த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: பெண்களும் விவசாயமும்
வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களில் பெண்களின் பங்கு

முன்னுரை

வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களான பயிர் உற்பத்தி, கால்நடை உற்பத்தி, தோட்டக்கலை, அறுவடைக்குப்பின்சார் தொழில்கள், வேளாண் / சமூக வனவியல், மீன்வளம் ஆகியவற்றில் பெண்களின் பங்கு முக்கியம் வாயந்ததும் குரிப்பிடத்தக்கதுமாய் விளங்கப்படுகின்றது. வேளாண்மையில் பெண்களின் பங்கு ஒவ்வொரு பகுதிக்கும் வேறுபடுகின்றது. ஒவ்வொரு பகுதிக்குள்ளும் இவர்களின் பங்கு சுற்றுச்சூழல் துணை மண்டலங்கள், விவசாய முறைகள், சாதிகள், வகுப்புகள் மற்றும் குடும்ப சுழற்சியின் நிலைகளுக்குத் தகுந்தவாறு வேறுபடுகின்றது.ஆனால், இந்த வேறுபாடுகள் இருந்தபோதிலும் பெண்கள் பல்வேறு விவசாய நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். ‘விவசாயத்தில் பெண்கள்’ என்கிற தலைப்பில் இந்தியா மற்றும் இதர வளர்ந்துவரும் நாடுகள், வளர்ச்சிக் குன்றிய நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வில் விவசாயத்தில் பெண்களில் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது என்று அறியப்படுகின்றது. இதில் பெண்களின் முக்கிய அங்கீகாரமான மனைவி, தாய்மை மற்றும் இல்லத்தரசி ஆகியவற்றிலும் சரிசமமாக பங்களிக்கின்றனர் என்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.

முக்கிய வேளாண்மைத் தொழில்களான களையெடுத்தல், புல் வெட்டுதல், பருத்தி குச்சி சேகரித்தல், நாரிலிருந்து விதைகளைப் பிரிப்பது ஆகியவற்றில் கிராமப்புற பெண்கள் தீவிரமாக செயல்படுகின்றனர். மரக்கட்டைகளை சேகரிக்கும் தொழிலைக்கூட பெண்கள் செய்கின்றனர். சேகரித்த மரக்கட்டைகளை சமைப்பதற்கு தேவையான எரிபொருளாகப் பயன்படுத்துகின்றனர். மக்கள் தொகை பெருக்கம், அதிகமான மேய்ச்சல் மற்றும் பாலைவனமாக்குதல் ஆகியவற்றின் காரணங்களால் மரக்கட்டைகளை சேகரிப்பதற்கு பெண்களுக்கு சிரமமாக உள்ளது. கிராமப்புரப் பகுதிகளில் சுத்தமான குடிநீர் கிடைப்பது மிகப்பெரியப் பிரச்சனையாக உள்ளது. மரக்கட்டைகளை சேகரிப்பது மற்றும் தொலைதூரத்திலிருந்து தண்ணீரைக் கொண்டு வருவது ஆகியவை பெண்களின் கடமையாக உள்ளது. ஒரு கிராமப்புரப் பெண், விவசாயத் தொழில்களுக்கும், கால்நடைகளைப் பராமரிப்பதற்கும், இதர தொழில்களான பால் கரத்தல், பால் பதப்படுத்துதல் மற்றும் நெய் தயாரித்தல் ஆகியவற்றையும் செய்ய வேண்டியுள்ளது.    
 
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016