ரகமெல்லாம் சந்தைக்கு வந்த பன் தான் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி என்று பயன்படுத்த ஆரமபிச்சாங்க. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து இன்றைக்கு பத்து நாளைக்கொரு முறை பூச்சிக்கொல்லியை அடித்தே ஆகணும் என்கிற நிலைமை வந்துவிட்டது. என்னதான் ரசாயனத்தை அள்ளிக் கொட்டினாலும், சொத்தைக்காய் வராமத் தடுக்க முடிவதில்லை. பழக்க தோஷத்தில் நாட்டுக் கத்திரி சாகுபடி பண்றவங்களும் ரசாயனத்தைப்  பயன்படுத்த ஆரம்பிச்சதுதான் கொடுமை.

சொத்தைக் காய்கள் குறைகின்றன!

நாட்டு ரக கத்திரிக்கு ரசாயன விஷயங்களே தேவை இல்லை. இயற்கை முறையில் அருமையாக விளைகிறது. காய் நன்றாக திரட்சியாக இருக்கிறது. பறித்து நான்கு நாள் வைத்திருந்தால் கூட காய் வதங்குவதில்லை. கொஞ்சமாத்தான் சொத்தை விழுகிறது. இயற்கை முறையில் பண்ணும் போது ஏகப்பட்ட பணம் மிச்சமாகிறது. ஐந்து வருடமாக வெண்டை, தக்காளி, அவைர என்று இயற்கை முறையில்தான் சாகுபடி செய்தேன்.
நல்ல விளைச்சல் கிடைக்கிறது. அதனால்தான் இந்த முறை ஒரு ஏக்கரில் கத்திரி போட்டேன். நடவு செய்து ஐந்து மாதம் ஆகிறது. மூன்று மாதமாக காய் பறித்துக் கொண்டிருக்கிறேன். நான் எதிர்பார்த்ததைவிட நல்ல மகசூல் கிடைத்திட்டிருக்கு.

வடிகால் வசதியுள்ள நிலம்!

‘பொன்னி ரகம். நீல நிறத்திலும்: மணப்பாறை வெள்ளை ரகம். பெயருக்கு ஏற்றாற் போல் வெள்ளை நிறத்திலும், மணப்பாறை பச்சை ரகம்.. பச்சை நிறத்திலும் இருக்கும். மூன்றிற்குமே சாகுபடி முறைகள் ஒன்றுதான் என்பதால், இவற்றில் ஏதாவது ஒன்றையோ அல்லத மூன்று ரகங்களையும் கலந்து கூட ஒரே வயலில் நடவு செய்யலாம். வடிகால் வசதி உடைய அனைத்து வகையான மண்ணிலும் இந்த ரகங்கள் நன்றாக விளையும். மணற்பாங்கான பகுதியில் செடியின் வளர்ச்சியும் காய்ப்பும் அதிகமாக இருந்தாலும், சுவை கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும்.

விதைகளை நாமே உற்பத்தி செய்யலாம்!

ஒரு ஏக்கருக்க தேவையான நாற்றுகளை உற்பத்தி செய்ய, 200 கிராம் விதை தேவைப்படும். நன்கு முற்றிய 70 கத்திரிக்காய்களை செடியிலேயே பழுக்கவிட வேண்டும். பிறகு, அவற்றைப் பறித்து தண்ணீரில் இரண்டு நாட்கள் ஊற வைத்து, கையால் நன்கு கசக்கி விதைகளைப் பிரித்தெடுக்க வேண்டும். அவற்றை தண்ணீரில் நன்றாக அலசி எடுத்து, கொஞ்சம் சாம்பலோடு சேர்த்துப் பிசைந்து ஒரு நாள் முழுவதும் வெயிலில் காய வைத்து  சேமிக்க வேண்டும். இரண்டு மாதங்கள் வைத்திருந்து பிறகு, பயன்படுத்தலாம்.

மூன்று சென்டில் நாற்றங்கால்!

ஒரு ஏக்கரில் விதைக்க, மூன்று சென்ட் நிலத்தில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். முதலில் 2 சால் உழவு ஓட்டி, மண்ணைப் புழுதியாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு, 50 கிலோ தொழுவுரத்தில் தலா 200 கிராம் டிரைக்கோ டெர்மா விரிடி, பாஸ்பேர – பாக்டீரியா, அசோஸ்பைரில்லம் ஆகியவற்றைக் கலந்து, நிலத்தில் இறைத்து, உழவு ஓட்ட வேண்டும்.
பிறகு, கத்திரி விதைகளை மணலோடு கலந்து தூவி விதைக்க வேண்டும். கூடவே, 50 கிலோ மண்புழு உரத்தை விதைகளை மூடுமளவுக்குத் தூவ வேண்டும். பூவாளி மூலம் நாற்றங்காலில் தண்ணீர் தெளித்து வர வேண்டும். 15 மற்றும் 30-ம் நாட்களில் 300 மில்லி பஞ்சகவ்யாவை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 40-ம் நாளுக்கு மேல் நாற்றுகளைப் பறித்து நடலாம்.

மூன்றடி இடைவெளி!

ஒரு ஏக்கர் நிலத்தில் இரண்டு சால் உழவு செய்து, 5 டன் தொழுவுரத்தைக் கொட்டி கலைத்து, மீண்டும் ஒரு உழவு ஓட்டி 5 அடி அகலம், 10 அடி நீளத்தில் செவ்வகப் பாத்திகள் அமைக்க வேண்டும். பாத்திகளில் வரிசைக்கு வரிகை 3 அடி, செடிக்கு செடி 3 அடி இடைவெளி விட்டு இரட்டை நாற்றுகளாக நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நடவு செய்த 4-ம் நாள் ஒரு முறையும், தொடர்ந்து வாரம் ஒரு முறையும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். செடிகள் நன்கு வளர்நத பிறகு, 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.

பூச்சிகளுக்குக் கவர்ச்சிப் பொறிகள்!

7-ம் நாளுக்கு மேல் செடிகள் துளிர்த்து வளரும். 15 –ம் நாள் முதல் களை எடுத்து 3 லிட்டர் பஞ்சகவ்யாவை 150 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 30-ம் நாள் இரண்டாம் களை எடுத்து, 6 லிட்டர் பஞ்சகவ்யாவை 300 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
அன்றைக்கே 250 கிலோ மண்புழு உரம், 50 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, தலா 2 கிலோ டிரைக்கோ டெர்மா விரிடி, பாஸ்போ – பாக்டீரியா, அசோஸ்பைரில்லம் ஆகியவற்றை ஒன்றாக் கலந்து நிலத்தில் தூவி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 30 நாளுக்குப் பிறகு, காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் பச்சை வண்ணப் பொறியை 12 இடங்களில் அமைக்க வேண்டும். அறுவடை முடியும் வரை இந்தப் பொறிகள் வயலில் இருக்க வேண்டும். 40-ம் நாள் 500 மில்லி புங்கன் எண்ணெய், 500 மில்லி வேப்பெண்ணெய், 250 மில்லி இலுப்பை எண்ணெய் 100 கிராம் காதி சோப் ஆகியவற்றை 150 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 45-ம் நாள் மூன்றாவதாக களை எடுத்து, ஆறு இடங்களில் விளக்குப் பொறிகளை அமைக்க வேண்டும். இவை மற்ற பூச்சிகளைக் கட்டுப்படுத்தி விடும். அறுவடை முடியும் வரை விளக்குப் பொறிகள் வயலில் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

நான்கு பகுதிகளாக பிரித்து அறுவடை!

55 –ம் நாளுக்கு மேல் காய்கள் பறிப்புக்கு வந்து விடும். தொடர்ந்து ஆறு மாதங்கள் வரை பறிக்கலாம். மொத்த மகசூல் முடிந்த பிறகு, செடிகளை வேரோடு பறித்து நிலத்தில் போட்டு உழுது, மீண்டும் சாகுபடியைத் தொடங்கலாம்.

1 லட்சம் ரூபாய் லாபம்!

கத்தரிக்காய் நன்றாக காய்க்கத் தொடங்கினால் நான்கு நாளைக்கு ஒருமுறை  காய் பறிக்கலாம். முதல் மாதம் ஒவ்வொரு பறிப்புக்கும் சராசரியாக 60 கிலோவும், இரண்டாவது மாதத்தில் ஒவ்வொரு பறிப்புக்கும் 120 கிலோவும் மகசூலாக கிடைத்தது. மூன்றாவது மாதத்திலிருந்து ஒரு பறிப்புக்கு சராசரியாக 500 கிலோவிற்கு  குறையாமல் கிடைத்தது. ஆகக்கூடி மூன்று மாதம் காய் பறித்ததில் சுமார் 4,500 கிலோ வரைக்கும் காய் கிடைத்திருக்கு. கத்தரிக்காயைப் பொறுத்த அளவில் தொடக்கத்தில் மகசூல் கம்மியாக இருக்கும். போகப் போக அதிகரிக்கும்.
இன்னும் மூன்று மாதம் வரைக்கும் தொடர்ந்து காய் பறிக்கலாம். அந்த வகையில், பறிப்புக்கு 500 கிலோ வீதம் மொத்தம் 90 நாளைக்கு 22 பறிப்பு. இதன் மூலமாக 11 டன் மகசூல் கிடைக்கும். கிலோவுக்கு சராசரியாக 9 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. மொத்த மகசூல் 15.5 டன் கிடைக்கும். 1 லட்சத்தில் 39 ஆயிரம் ரூபாய் வருமானமாக கிடைக்கும். எல்லாச் செலவும் போக, ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாய் லாபம் கிடைக்கும் .

ஒரு ஏக்கரில் இயற்கை முறையில் நாட்டுக் கத்திரி ரகங்களை சாகுபடி செய்ய யோகநாதன் சொல்லும் செலவு – வரவுக் கணக்கு

விவரம்

செலவு

வரவு

நாற்று உற்பத்தி

1,000

 

உழவு

1,400

 

தொழுவுரம்

2,500

 

பாத்தி

250

 

நடவு

750

 

களை

4,500

 

இடுபொருட்கள்

2,800

 

கவர்ச்சிப் பொறிகள்

750

 

பறிப்புக் கூலி

4,500

 

போக்குவரத்து, கமிஷன்

5,400

 

4,500 கிலோ காய் விற்பனை மூலம் வரவு

 

40,500

மொத்தம்

23,850

40,500

நிகர லாபம்

 

16,650

குறிப்பு : 16,650 ரூபாய் என்பது மூன்று மாதங்களில் கிடைத்த லாபம். மிச்சமிருக்கும் மூன்று மாதங்களில் இன்னும் 11,000 கிலோ மகசூல் எதிர்பார்க்கிறார் யோகநாதன். “இதன் மூலமாக 99,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இடுபொருட்கள், போக்குவரத்து, கமிஷன் செலவுகள் 15,000 ரூபாய் போக, மீதி 84,000 ரூபாய் லாபமாக கிடைக்கும். ஏற்கனவே கிடைத்த 16,650 ரூபாயையும் சேர்த்தால்.. கிட்டதட்ட 1 லட்ச ரூபாய் கிடைக்கும்.

 
தொடர்புக்கு :
யோகநாதன், அலைபேசி : 94428 – 16863
ஆதாரம் : www.vikatan.com பசுமை விகடன் வெளியிடான தேதி, 25.7.11

 
   

திருந்திய நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
   
   
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
   
   

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

   
   

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள் /=

     

வல்லுனரை கேளுங்கள்