முதுநிலை பட்டைய படிப்பு திட்டம்
விண்ணப்ப கட்டணம்
- நேரில் ரூ. 250
- தபாலில் ரூ. 300
விண்ணப்ப கட்டணத்தை ‘இயக்குனர், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி’ என்ற முகவரியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக கிழை SBl,கோயமுத்தூர் – 641003 வங்கியில் செலுத்தும் வகையில் வரைவோலை கீழ்காணும் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.
இயக்குனர்
திறந்தவெளி மற்றும் தொலைதூரக்கல்வி இயக்கம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,
கோவை – 641003
தொலைப்பேசி: 0422 – 6611229, 6611429
வலைதளம்: www.tnauodl.com
பயிற்சி வகுப்புகள்
உணவு உயிரித் தொழில்நுட்ப முதுநிலை பட்டைய படிப்பு
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,கோவையில் 1990 ல் பயிர் மூலக்கூற்று உயிரியல் மையம் தனி இயக்கமாக நிருவப்பட்டது. பயிர் மூலக்கூற்று உயிரியல் துறை முந்தைய மரபியல் மையத்தின் ஒரு பிரிவாக 1988 ல் நிருவப்பட்டது.1990 ல் பயிர் மூலக்கூற்று உயிரியல் மையத்தின் கீழ் தனிப்பட்ட துறையாக்கப்பட்டது.1998 ல் இருந்து உயிரித் தொழில்நுட்பத் துறை M.Sc. உயிரித் தொழில்நுட்ப பாடத்திட்டம் வழங்கி வருகின்றது மற்றும் 2004 ல் இருந்து M.Sc. உயிரித் தகவலியல் வழங்கி வருகின்றது.மக்களின் தேவைக்கேற்ப மாறுபட்ட பயிற்சிகளை இத்துறை வழங்கி வருகின்றது.சாதாரன மனிதனிடம் உயிரித் தொழில்நுட்ப பயன்களை எடுத்து செல்ல உணவு உயிரித் தொழில்நுட்ப முதுநிலை பட்டைய படிப்பு திரந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி மூலம் இத்துறை வழங்கி வருகின்றது.
2.உணவு உயிரித் தொழில்நுட்ப முதுநிலை பட்டைய படிப்பு
உணவு உயிரித் தொழில்நுட்ப பிரிவில் உள்ள பயில்பவர்களுக்கு தொழில் முனைவோர் வளர்ச்சி மற்றும் வணிக அமைப்பு மேம்பாட்டிற்காக இப்பட்டைய படிப்பு தொடங்கப்பட்டது.
ஒரு வருடம் (இரண்டு பருவங்கள்)
வாழ்வியல் / உயிரிய அறிவியலில் ஏதாவது ஒரு பட்டம்
ஆங்கிலம்
6.திட்டம்
6.1.வழங்கப்படும் பாடங்கள்
முதல் பருவம்: 1. மூலக்கூற்று உயிரியல்
2. உணவு நுண்ணுயிரியல்
3. உணவு மற்றும் உணவூட்டம்சார் வேதியியல்
4. செய்முறை l
இரண்டாம் பருவம்: 5. மரபுப் பொறியியல்
6. உணவு பதனிடுதல்
7. உணவு பதனிடுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் பொருளியல்
8. செய்முறை ll
7. பயில் பொருள்
ஒவ்வொரு பாடத்திற்கு தனி தனி பயில் பொருள் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது.
8.நேரடித் தொடர்பு வகுப்புத் திட்டம்
மாணவர்கள் ஒரு நாளுக்கு 6 மணி நேரங்கள் என்ற வகையில் மாதத்திற்கு இரண்டு நாட்கள் கலந்து கொள்ள வேண்டும். இது பருவத்திற்கு பத்து நாட்களாக கணக்கிடப்படுகின்றது.செயல்முறை மற்றும் பாட வகுப்புக்களின் தனித்தனியே 60% வருகை மாணவர்கள் பெற்றிருக்க வேண்டும்.
9. மதிப்பீடு
இறுதி தேர்வு 3 மணி நேரங்களில் 100 மதிப்பெண்கள் கொண்டதாகும்.மாணவர்கள் இறுதி தேர்வில் தேர்ச்சி பெற ஒவ்வொரு பாடங்களிலும் தனித்தனியே குறைந்தது 50 மதிப்பெண்கள் பெற வேண்டும். இறுதி செய்முறை தேர்வு 6 மணி நேரங்கள் கால அளவில் நடைபெறும்.
10. கட்டண அமைப்பு
பல்கலைக்கழகம் விதிக்கப்பட்டதன் அடிப்படையில் பருவத்திற்கு மற்ற கட்டணத்துடன் ரூ.13,750 வசூலிக்கப்படுகின்றது.
மேலே
மூலிகை தாவரம் உற்பத்தி மற்றும் தரக் கட்டுப்பாடு முதுநிலை பட்டைய படிப்பு
முன்னுரை
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,கோவை,ஊட்டியில் உள்ள JSS மருந்தாக்கவியல் கல்லூரியுடுன் இணைந்து மூலிகை தாவரம் உற்பத்தி மற்றும் தரக் கட்டுப்பாட்டிற்கான முதுநிலை பட்டைய படிப்பு வழங்கி வருகின்றது.இலட்சக்கணக்கான மக்கள் நோய் கட்டுப்பாட்டு சவால்களை எதிர்கொள்ள மூலிகை தாவரங்கள் மற்றும் தர அடிப்படை மதிப்பீடுகள் ஆகியவையின் முக்கியத்துவத்தை உலக சுகாதார நிறுவனம் இணைகின்றது. மூலிகைத் தாவரங்களின் உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டலை ஒருங்கிணைப்பதற்காக தேவைப்படும் மக்களுக்கு தொழில் முனைவோர் வளர்ச்சி மற்றும் கற்பித்தலை இப்பயிற்சி கட்டாயமாக்குகிறது.இதற்கிடையில் உயர் ஆற்றல் கொண்ட அமைப்பு சாரா பிரிவின் பன்பு சார்ந்த மாற்றங்களுக்கான தொழில்நுட்ப ஆற்றலை வெளிகொணர சிறப்பறிவாளர் கருத்துரைகளை பகிர்ந்து கொள்ள JSS மருந்தாக்கவியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இணைந்து செயல்படுகின்றது.
2. மூலிகை தாவரம் உற்பத்தி மற்றும் தரக்கட்டுப்பாட்டு முதுநிலை பட்டைய படிப்பு
மூலிகை தாவர உற்பத்தி முறைகள், தாவர நல இரசாயனம் மற்றும் மருந்து வடிவமைப்பு மற்றும் விற்பனை ஆகியவற்றில் ஆர்வமுள்ள பட்ட தாரிகளுக்காக இப்பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
3.கால அளவு
ஒரு வருடம் (இரண்டு பருவங்கள்).
4.நுழைவு தகுதி
அனைத்து பட்டதாரிகளும்.
5.பயிற்சி மொழி:ஆங்கிலம்
6.திட்டம்
6.1.வழங்கப்படும் பாடங்கள்
முதல் பருவம்: மூலிகை தாவரங்கள் உற்பத்தி சார்ந்த மூன்று பயிற்சிகள்
முதல் பாதி: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வழங்குகின்றது.
- மருத்துவ தோட்டக்கலைக்கான அடிப்படை
- மூலிகை தாவரங்களின் வணிக உற்பத்தி
- மூலிகை தாவரங்களின் நல்ல வேளாண் நடைமுறை
இரண்டாம் பாதி: தர நிர்ணயம், மருந்து வடிவமைத்தல் சார்ந்த 3 பயிற்சிகள் TSS மருந்தாக்கவியல் கல்லூரி, ஊட்டி வழங்குகின்றது.
- மூலிகை தாவரங்களின் பிரித்தெடுத்தல் மற்றும் உளரவைத்தல் தொழில்நுட்பம்
- தாவர வேதிப்பொருட்கள் தனித்திருத்தல் மற்றும் தரபடுத்தல்
- மூலிகை தாவரங்களின் தரக்கட்டுப்பாட்டு நோக்கங்கள்
இரண்டாம் பருவம்
செயல் திட்டம்: மாணவர்கள் இரண்டாம் பருவத்தின் செயல் திட்டத்தை பூர்த்தி செய்ய மருந்து தொழிலகம் / தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் / பன்நாட்டு பதப்படுத்தும் நிறுவனம் போன்றவற்றில் செயல் திட்ட வேலை புறிய வேண்டும்.
7.பயில் பொருட்கள்
அனைத்து மாணவர்களுக்கும் முன்கூட்டியே பயில் பொருட்கள் வழங்கப்படும்.
8.வகுப்பீடு
வகுப்பீடு தேவைகள் அனைத்தும் செயல்திட்ட வேலைகளிலேயே நிறைவேற்றப்படுகின்றது.
9. நேரடித் தொடர்பு வகுப்புத் திட்டம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயிற்சிகள்: செயல்முறை வகுப்புகள் சேர்த்து ஒவ்வொரு பயிற்சிக்கும் நாளுக்கு 6 மணி நேரங்கள் என்ற வகையில் 4 நாட்கள் நடைபெறுகின்றது.3 உற்பத்தி சார்ந்த பயிற்சிகளுக்கு மொத்தமாக 12 நாட்கள் நடைபெறுகின்றது. (முதல் பருவத்தில் இரண்டாம் பகுதியில்).
10. மதிப்பீடு
மாணவர்கள் அளைத்து 6 பயிற்சிகளுக்கு ஒவ்வொரு பயிற்சிக்கும் 3 மணி நேரக் கால அளவு கொண்ட தேர்வுக்கு தோன்றுகின்றனர்.இதில் குறைந்தபட்சம் பயிற்சிக்கு 30 மதிப்பெண்கள் பெற வேண்டும் (பாட வகுப்பு மற்றும் செயல்முறை வகுப்பு உட்பட).தேர்வுகள் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும்.தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் வகுப்பீட்டில் (செயல்திட்டம்) குறைந்தது 50 மதிப்பெண்கள் பெறவேண்டும்.
11. கட்டண அமைப்பு
பல்கலைக்கழகம் விதிக்கப்பட்டதன் அடிப்படையில் பருவத்திற்கு மற்ற கட்டணத்துடன் ரூ.25,000 வசூலிக்கப்படுகின்றது.
மேலே
உயிரித்தகவலியல் முதுநிலை பட்டைய படிப்பு
முன்னுரை
தாவர மூலக்கூற்று உயிரியல் மையம் தனி இயக்கமாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 1990ல் நிருவப்பட்டது.M.Sc உயிரித் தொழில்நுட்ப பயிற்சி திட்டத்துடன் உயிரித் தொழில் நுட்பத்தில் மனிதவள மேம்பாட்டு நடவடிக்கைகளுடன் 1988ல் இருந்து தாவர மூலக்கூற்று உயிரியல் மற்றும் உயிரித் தொழில்நுட்ப துறை இயங்கி வருகின்றது.மாறுபட்ட காலங்களில் உயிரித் தொழில்நுட்பத்தில் B.Tech மற்றும் உயிரித்தகவலியலில் M.Sc ஆகிய திட்டங்கள் தொடங்கப்பட்டன.நடைமுறையில் உள்ள திட்டங்களுடன் உணவு உயிரித் தொழில்நுட்ப முதுநிலை பட்டைய படிப்புத்திட்டத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி முறையில் 2005ல் இருந்து வழங்கப்படுகிறது.இது உயிரித் தகவலியல் முதுநிலை பட்டையப்படிப்பு 2006ல் இருந்து தொடங்கப்பட வழிவகுத்தது.
2. உயிரித் தகவலியல் முதுநிலை பட்டையப்படிப்பு
உயிரித்தகவலியல் அறிவியல்,அதன் பயன்பாடுகள் மற்றும் வணிகத்தில் எதிர்கால வாய்ப்பை வெளிப்படுத்தல் ஆகிய வாய்ப்புக்களை இப்பயிற்சி பட்டதாரிகளுக்கு வழங்குகின்றது.
3. கால அளவு
ஒரு வருடம் (இரண்டு பருவங்கள்)
4. நுழைவு தகுதி
ஏதாவது ஒரு பட்டம் (மானுடவியல் தவிர).
5. பயிற்சி மொழி
ஆங்கிலம்
6.திட்டம்
6.1. வழங்கப்படும் திட்டங்கள்
முதல் பருவம்: 1. மூலக்கூறு உயிரியலின் அறிமுகம்
2. கணினி நிரலாக்கம்
3. உயிரித்தகவலியலுக்கான கணிதம் மற்றும் புள்ளியியல்
4. அடிப்படை மூலக்கூற்று உத்தி, Perl மற்றும் JAVA நிரலாக்கம்
இரண்டாம் பருவம்: 5. மரபணுத் தொகுதிகள் மற்றும் ப்ரோடியோமிக்ஸ்
6. உயிரித்தகவலியல் மற்றும் உயிரியல் தரவுதளம்
7. பெரும் மூலக்கூறுசார் அமைப்புகள்
8. வரிசை முறை பகுப்பாய்வு மற்றும் மூலக்கூறு படிமமாக்கல்
7. பயில் பொருட்கள்
ஒவ்வொரு பயிற்சிக்கும் பயில் பொருள் வழங்கப்படுகின்றது.
8.வகுப்பீடு
செய்முறை வகுப்பு உட்பட அனைத்து பாடங்களுக்கு ஒரு வகுப்பீடு வழங்கப்பட்டு 40 மதிப்பெண்களுக்கு மதிப்பிடப்படும்.
9. நேரடித் தொடர்பு வகுப்புத் திட்டம்
மாணவர்கள் நாளுக்கு 6 மணி நேரங்கள் என்ற வகையில் மாதத்திற்கு இரண்டு நாட்கள் கலந்து கொள்ள வேண்டும். இது பருவத்திற்கு பத்து நாட்களாக கணக்கிடப்படுகின்றது.செயல்முறை மற்றும் பாட வகுப்புகளிள் தனித்தனியே 60% வருகை மாணவர்கள் பெற்றிருக்க வேண்டும்.
10. மதிப்பீடு
இறுதி தேர்வு 3 மணி நேரங்களில் 100 மதிப்பெண்கள் கொண்டதாகும். மாணவர்கள் இறுதி தேர்வில் தேர்ச்சி பெற ஒவ்வொரு பாடங்களிளும் தனித்தனியே குறைந்தது 50 மதிப்பெண்கள் பெற வேண்டும்.இறுதி செயல்முறை தேர்வு 6 மணி நேரங்கள் கால அளவில் நடைபெறும்.
11. கட்டண அமைப்பு
பல்கலைக்கழகம் விதிக்கப்பட்டதன் அடிப்படையில் பருவத்திற்கு மற்ற கட்டணத்துடன் ரூ.25,000 வசூலிக்கப்படுகின்றது. |