|| | ||||
 

எங்களைப் பற்றி :: இயக்ககங்களும் மற்றும் துறைகளும் :: ODL :: தொலைமுறைக் கல்வித் திட்டம்

       

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் ஆங்கிலத்தில்
செயல்திட்ட முன்னேற்றம் உள்ள உழவர்கள் மற்றும் ஊரக கற்போர்கள் ஆகியோர்களுக்கு வேளாண் வணிகத்தில் செயல்நுட்ப அறிவை ஆழப் பதிய வைக்க தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் ஆங்கிலத்தில் வழங்குகின்றது. தமிழ்நாடு மற்றும் மற்ற மாநிலங்களின் ஊரக வேளாண்மையை மேம்படுத்தும் வகையில் இப்பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • நிலத் தோற்றம் மற்றும் அலங்காரப் பூந்தோட்டச் செய்கை
  • நாற்றங்கால் தொழில்நுட்பம்
  • வணிகரீதியான தோட்டக்கலை
  • நவீன களைப்பராமரிப்பு
  • நிலவள மேலாண்மை

நுழைவுத் தகுதி:

  • கல்வி தகுதி               :           ஆறாம் வகுப்பு
  • பயிற்சி மொழி          :           ஆங்கிலம்
  • கால அளவு                :           6 மாதங்கள்
  • பதிவு கட்டணம்        :           ரூ. 3,000 / பயிற்சி
  • வயது                          :           18 வயதிற்கு மேல்

மேற்கூரிய பயிற்சிகளுக்கு ஆங்கிலம் எழுத மற்றும் படிக்க தெரிந்தவர்கள் மட்டுமே பதிவு செய்யப்படுவார்கள்.

  • சான்றிதழ் பயியற்சிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் அருகில் உள்ள பயிற்சி மையத்தில் தெரியப்படுத்த வேண்டும்
  • ஒரு சமயத்தில் ஒரு பயிற்சி மட்டுமே பயில முடியும்
  • சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நேரடித் தொடர்பு வகுப்புக்கள் முன் அறிவிப்பின் பெயரில் வழங்கப்படும்
  • இறுதி நேரடித் தொடர்பு வகுப்பின் போது நடத்தப்பட்டு நான்றிதழ் வழங்கப்படும்
  • கட்டணம் திரும்ப கொடுக்கப்படமாட்டாது
  • பயில் பொருள் முதல் வகுப்பின் போது வழங்கப்படும். உள்ளடக்கம் சுயகற்றல் முறையில் அமைந்திருக்கும்.
  • தொடர்பு கொள்ளும் முகவரி தெளிவாக எழுதியிருக்க வேண்டும்.
  • முகவரியில் மாற்றம் இருப்பின் முன்பே தெரிவிக்க வேண்டும். தொலைபேசி மற்றும் அலைபேசி எண்கள் விரைவு தகவலுக்கு கொடுக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவத்தை ஆங்கிலத்தில் பெற சொடுக்கவும்: - (pdf)
பயிற்சி பாடங்கள்:
நிலத் தோற்றம் மற்றும் அலங்காரப் பூந்தோட்டச் செய்கை:
இச்சான்றிதழ் பயிற்சி பாடம் உள்ளரங்கு மற்றும் வெளிப்புற சூழலுக்கு ஏற்ற தாவரங்களை கண்டறிய பயன்படுகின்றது. நிலத் தோற்ற கொள்கை, பூந்தோட்ட அமைப்பு மற்றும் பூந்தோட்ட சிறப்புக்கூற்றுகள் ஆகியவை இப்பயிற்சி சிறந்த கூறுகளாக மேற்கொள்ளப்படுகின்றது. பூந்தோட்டச் செய்கை பாசனத்தின் முக்கியத்துவம், நீரூற்றின் பயன்பாடு, குட்டைகள், நீர்வீழ்ச்சிகள் ஆகியவைகள் இதில் உள்ளடக்கம். பாறைத் தோட்ட தனிமங்கள் மற்றும் பராமரிப்பு ஆகியவையும் இப்பயிற்சியில் விளக்கப்படுகின்றது.
நாற்றங்கால் தொழில்நுட்பம்:
நாற்றங்கால் பாத்தி செய்முறை விதை நேர்த்தி, மண் மற்றும் மண் தொற்று நீக்கல் ஆகியவைப் பற்றிய தகவல்களை இப்பயிற்சி வகுப்பு தெளிவாக்குகிறது. விதை பெருக்கம், பாலிலாப் பெருக்கம், இடுதல் மற்றும் படுக்கை போன்ற இனப்பெருக்க முறையை இப்பயிற்சி வகுப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. பூச்சிகள் மற்றும் நோய் மேலாண்மை நோக்கில் தாவரத்தின் வெளிப்படுத்தல் மற்றும் பராமரிப்பும் இப்பயிற்சியில் இடம் பெற்றுள்ளது.
வணிகரீதியான தோட்டக்கலை:
அடிப்படை தாவர பெருக்கம் கொள்கை ஊடகம் மற்றும் கருவி தேவைகள் ஆகியவற்றை அடிப்படை வகுப்பு எடுத்துரைக்கின்றது. உள்ளரங்கு தாவரங்கள், நிலத் தோற்ற பூந்தோட்டச் செய்கை, வீட்டுத் தோட்டம், மலர் மற்றும் காய்கறிகளின் விதை உற்பத்தி போன்ற முக்கிய தேவை பிரிவுகள் காய்கறிகளின் விதை உற்பத்தி போன்ற முக்கிய தேவை பிரிவுகள் கற்போர் நலனுக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. விதை உற்பத்தி, மகரந்த சேர்க்கை கட்டுப்பாடு, தொகுப்பு மற்றும் விதை பிரித்தெடுத்தல் உட்பட மலர் மற்றும் காய்கறி பயிர் முறைகள் மற்றும் பதப்படுத்தல் உத்திகளும் இப்பயிற்சியில் வளங்கப்பட்டுள்ளது.
நவீன களைப்பராமரிப்பு:
களைகள் கண்டறிதல், வயல்வெளி ஒருங்கிணைந்த களை மேலாண்மை மற்றும் தோட்டக்கலை சார்ந்த பயிர்கள், சிக்கலான களை, மற்றும் பயிர் வண்டல் மேலாண்மை போன்ற தலைப்புகள் இப்பயிற்சியில் இடம்பெற்றுள்ளது. களை கட்டுப்பாட்டுக்கான களைக்கொல்லி உத்திகளும் இதில் இடம்பெற்றுள்ளது. கற்போரின் நலனுக்காக சிறந்த ஒருங்கிணைத்த களை மேலாண்மையின் கீழ் பல்வேறு களை மேலாண்மை விளக்கப்படுகின்றது. களைக்கொல்லி வண்டல் மேலாண்மை விளக்கப்படுகின்றது. களைக்கொல்லி வண்டல் மேலாண்மை முறைகளும் இப்பயிற்சி வகுப்பில் கலந்துரையாடப்படுகின்றது.
நில வள மேலாண்மை:
நீர் மறுசுழற்சி, உரப்படுத்தல், கரும்பு ஆலைக் கழிவு மற்றும் வேளாண்மை உலைச் சாம்ல் ஆகிய முக்கிய நோக்கங்களை இப்பயிற்சி கொண்டுள்ளது. எரு செய்தல், உத்தி உற்பத்தி முறைகள், சேகரிப்பு மற்றும் எரு பொதியல் ஆகியவையின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கின்றது. பயிர், வண்டல், தேங்காய் நார்க் கழிவு, கரும்பு கழிவு, காகித ஆலைக் கழிவு போன்ற எரு உற்பத்திக்கான மூலப்பொருள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. மேலும் கற்போரின் நலனுக்காக பயிர் உற்பத்திக்கு ஊரக கழிவு மற்றும் உயிரி தடம் ஆகியவையும் விளக்கப்பட்டுள்ளது.

 

 
   

திருந்திய நெல் சாகுபடி 
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
 
 
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
 
 

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

 
 

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

   

வல்லுனரை கேளுங்கள்

 
     
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-10