Agriculture
வேளாண்மை :: நார் பயிர்கள்

இறவை பருத்தி

மானாவாரி பருத்தி

நெல்லுடன் பயிர் சுழற்சி முறையில் பருத்தி

நெல்லுடன் பயிர் சுழற்சி முறையில் பருத்தி
http://agritech.tnau.ac.in/agriculture/agri_cropproduction_fibre_ricefallowcotton_clip_image002.jpgநிலச்செயற்பாடு மேலாண்மை

1.நிலம்  தயார் செய்தல்
மண் மெழுகு நிலையில் இருந்தால், பூஜ்ய உழவுக்கு பதிலாக, விதை வரிசைகளை மட்டும் உழுது விதைகளை விதைக்கும் முறை விருதுநகர் மாவட்டத்தில்  செயல்பாட்டில் உள்ளது.
மண் உலர்ந்திருந்தால் மற்றும் விதைப்பதற்கு ஏற்ற நிலையில் இல்லாமல் இருந்தால், தண்ணீர் ஊற்றி, மண் காய்ந்து, மெழுகு நிலைக்கு வரும் வரை காத்திருக்க வேண்டும்.
வயலின் கீழ் மட்டத்தில் 15 செ.மீ அகலத்திற்குக் குழி தோண்டி மற்றும் அதிகமான நீரை வெளியேற்ற வெளியில் ஒரு பாதையை அமைக்க வேண்டும்.


2.அமிலம் மூலம் பஞ்சு நீக்கிய விதைகளைப் பூஞ்சாணம் கொண்டு விதை முன் நேர்த்தி செய்தல்

  • பாசன பயிருக்கு மாதிரியே.
  • அமில நீக்கிய மற்றும் பூஞ்சாண விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளுடன் அசோஸ்பைரில்லம் 3 பாக்கெட் (600 கிராம்) விதை நேர்த்தி செய்து உடனடியாக விதைக்க வேண்டும்.

3.விதைகளை விதைத்தல்

விபரங்கள்

எம்.சி.யு.7

எஸ’.வி.பி.ஆர். 3

  • விதை அளவு(கிலோகிராம்/ )

1) பஞ்சுடைய விதைகள்

15

15

2) பஞ்சு நீக்கிய விதைகள்

7.5

7.5

  • இடைவெளி செ.மீ.

 

 

வரிசைகளுக்கு இடையில்

60

60 அல்லது 75*

தாவரங்களுக்கு இடையில்

30

30

  • விதைகளின் எண்ணிக்கை / குழி

பஞ்சுடைய விதைகள்

4

4

பஞ்சு நீக்கிய விதைகள்

2

2

விதைக்கும் ஆழம்(செ.மீ.)

3

3

*வளமான நிலங்களில்  


4. இடைவெளிகளை நிரப்புதல்

  • விதைத்த 10 ஆம் நாளில் இடைவெளிகளை நிரப்புதல்.
  • எம்.சி.யு. 7 மற்றும் எஸ்.வி.பி.ஆர்.3 விதைகளில் பஞ்சு நீக்கிய விதைகள் 2 லிருந்து 3 வரையும், பஞ்சுடைய விதைகள் 4 லிருந்து 5 வரையும் இடைவெளிகளில் ஊன்ற வேண்டும்.

5. நாற்றுகளைக் கலைத்தல்

  • விதைத்த 20 நாளில் நாற்றுகளின் அடர்வைக் குறைத்தல்.
  • குத்து ஒன்றுக்கு மட்டும் ஒரு ஆரோக்கியமான மற்றும் நல்ல வீரியமான நாற்றை விட வேண்டும் .

6. களை மேலாண்மை

  • முன் தேவைப்  பயன்பாடாக பென்டிமெத்திலின் 3.3 லிட்டர் / எக்டருக்குப் பயன்படுத்தினால் 40 நாட்களுக்குக் களை வராமல் இருக்கும். 40 லிருந்து 45 வது நாளில்  ஒரு கைக்களை மற்றும் மண் அணைத்தல் செய்ய வேண்டும்.
  • விதைப்பு செய்த 20 நாட்களுக்குப் பிறகு களை கொத்தி  மற்றும் களை எடுத்தல் வேண்டும்.
  • மேல் மண் காய்ந்து சரியான நிலையில் வரும் போது இந்த செயலை மேற்கொள்ள  வேண்டும்.

7.உரங்களின் பயன்பாடு

  •  மண் பரிசோதனை மூலம் தழை, மணி, சாம்பல்சத்து உரங்களை அளிக்க வேண்டும். மண் பரிசோதனை செய்யவில்லை என்றால், எக்டருக்கு / 60:30:30 கிலோ தழை, மணி, சாம்பல்சத்து பரிந்துரையின் படி இட வேண்டும்.
  •  தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து பாதி அளவையும், P5O5 முழு அளவையும் பழைய டெல்டா பகுதியில்35 வது நாளிலும் மீதியை 55 வது நாளிலும், பருத்தி தாவரங்களின் வரிசையில் இட வேண்டும்.  புதிய டெல்டா பகுதியில் முழு மணிச்சத்து தழைச்சத்தில் 3 ல் ஒரு பங்கு மற்றும் சாம்பல் சத்து விதைத்த 20 நாட்களுக்குப் பிறகும் மற்றும் 2/3 பங்கு தழைச்சத்தும் மற்றும் சாம்பல் சத்தும் விதைத்த 40 நாட்களுக்குப் பிறகு இட வேண்டும்.

8) நுண்ணூட்டச் சத்தின் பயன்பாடு
வேளாண் துறையின் மூலம் தயாரிக்கப்பட்ட 12.5 கிலோ    நுண்ணூட்டக் கலவையை ஒரு எக்டருக்கு இட வேண்டும். சிவப்பாக்குதலைத் தடுக்க எக்டருக்கு 20 கிலோ  மெக்னீசியம் சல்பேட் இட வேண்டும்.


9) பார் உருவாக்கம்
பழைய டெல்டா
மண் நல்ல நிலையில் இருந்தால் மண்வெட்டியால் வரப்புகள் உருவாக்கி மற்றும் செடி விதைத்த 30 ல் இருந்து 35 வது நாளில் செடிகளைச்  சுற்றி  உரம் இடுதல் வேண்டும்.
மண் நல்ல நிலையில் இல்லை என்றால் களையெடுத்து உரங்களைப் போட வேண்டும்.
தண்ணீர் அதிக நேரம் ஊறுவதைத் தடுக்க , இடைவெளி இன்றி நீண்ட பார்களை ஒரு முனையில் இருந்து நிலத்தின் மறுமுனை வரை அமைக்க வேண்டும்.
செடிகளின் மாற்று வரிசையில் பார் மற்றும் வரப்புகளை உருவாக்க  வேண்டும். மிகை நீர்ப்பாசனம் தடுக்க வரப்ப முறைப் பாசனத்தை விடுதல் வேண்டும்.

புதிய காவிரி டெல்டா
1. விதைத்த 40 வது நாளில், தாவரங்களைச் சுற்றி மண் உரம் இட்டு மண்வெட்டியால் பார்கள் அமைக்க வேண்டும்.
2. மண் நல்ல நிலையில் இல்லை என்றால் களையெடுத்து உரங்களை இட வேண்டும்.
3. நீண்ட பார்களில் மற்றும் வரப்புகளில் செடிகளை மாற்றுச்செடி வரிசையில் அமைத்து வரப்புப் பாசன முறையை தவிர்க்க வேண்டும்.
குறிப்பு: துத்தநாகம் குறைவாக உள்ள மண் எனில், 50 கிராம் அளவிற்கு துத்தநாக சல்பேட் / எக்டருக்கு சேர்க்க வேண்டும்.


10) நாஃப்தலின் அசிட்டிக் அமிலம் இடும் விதம்
இந்த நாஃப்தலின் அசிட்டிக் அமிலத்தை  40 பி.பி.எம். தெளித்து 40 மில்லி கிராம் நாஃப்தலின் அசிட்டிக் அமிலத்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்து 40அல்லது 45 வது நாளில் தெளிக்க வேண்டும். 15 நாட்களுக்குப் பிறகு அதே அளவு மீண்டும் தெளிக்க வேண்டும்.


11) நுனி கிள்ளுதல்
நுனி வளர்ச்சியை கட்டுப்படுத்த, 15 வது கணுவைக் கிள்ளி விடுவதால்  தாவர வளர்ச்சியைக்  கட்டுப்படுத்தலாம் (விதைத்த  70லிருந்து 75 நாட்களுக்குப்பிறகு).

12. நீர் மேலாண்மை
பயிர்கள் வளர்ச்சிப் படி பாசன முறைப்படுத்துதல்


நிலைகள்

நீர்ப்பாசன
எண்ணிக்கை

விதைகள் விதைத்த நாட்களுக்குப் பிறகு

 

 

பழைய டெல்டா

புதிய டெல்டா

இலைப்பகுதி

முளைக்கும் பருவத்தில் பாசனத்தை முறைப்படுத்துதல்

 

 

 

1.

 

 

30 வது நாளில் நனைத்தல்

20 வது நாளில் ஒரு பாசனம்

விதைத்த 35 வது நாளுக்குப் பிறகு

உரம் இட்ட பிறகு

உரங்களின் பயன்பாடு

 

2.

-

தழைச்சத்து இட்ட பிறகு 40 வது நாளில் ஒரு பாசனம்

2. பூக்கும் பருவம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

1

 

விதைத்த 45 நாட்களுக்குப் பிறகு

45 வது நாள்

2 வது முறை தழைச்சத்து இடல்

 

2

55 வது நாள்

51 வது நாள்

3

65 வது நாள்

56 வது நாள்

4

75 வது நாள்

61 வது நாள்

5

85 வது நாள்

66 வது நாள்

6

-

71 வது நாள்

7

-

76 வது நாள்

8

-

81 வது நாள்

9

-

86 வது நாள்

10

-

91 வது நாள்

11

99 வது நாள்

98 வது நாள்

12

113 வது நாள்

105 வது நாள்

13

-

112 வது நாள்

113 வது நாளில் இருந்து பாசனத்தை நிறுத்த வேண்டும்.
குறிப்பு : 1) மேலே கொடுக்கப்பட்ட பாசனத் திட்டம் வழிகாட்டி மற்றும் நிலவும் வானிலை மற்றும் மழையைப் பொறுத்துப் பாசனத்தைக் கட்டுப்படுத்தல்.
2) பயிரைக் கவனித்து மற்றும் செடிகளைக் கவனித்து மதியம் மற்றும் மாலை நேரங்களில் பலவீனமாகவும் அறிகுறிகள் இருந்தால், ஒரு கூடுதல் பாசனத்தை மாலை நேரங்களில் கொடுக்க வேண்டும்.


13. அறுவடை : பாசனப் பருத்திக்குப்  போலவே.

14. அறுவடைக்குப்பின் செயல்பாடுகள்:
பாசனப் பருத்திக்குப்  போலவே.

15. பூச்சி மற்றும் நோய் மேலாண்மை: பாசனப் பருத்திக்குப்  போலவே.


ஆதாரம்
www.cicr.nic.in
www.geocities.com/civilwarstudy101/cotton

 

முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015

Fodder Cholam