|| | ||||
 

எங்களைப் பற்றி::கல்லூரி::வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிகுளம்

       

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிகுளம்

இந்த கல்லூரியானது, தூத்துக்குடி மாவட்டத்தில் சமதளப்பரப்பில் வளநாடு மலையின் கீழ் அமைந்துள்ளது. இது 8.46’ வட அட்சரேகை மற்றும் 77.420 கிழக்கு தீர்க்க ரேகையிலும், கடல் மட்டத்திலிருந்து 40 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளது. இந்த கல்லூரியானது NH 7A, சாலை மார்க்கமான திருநெல்வேலி - தூத்துக்குடி சாலையில், திருநெல்பேலி இரயில் நிலையத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் மற்றும் வளநாட்டிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு குறைந்த பட்ச 210 C வெப்பநிலையும் அதிகபட்சம்  370 C வெப்பநிலையிலும், மித வெப்ப மண்டல பகுதியில், 786 மி.மீ மழையளவு கிடைக்கிறது. இந்த வளாகத்தில் நன்செய் நிலம் களிமண் நிலத்திலும், புன்செய் நிலம் மணல் கலந்த மண் வகையிலும் உள்ளது. தரிசு நிலத்தில் செம்மணல் கலந்த மண்ணே பெரும் பகுதியைக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இணைந்த மூன்றாவது கல்லூரியாக உருவானது. திருநெல்வேலி பேட்டை பகுதியில் முதன் முதலில் எம்டிடி ஹந்து கல்லூரியின் வாடகைப் பகுதியில் ஆரம்பித்தது. 1986 - 87 ஆம் ஆண்டில், கிள்ளிகுளம் மாநில விதைப் பண்ணையிலிருந்து நிலமும் கட்டிடம் கிடைத்தபின் பகுதி கல்விச் செயல்பாடு மாற்றப்பட்டது.

விவசாய சமூகத்திற்கு பங்காற்றல்

பயிர் மேம்பாடு

வெளியிடப்பட்ட இரகங்கள்

கே.கே.எம் : 1 கத்தரி

1994 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, இந்திய அரசால் 15 ஆண்டுகளுக்கு அங்கீகரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. இது குளத்தூர் நாட்டு இரகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டு, வெள்ளை நிறக் காய்களாகவும், நாட்டு இரகத்தை விட 21% அதிக மகசூல் தரக்கூடியதும் ஆகும். இது மானாவாரி மற்றும் இறவைக்கு ஏற்றது. இதில் 100 கிராமிற்கு 9 மில்லிகிராம் அஸ்கார்பிக் அமிலம் கொண்டதும் 135 நாள் வயதுடையதும் 37டன் ஹெக்டருக்கு மகசூல் தரவல்லது. இந்த இரகம், இப்பகுதிக்கு மிகவும் பிரசித்தியமானது மற்றும் தரமான விதை கொடுக்க, அதிக அளவில் விதை உற்பத்தி செய்யப்படுகிறது.

கே.கே.எம்:1 : கம்பு நேப்பியர்

இந்த வீரிய புல்லானது 2000 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இது ஐ.பி 15507 ஐப்.டி 429 - லிருந்து உருவாக்கப்பட்டது. கோ.3 ஐ விட இது 50% சதவீதம் அதிக மகசூல் தரவல்லதும், 288 டன்/ஹெக்டருக்கு சராசரி பச்சை புல் ஆண்டுக்கு மகசூலாக கிடைக்க கூடியதும் ஆகும். இது அதிக சுண்ணாம்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் சத்தும் மிகவும் குறைந்த ஆக்சலேட் உடையதும் ஆகும்.

கே.கே.எம்:1: சென்னா

(இது 2001 ஆம் ஆண்டு), தென்கலம் நாட்டு இரகத்திலிருந்து தேர்ந்தெடுத்து இது 2001 ஆம் ஆண்டு - வெளியிடப்பட்ட இரகமாகும். இது அதிக மகசூலான 900கிலோ/ஹெக்டர் - காய்ந்த இலை கொடுக்க வல்லதும், மானாவாரிக்கு ஏற்றதும் 2.5 சதவீதம் சென்னோசைட் கொண்டதும் ஆகும்.

சோதனையில் உள்ள இரகம்

ஏ சி கே 198 நெல்

இது பிசானம் பருவத்திற்கு ஏற்ற இரகமாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் சராசரி மகசூல் 5853 கிலோ/ ஹெக்டர், வயது 125 நாள் ஆகும். இது 11 சதவீதம் சாதாரண இரகத்தை விட அதிக மகசூல் தரவல்லது. இது கொள்ளை நோய், துங்ரோ நோய், தண்டு துளைப்பான் மற்றும் பழுப்பு நிற இலைத்தத்துப்பூச்சிக்கு மிதமான எதிர்ப்புத்திறன் கொண்ட இரகமாகும்.

பயிர் மேலாண்மை

  • 2003 ஆம் ஆண்டில் தாமிரபரணி பகுதியில், நெல் சாகுபடியானது ‘திருந்திய நெல் சாகுபடி ’ முறையில் செய்ய அறிமுகப்படுத்தப்பட்டது.
  • தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் நெல்-நெல்-பயிறுவகை/எள் பயிர் முறையோடு கோழி வளர்ப்பு, மீன்வளர்ப்பு சேர்ந்து தன்னிறைவு விவசாயமாக செய்யப்பட்டது.
  • நடவு செய்வதற்கு நல்ல ஒரு மாற்றாக ‘டிரம்’ விதைப்பான் விதை கொண்டு செய்வதே.
  • நெல்லில் ஈரநெல் விதைத்த பயிருக்கு பிர்டிலக்குளோர்வுடன் சபிநெனர் 0.45 கிலோ/ஹெக்டர் என்ற அளவில் களைக்கொல்லி உபயோகப்படுத்தியும் பின் விதைத்த 25 ஆம் நாளில் கை களையெடுப்பும் 5 செமீ அளவில் விதைத்த 15 நாளிலிருந்து நீர் நிறுத்தி பயிரிடலாம்.
  • தாமிரபரணி ஆற்றுப் பகுதியில், அதிக மகசூல் பெற, அடியுரமாக 5டன்/ஹெக்டர் என்ற அளவில் உயிரிகளால் சிதைக்கபட்ட சாண்கலவை, மணிலா அகத்தியை ஊடுபயிராக பயிரிட்டு 50 சதவீதம் பூக்கும் தருவாயில் மடக்கி அதனுடன் 50 சதவீதம் பரிந்துரைக்கபட்ட தழை, மணி, சாம்பல் சத்து இட வேண்டும்.
  • அம்பாசமுத்திரம் பகுதியில் அலுமினியம் அதிகமாக இருப்பதால், அதிலிருந்து விடுபட சுண்ணாம்பு தூளை இட்டு 19 சதவீதம் நெல்லில் அதிக மகசூல் பெறலாம்.
  • நிலக்கடலையில் பரிந்துரைக்கப்பட்ட மணிச்சத்தை ‘ராக் பாஸ்பேட்’ ஆக இட்டால் 27% அதிக மகசூல் பெறலாம்.
  • ‘தேரை’ நிலத்தில நிலக்கடைலையில் 2 டன் தென்னை நார்ககழிவுடன் 10 டன் குளத்து மண்ணை இட்டால் 11 முதல் 19 சதவீதம் வரை கூடுதல் மகசூல் பெற முடியும்.
  • உளுந்து பயிரை ‘பிளிச்சிங் தூள்’ 2 கிராம்/கிலோ அல்லது அயோடின் தூள் 100 மில்லிகிராம்/ கிலோவுடன் கால்சியம் கார்பனேட் என்ற அளவில் கலந்து வைத்து விதையானது உயிர்த்தன்மையுடன், நல்ல முளைப்புத்திறனுடனும் இருக்கும். அதை 25X20 செ.மீ என்ற அளவில் பார்சால் அமைத்து பயிரிட்டால அதிக மகசூல் கிடைக்கும்.
  • நெல் ‘சைனோ பாக்டீரியா’ என்ற பாசியை 10கிலோ/ஹெக்டேர் என்ற அளவில் இட்டால் 15% அதிக மகசூல் பெறலாம்.

பயிர் பாதுகாப்பு:

  • நெல்லில் கதிர் நாவாய் பூச்சியை மேலாண்மை செய்ய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஏ சி கே 10 தூளை இடலாம்.
  • தென்னையில் ‘எரியோபைட்’ சிலந்தியைக் கட்டுப்படுத்த (31-85 சதவீதம் எண்ணிக்கையைக் குறைக்க) 400 - 600 கிராம் என்ற அளவில் போராக்ஸ் மருந்தை ஒவ்வொரு மரத்திற்கும் இடவேண்டும்.
  • ‘லிபிடோப்டிரன்’ பூச்சி மற்றும் ‘டிப்டிரன்’ பூச்சியைக் கட்டுப்படுத்த (31-85 சதவீதம் எண்ணிக்கையைக் குறைக்க) 400- 600கிராம் என்ற அளவில் போராக்ஸ் மருந்தை ஒவ்வொரு மாதத்திற்கும் இடவேண்டும்.
  • ‘லிபிடோப்டிரன்’ பூச்சி மற்றும் ‘டிப்டிரன்’ பூச்சியைப் பிடிக்க, பொறிக்கு பதிலாக இனக்கவர்ச்சி பொறியை பயன்படுத்தினால் நல்ல பலம் தரும்.
  • தேக்கு மரத்தின் இலை உண்ணும் புழுவைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையைக் கடைப்பிடிக்கலாம்.
  • இரவில் உண்ணும் பூச்சியைக் கண்காணிக்க உணவு பொறிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • மல்லி மற்றும் எள் பயிரில் வாடல் மற்றும் வேர் நோயைக் கட்டப்படுத்த ‘கார்பென்டைசிம்’ ஐ விட விதை நேர்த்தி செய்ய ‘டிரைகோடெர்மா ஹர்சியானம்’ மற்றும் ‘சூடோமோனாஸ் ப்ளுரேசன்ஸ்’ பயன்படுத்தினால் நன்று கட்டுப்படுத்தலாம்.
  • நெல், நெல்மணிகள் நிறம் மாறிபோகும் நோய்க்கு, ‘சூடோமோனஸ் ஃப்ளுரேசன்ஸ்’ ஐ 0.2% உபயோகித்தால் நன்கு திறம்படக் கட்டுப்படுத்தும்.

தோட்டக்கலை:

  • வாழையில் இலை உற்பத்திக்கு மட்டும் என்ற போது வயல் வாழையை 90X90 செ.மீ இடைவெளியிலும் சாக்கை வாழையை 150X150 செ.மீ இடைவெளியிலும் நட்டு ஒரு மரத்திற்கு 164 கிராம் தழைச்சத்தை, நட்ட 3,5,7 ஆம் மாதத்தில் இட்டும். மணிச்சத்து 35 கிராமுக்கு சாம்பல்சத்தை 330 கிராம்/ மரம் என்ற விகிதத்தில் இடவேண்டும்.
  • தமிழ்நாட்டின் அரசு மரமான பனைமரம், வறட்சியை நன்கு தாங்கி வளரக்கூடியதும், தரம் குறைந்த மற்றும் தரிசு நிலங்களிலும் பயிரிடப்படுகிறது. மொத்தம் இந்தியாவில் 80 மில்லியன் மரங்களும், தமிழ்நாட்டில் 50 மில்லியன் மரங்களும் வளர்க்கப்படுகின்றன.
  • இந்த நிலையானது, பனைமரங்களின் தாய் விதைகளை சேகரித்து பாதுகாக்கும் மையமாகும். இதில் 223 குட்டை மரங்களை சேகரித்த பயிரிடப்பட்டுள்ளது. இவை ‘நீரா’ மற்றும் ‘நுங்கு’ பயன்பாட்டிற்கு உகந்தது. இதில் பி.எப் 34, என்ற இனத்திலிருந்து 280 லிட்டர்/ஆண்டு என்ற அளவில் 77 நாட்களில் ‘நீரா’ கிடைக்கிறது.
  • மர விதையை உடனே விதைத்தால் 51% முளைப்புத்திறன் தான் கிடைக்கும். ஆனால் அதை 30 நாள் நிழலில் வைத்திருந்து பின் விதைத்தால் 79% முளைப்பு இருக்கும்.
  • இதை இலை புள்ளி மற்றும் இலை வெளிர்தல் என்ற இரு நோய்களும், இலை உண்ணும் புழுவும் சேதத்தை உண்டாக்கும்.
  • பனைமரத்திலிருந்து கிடைக்கும் ‘நுங்கு’ லிருந்து, ‘கேன்பு’, ‘பீடா’ போன்றவையும், பனங்கிழங்கிலிருந்து மாவு தயாரித்து அல்வா, லட்டு, கேசரி, உப்புமா, பாயாசம் மற்றும் இட்லி தயாரிக்கவும் பயன்படுத்தி அதிக லாபம் அடையலாம்.
  • மா இரகங்களில்/ வீரிய ஒட்டு வகைகளில் 31 வகை சேகரிக்கப்பட்டு உள்ளது.
  • மாவில், பூக்காத மற்ற தருணத்தில் பூக்க வைக்க ‘பால்கோபூட்ரசால்’ என்ற மருந்தை 5 கிராம் மருந்து கலவை/ மரம் என்ற விகிதத்தில் இட்டால், பூக்க ஆரம்பிக்கும்.
  • மருந்து கத்தரி செடியில் 60 : 20 : 40 கிலோ/ஹெக்டர் என்ற அளவில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை இடுதல், 1X1.5 மீட்டர் இடைவெளியில் நடுதல் போன்றவைகளால் மகசூல் 1323.06 கிராம்/செடி என்ற அளவில் 5.87 டன்/ஹெக் என்று கிடைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
  • தூதுவளை செடியில் 125 : 60 : 40 கிலோ/ ஹெக்டேர் என்ற அளவில் தழை, மணி சாம்பல் சத்துக்களை இடுதல், 2X2 மீட்டர் இடைவெளியில் நடுதல் போன்றவைகளால் செடி நன்கு வளர்ந்து இலை மகசூலாக 41.13 கி/செடி என்ற அளவிலும் பழ மகசூலாக 97.73 கி/ செடி என்ற அளவிலும் கிடைக்கிறது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
 
   

திருந்திய நெல் சாகுபடி 
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
 
 
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
 
 

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

 
 

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

   

வல்லுனரை கேளுங்கள்

 
     
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-10